Published:Updated:

தெரிந்துகொள்வோம்!

தெரிந்துகொள்வோம்!
பிரீமியம் ஸ்டோரி
News
தெரிந்துகொள்வோம்!

அபிஷ்டு

பஞ்ச யக்ஞம்!

தேவ யக்ஞம், பித்ரு யக்ஞம், பூத யக்ஞம், மனுஷ்ய யக்ஞம் மற்றும் பிரம்ம யக்ஞம் ஆகிய ஐந்தும் பஞ்ச யக்ஞங்கள் ஆகும்.

அக்னியில் சமித்துகளை அளிப்பது- தேவ யக்ஞம்; இறந்த முன்னோர்களுக்கு, ஆதரவோடு நீர் அளிப்பது - பித்ரு யக்ஞம்; உயிரினங்களுக்கு உணவு அளிப்பது- பூத யக்ஞம்; வீடு தேடி வருபவர்களுக்கு உணவு அளித்து உபசரிப்பது- மனுஷ்ய யக்ஞம்; வேதம் ஓதுவது- பிரம்ம யக்ஞம் ஆகும். இல்லறத்தில் இருப்பவர்கள், தினமும் இந்த ஐந்தையும் கடைப்பிடிப்பார்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஆலயங்களில் தானம் ஏற்கலாமா?

லயத்தில் ஆண்டவனை வழிபட்டு, அவனை மகிழ்விக்க கொடை வழங்குவது சிறப்பு. அதைப் பெற்றுக் கொள்வதும் சிறப்பு. தானத்தின் வாயிலாக அறம் செயல்படும்போது, ஆண்டவன் மகிழ்கிறான். எனவே, ஒருவர் தானம் அளிக்கும்போது அதைப் பெற்றுக்கொண்டு, அறம் செயல்பட நாமும் ஒத்துழைக்க வேண்டும்.

தற்காலத்தில், வீட்டுக்கு வரவழைத்து கொடை வழங்குவது சாத்தியம் அல்ல. கோயிலில்... இறை திருவுருவங்களின் பார்வையால் பரிசுத்தமாகும் பொருள்கள், கொடையாக மாறுகின்றன. அவற்றை ஏற்பவனும் இறை தரிசனத்தால்- வழிபாட்டால், பரிசுத்தமாகத் தென்படுகிறான். எனவே, அங்கு வழங்கப்படும் கொடை- தானம் சிறப்பு பெறும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தெரிந்துகொள்வோம்!

கால் கழுவும்போது...

ரு காலை, மற்றொரு காலால் தேய்த்து சுத்தம் செய்யக்கூடாது. இதனால் பொருளாதார வீழ்ச்சியும், சுகாதாரக் கேடும் ஏற்படும் என்கிறது தர்மசாஸ்திரம்.

பாதத்தின் அடிப்பகுதியில் உள்ள அழுக்குகள் மற்றொரு காலின் மேல்பாகத்தில் சேர்ந்து விடும். இது, சுகாதாரத்தைக் கெடுக்கும். நம் உடலை, நம் காலால் மிதிக்கக் கூடாது. காலின் மேல் பாகத்தை அடுத்த காலின் பாதத்தால் தேய்ப்பது அபசாரம்.

நடந்து நடந்து அசுத்தத்துடன் இணைந்த காலை, மற்றொரு காலில் வைப்பது தவறு. கைகளைக் கொண்டே சுத்தம் செய்ய வேண்டும். உடலின் வலுவைத் தாங்கிக் கொண்டு நடப்பது கால்கள்தான். அவற்றின் சுகாதாரத்தில் தனிக் கவனம் தேவை. எனவே, தவறான நடைமுறையைத் தவிர்ப்பதே நல்லது