Published:Updated:

மனித நேயம்

சிந்தனை விருந்து
பிரீமியம் ஸ்டோரி
சிந்தனை விருந்து

சிந்தனை விருந்து

மனித நேயம்

சிந்தனை விருந்து

Published:Updated:
சிந்தனை விருந்து
பிரீமியம் ஸ்டோரி
சிந்தனை விருந்து

`மனிதநேயத்தின் மீதான நம்பிக்கையை மட்டும் இழந்துவிடாதீர்கள். மனிதகுலம் சமுத்திரம் போன்றது. அதன் சில துளிகள் அழுக்காகயிருப்பதால், மொத்த சமுத்திரமும் மாசடைந்துவிடுவதில்லை’என்கிறார் மகாத்மா காந்தி. உலகின் அத்தனை நீதி நூல்களும், இறை மார்க்கங்களும் போதிக்கும் அடிப்படைத் தத்துவம் மனிதநேயம் மட்டுமே.

மனித நேயம்


இளங்காலை நேரம். ராமகிருஷ்ண மடம். தோட்டத்தில், அன்னை சாரதாதேவி பூஜைக்காக மலர்களைப் பறித்துக்கொண்டிருந்தார். பக்தர் ஒருவர் அன்னையையே பார்த்துக்கொண்டிருந்தார். மலர்கள் கூடையை நிறைத்தன. பக்தர் வேகமாக அன்னையின் அருகே வந்தார். ``அம்மா, கூடையைக் கொடுங்கள். நான் போய் பூஜையறையில் வைத்துவிடுகிறேன்’’ என்றார்.

அன்னை சாரதாதேவி கூடையை அவரிடம் கொடுத்தார். அவர், மடத்துக்குள் கூடையை எடுத்துக்கொண்டு போனார். அன்னை மெள்ள அங்கிருந்து நகர முயல, இன்னொரு பக்தர் எதிரே வந்து நின்றார்.

கூடையை வாங்கிச் சென்ற பக்தரைக் குறித்து இவர் புகார் வாசித்தார்.

``அவர் அவ்வளவு நல்ல மனிதரில்லை. சதா பொய், பிறரை ஏமாற்றும் சிந்தனை... அதுமட்டு மல்ல, ஒருநாள்கூட அவர் போதைப் பழக்கம் இல்லாமல் இருந்ததில்லை. மிக மோசமானவர். அவரிடமிருந்து விலகியிருப்பதே நல்லது...’’

அன்னை சிரித்தபடி அழுத்தம் திருத்தமாகச் சொன்னார்... ``அது சரியல்ல. இப்படிப்பட்ட குணநலன்கள்கொண்ட ஒருவரை யாருமே அண்டவிட மாட்டார்கள். அவரை நானும் துரத்தியடிப்பது நியாயமா? அவர் நம்முடன்தான் இருப்பார்.’’

ஞானமும் மாண்பும் உள்ள வர்கள் இப்படித்தான் இருப்பார் கள். சக மனிதர்களை நேசிப்பது ஒருபுறமிருக்கட்டும். இன்றைக்குப் பல வீடுகளில் ஒரே வீட்டில் வாழும் தம்பதியரேகூட இணக்கமாக, பரஸ்பர நேசத்தோடு இருக்க முடிவதில்லை என்பதே யதார்த்தமாக இருக்கிறது.

முழு உடல் பரிசோதனை செய்துவிட்டு டாக்டரைப் பார்க்க வந்திருந்தார் அந்த இளம் பெண். ரிப்போர்ட்களை ஆராய்ந்து பார்த்த டாக்டர் சொன்னார்... ``அம்மா, மனசை திடப் படுத்திக்கோ. இன்னும் ஆறு மாசம்தான் நீ உயிர் வாழப்போறே...’’

``ஐயோ, நான் இப்போ என்ன பண்ணட்டும் டாக்டர்?’’

``ஒரு நல்ல அக்கவுன்டன்ட்டா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ.’’

``அப்படி பண்ணிக்கிட்டா நான் ரொம்ப நாள் வாழ்வேனா டாக்டர்?’’

``இல்லை, இல்லை. ரொம்ப நாள் வாழ்ந்த மாதிரி ஒரு ஃபீலிங் கிடைக்கும். அவ்வளவுதான்.’’

திருத்தம்: சென்ற இதழ் சிந்தனை விருந்து பகுதியில் `பாரதமாதாவுக்கு நினைவாலயம் அமையவேண்டும் என்பதே சுப்ரமணிய சிவாவின் கனவு’ என்பதாக தகவல் இடம்பெற்றிருந்தது. `பாரத மாதா ஆலயம்' என்பதே சரி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism