Published:Updated:

வார்த்தைகளே வழிபாடுகள் ஆகும்... எப்படித் தெரியுமா? - சுமதிஸ்ரீ #Video

தினந்தோறும் திருவருள்
தினந்தோறும் திருவருள்

வார்த்தைகளே வழிபாடுகள் ஆகும்... எப்படித் தெரியுமா? - சுமதிஸ்ரீ #Video

பேச்சில்தான் பிரச்னைகள் பலவும் தொடங்குகின்றன. நல்ல சொற்கள் பல இருக்கக் கெட்ட சொற்களைப் பேசுவது ஏன் என்னும் கேள்வியை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே முன்வைத்த வள்ளுவன் ‘இனிய உளவாக இன்னாத கூறல் ஏன்’ என்று கேட்கிறார். நல்ல சொற்கள் அன்பையும் உறவையும் மேம்படுத்த தீய சொற்கள் பகையையும் பிரச்னைகளையும் அதிகரிக்கின்றன. ஆனாலும் அவற்றைப் பேசுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் செல்கின்றன.

“நம் ஆன்மிகம் பேசுகிற சொற்களை இறைவடிவாகவும் சொற்களே வழிபாடுகளாகத் திகழும் ஆற்றல் பெற்றவை என்கிறது” என்கிறார் பேச்சாளர் சுமஸ்ரீ. இதற்கு அவர் திருமூலரைத் துணைக்கு அழைக்கிறார். பொதுவாக ஆன்மிகக் கதைகள், புராணங்கள், பக்தி இலக்கியங்கள் எல்லாம் ஏதோ பழைய விஷயங்கள் என்றும் நவீன கால வாழ்வுக்கும் அதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதைப்போன்ற சிந்தனை சிலரிடம் இருக்கிறது. காரணம் தற்காலத்தில் அவற்றை முறையாக எடுத்துச் சொல்பவர்கள் குறைந்துகொண்டே வருவதுதான்.

திருமூலர்
திருமூலர்

ஆனால் அவற்றில் தற்கால வாழ்வுச் சிக்கலுக்கான தீர்வுகள் பல பொதிந்துள்ளன. அவற்றை முறையாகத் தன் சுவாரஸ்யமான பேச்சில் எடுத்துரைப்பதன் மூலம் பேச்சுலகில் தனித்த இடத்தைப் பெற்றிருப்பவர் பேச்சாளர் சுமதிஸ்ரீ. கம்பன் கழகத்தில் ராமாயணம் பற்றிப் பேசுவதாக இருந்தாலும், எந்தத் தலைப்பிலான பட்டிமன்றங்களில் பேசுவதானாலும் தனக்கான பிரத்யேகத் தன்மையுடன் பேசி உலகம் முழுவதும் உள்ள தமிழ் நெஞ்சங்களில் இடம்பிடித்தவர்.

சுமதிஸ்ரீ - சக்தி விகடனுடன் இணைந்து ‘தினந்தோறும் திருவருள்’ என்னும் தலைப்பில் தன் உரையை நாள்தோறும் வழங்க இருக்கிறார். அதன் முதல் அத்தியாயம் இன்று சக்திவிகடன் யூட்யூப் சேனலில் வெளியாகியுள்ளது. தினமும் மாலை 5 மணிக்கு இந்த நிகழ்ச்சி தவறாமல் ஒளிபரப்பாகும். இன்றைய நிகழ்ச்சியில் ‘வார்த்தைகளே வழிபாடுகள் ஆகும்’ என்னும் தலைப்பில் பேசியிருக்கிறார்.
பேச்சாளர் சுமதிஸ்ரீ
பேச்சாளர் சுமதிஸ்ரீ

பேசும் வார்த்தைகளே வழிபாடு ஆகிவிடும் என்றால் அதை மேற்கொள்ள அனைவருக்கும் என்ன சிக்கல் இருக்கப் போகிறது. பக்தி இல்லாதவர்களும் இதுவரை வழிபாடுகள் செய்து பழக்கப்பட்டிருக்காதவர்களும் இந்த வழிபாட்டைச் செய்யலாம் என்கிறார் சுமதி ஸ்ரீ. விரிவான அவரின் பேச்சைக் கீழ்க்காணும் வீடியோவில் காணுங்கள். சக்திவிகடன் யூட்யூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து தினந்தோறும் திருவருள் நிகழ்ச்சியைத் தவறாமல் பாருங்கள்.

அடுத்த கட்டுரைக்கு