Published:Updated:

வெற்றியின் ஆன்மா!

சிந்தனை விருந்து
பிரீமியம் ஸ்டோரி
சிந்தனை விருந்து

சிந்தனை விருந்து!

வெற்றியின் ஆன்மா!

சிந்தனை விருந்து!

Published:Updated:
சிந்தனை விருந்து
பிரீமியம் ஸ்டோரி
சிந்தனை விருந்து

அரை மணி நேரமாக நமக்காகக் காத்துக்கொண்டிருப்பார் ஒருவர். ``சாரி சார்... கொஞ்சம் லேட்டாகிடுச்சு’’ என்று சொல்லிவிட்டு, நாம் பாட்டுக்கு சகஜமாக அவருடன் உரையாட ஆரம்பித்துவிடுவோம். இதனால் அவரை நாம் மரியாதைக் குறைவாக நடத்துகிறோம் என்று அர்த்தமில்லை; அவருடைய நேரத்தை அவமானப்படுத்துகிறோம்... அவ்வளவுதான்.

சிந்தனை விருந்து
சிந்தனை விருந்து


எந்தக் காரணத்தையும் சால்ஜாப்பாகச் சொல்லாமல், நேரம் தவறாமையைக் கடைப்பிடிப்பவர்களே வாழ்க்கையில் வெற்றிபெறுகிறார்கள். `எந்த வேலைக்கும் நேரம் தவறாமை என்பது ஆன்மா போன்றது’ என்று குறிப்பிடுகிறார் கனடா எழுத்தாளர் தாமஸ் சாண்ட்லர் ஹாலிபர்ட்டன். பங்க்ச்சுவாலிட்டிக்கு மிகப்பெரிய உதாரணம் மாவீரர் அலெக்சாண்டர்.

அலெக்சாண்டர், தன் படைத் தளபதிகளை ஒருநாள் இரவு விருந்துக்கு அழைத்திருந்தார். ஒருவரை விட்டுவிட்டு இன்னொருவர் முந்திப் போய்விடக் கூடாதே... அதுவும் அழைத்திருப்பது அலெக்சாண்டர் அல்லவா! தளபதிகள் கூடிப் பேசினார்கள். ஓர் இடத்தில் எல்லோரும் கூடி, ஒன்றாகச் சேர்ந்து அலெக்சாண்டரின் அரண்மனைக்குப் போவது என்று முடிவெடுத்தார்கள்.

பேசியபடி, குறிப்பிட்ட இடத்தில் முன்னதாகவே ஒரு தளபதி வந்து காத்திருந்தார். இன்னொருவர் ஐந்து நிமிடங்கள் தாமதமாக வந்தார். இப்படி ஒவ்வொருவராக வர, கடைசி தளபதி வந்து சேர்ந்தபோது 10 நிமிடங்களுக்கு மேல் தாமதமாகியிருந்தது. எல்லோரும் அவசர அவசரமாக அரண்மனைக்குப் போனார்கள்.

அத்தனை தளபதிகளும் அரண்மனைக்குப் போய்ச் சேர்ந்தபோது கால் மணி நேரத்துக்கும் மேல் கால தாமதமாகியிருந்தது. அவர்கள் வந்த நேரத்தில் தன் இரவு உணவை முடித்துவிட்டிருந்தார் அலெக்சாண்டர். அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்றார். அடுத்து அவர் சொன்னதுதான் முக்கியமானது. ``சரி... உணவு நேரம் முடிந்துவிட்டது. நாம் அடுத்த காரியத்தைப் பற்றிப் பேசுவோமா?’’ இந்த நேரம் தவறாமைதான் அடுத்தது என்ன... என்று அவரை வேகம் கொள்ளவைத்தது. அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி அவரை நகர்த்தி, `மாவீரன் அலெக்சாண்டர்’ என்ற பெயரைப் பெற்றுத் தந்தது.

கால தாமதத்துக்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம். அலுவலகத்துக்கு தாமதமாக வந்த ஊழியரிடம் அதிகாரி கேட்டார்... ``ஏம்ப்பா இன்னிக்கி இவ்வளவு லேட்டு?’’

``வர்ற வழியில ஒருத்தர் ஐநூறு ரூபா நோட்டைத் தொலைச்சுட்டுத் தேடிக்கிட்டு இருந்தார் சார்...””

``அப்படியா... நீ அவருக்கு ஹெல்ப் பண்ணினியா?’’

``இல்லை சார்... அந்த ஐநூறு ரூபா நோட்டு மேலதான் நான் நின்னுக்கிட்டு இருந்தேன்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism