புத்தாண்டு ராசிபலன்கள்!
திருத்தலங்கள்
Published:Updated:

அறிவியல் அறிவோம்!

சிந்தனை விருந்து
பிரீமியம் ஸ்டோரி
News
சிந்தனை விருந்து

சிந்தனை விருந்து

`செல்போன் திரையில் சின்னச் சின்னத் தொடுதல்களில், வங்கிப் பரிவர்த்தனை முதல் வீடியோ கான்ஃபரன்ஸிங் வரை இன்றைக்கு சாத்தியமாகியிருப்பது, நேற்றைய அறிவியல் கண்டுபிடிப்புகளால்தான்.

சிந்தனை விருந்து
சிந்தனை விருந்து

இயற்பியல் பேராசிரியர் ஜோசப் பிரபாகர் குவான்ட்டம் இயற்பியல் குறித்து எழுதியிருக்கும் ஒரு கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. இன்னும் சில பத்தாண்டுகளில் குவான்ட்டம் இயற்பியல், தொழில்நுட்பங்களில் மகா அதிசயங்களை நிகழ்த் தும் என அவர் குறிப்பிட்டிருப்பதைப் படிக்கப் படிக்க பிரமிப்பாக இருந்தது.

இயற்பியல், குவான்ட்டம் இயற்பியல்...

இரண்டும் என்ன என்கிற ஆதார தகவல்களுக் குள் நுழைந்தால் தலை கிறுகிறுத்துப்போகும். முக்கியமான விஷயம், குவான்ட்டம் இயற்பியல் துறையில் இதுவரை 20-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள் நோபல் பரிசு பெற்றிருக் கிறார்கள் என்பதுதான். 2022-ம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு ஜான் கிளாசர் (அமெரிக்கா), அலைன் ஆஸ்பெக்ட் (பிரான்ஸ்), ஆன்டன் ஜெய்லிங்கர் (ஆஸ்திரியா) மூவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த மூவரும், குவான்ட்டம் இயற்பியலில் புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறார்கள். ஐன்ஸ்டீன் எழுப்பிய தத்துவார்த்த கேள்விகளுக்கெல்லாம் இவர்களின் ஆராய்ச்சி விடை கொடுத்திருக்கிறது. குவான்ட்டம் இயற்பியல் வந்ததால் 1940-களில் நமக்கு டிரான்சிஸ்டர், லேசர், கம்ப்யூட்டர், நானோ தொழில்நுட்பம் என என்னென்னவோ கிடைத்தன. இந்த மூன்று விஞ்ஞானிகள் நிகழ்த்தியிருப்பது இரண்டாவது குவான்ட்டம் புரட்சி. தகவல் தொழில் நுட்பத்தில் பல அற்புதங்களை எதிர்பார்க்கலாம்.

உதாரணத்துக்கு ஒன்று. இமெயிலைத் திறப்ப திலிருந்து ஜிபே வரைக்கும் நமக்குத் தேவை பாஸ்வேர்டு. இது தெரிந்தால் ஒரு சைபர் திருடர், நம் தகவல்களைத் திருடலாம், நம் வங்கிப் பணத்தை அபேஸ் பண்ணலாம். இனி அது முடியாது என்கிறார்கள். குவான்ட்டம் சாவி தொழில்நுட்பத்தையும் (Quantum Key

Distribution) சேர்த்து தகவல்களை அனுப்பினால், சைபர் திருடர்கள் நம் பாஸ்வேர்டை திருட வழிமறிக்கும்போதே பாஸ்வேர்டு மாறிவிடுமாம். யாரோ நம் பாஸ்வேர்டைத் திருடுகிறார்கள் என்பதும் தெரிந்துவிடுமாம். மொத்தத்தில், இந்த நூற்றாண்டின் இணையற்ற ஆராய்ச்சி!

நம் ஊர் அறிவியல் வகுப்புகளில் சுட்டிக் குழந்தைகள் சுடச்சுடத் தரும் பதில்கள் பிரமாத மானவை. அறிவியல் ஆசிரியர் பாடம் எடுத்துக் கொண்டிருந்தார்... ``நாம் சுவாசிப்பதற்கும், உயிர் வாழ்வதற்கும் ஆக்சிஜன் மிக அவசியமானது. 1774-ம் ஆண்டு ஆக்சிஜன் கண்டுபிடிக்கப்பட்டது...’’

சட்டென ஒரு மாணவன் எழுந்தான். கை கூப்பிக்கொண்டான். ``நன்றி கடவுளே... அதுக்கப்புறம்தான் நான் பொறந்திருக்கேன். 1774-ம் வருஷத்துக்கு முன்னாடி பொறந்திருந்தா உயிரோடவே இருந்திருக்க மாட்டேன்.’’