கடவுளுக்கு அளிப்பதை விட ஓர் ஏழைக்கு உணவு கொடுங்கள். அதுவே கடவுளுக்கு மகிழ்ச்சியளிக்கும்.

விரதத்துக்காக பட்டினி கிடப்பதை விட உயிர்களைக் கொல்லாது இருப்பதே சிறந்த விரதம்.

கடவுள் அருட்பெருஞ்ஜோதியாக இருக்கிறார். அவரை விட கருணைமிக்கவர் யாருமில்லை.

அன்பையும் இரக்கத்தையும் வாழ்க்கையின் அடிப்படையாகக் கருத வேண்டும். சினம், சோம்பல், பொய், பொறாமை, கடுஞ்சொல் ஆகியவற்றை அறவே நீக்க வேண்டும்.

பெரியவர்களைக் கண்டால், பணிவுடன் நடந்து கொள்ளுங்கள். தவறு செய்தால், அதைத் திருத்திக்கொள்ள முயலுங்கள். நற்குணங்களைப் பின்பற்றி நல்லவர்களாக வாழுங்கள்.

கடவுளின் பெயரால் உயிர்ப்பலி செய்வது கூடாது. ஒழுக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல்.

உண்மையைச் சொல், அது உனது வார்த்தைகளைப் பாதுகாக்கும்.

யாரிடத்தில் தயவு அதிகம் இருக்கிறதோ அவரிடத்தில் கடவுள் இருக்கிறார்.

எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் பாவித்து சம உரிமை வழங்குவோரின் மனத்தில்தான் இறைவன் வாழ்கிறான்.

ஏதும் இல்லாத ஏழைகளுக்கு இரக்கப்பட்டு மனது உவந்து ஈவதே ஜீவகாருண்யம்.

வாக்கு வேறு, மனம் வேறு, செய்கை வேறு என்கிற நிலையில் இறைவனை வழிபடாதீர்கள். மூன்றும் ஒன்றிய நிலையில் வழிபடுங்கள்.

சோற்றிலே மிகுந்த விருப்பமுள்ள ஒருவன் செய்யும் தவம் சுருங்கிப் போகும். ஆற்றிலே கரைத்த புளி போல அது பயன்தராது.

யாரையும் கடுகடுத்த நோக்குடன் பார்க்க வேண்டாம். அதுபோல், பல்லாயிரம் சொற்களை உபசாரமாகப் பேசுவதை விட, முகமலர்ச்சியுடன் ஒருவரைப் பார்த்தாலே நம்மைச் சந்திப்பவர் மகிழ்வார்.

குரு தரிசனம், ஞானிகள் தரிசனம், சிவ தரிசனம் செய்வோரை ஒரு நாளும் தடுக்கக் கூடாது.