Published:Updated:

கேள்வி - பதில்: சிலைகளுக்குச் சக்தி உண்டா?

கண்ணன்
பிரீமியம் ஸ்டோரி
கண்ணன்

? வீட்டுப் பூஜையறையில் நடராஜர், குழலூதும் கண்ணன் படங்களை வைத்து வழிபடலாமா?

கேள்வி - பதில்: சிலைகளுக்குச் சக்தி உண்டா?

? வீட்டுப் பூஜையறையில் நடராஜர், குழலூதும் கண்ணன் படங்களை வைத்து வழிபடலாமா?

Published:Updated:
கண்ணன்
பிரீமியம் ஸ்டோரி
கண்ணன்

? வீட்டுப் பூஜையறையில் நடராஜர், குழலூதும் கண்ணன் படங்களை வைத்து வழிபடலாமா?

- எஸ்.சங்கரசுப்பிரமணியன், சங்கரன்கோவில்

நடராஜர், சிவபெருமானின் மூர்த்தங்களுள் ஒருவர். முயலகன் எனும் மாயையின் உருவிலான வனை அடக்கி, நமக்கு வேண்டிய ஆற்றல்கள் அனைத்தையும் அளிக்கும் ஆடல்வல்லானாக அருள்பவர். அவரைப் போற்றித் துதித்து தியானிப்பதால், இவ்வுலகில் மட்டுமல்லாமல் இறைவனின் கணங்களுடன் நாமும் இணைந்து வாழ்ந்து உய்வதற்கு, எளிமையான வழியில் அருள்வார் அந்தப் பிரபஞ்சக் கூத்தாடி. அவரே, நம்முள் இருந்து நம்மை இயக்குகிறார். த்வாதசாந்த பெருவெளியில், இடைவிடாது தன் நடனத்தால் உலக இயக்கங்களைச் சரிவரச் செய்து வருபவர். அவரிடம் இருக்கும் ஒவ்வோர் ஆயுதமும் ஒரு தத்துவத்தைக் கூறவல்லது. அவரின்றி ஓர் அணுவும் அசையாது. அவரை வீட்டில் வைத்து வழிபடுவது சிறப்பு. அவரைத் தெற்கு நோக்கி வைத்து வழிபட்டால், வீட்டில் ஆற்றல் மிகுதியாவதைத் தாங்கள் உணரலாம்.

கேள்வி - பதில்: சிலைகளுக்குச் சக்தி உண்டா?

அதேபோல், ‘ரதகத்யேவ ஸாரதி:’ என்று கீதையில் கூறியுள்ளபடி, எப்படி ஒரு தேரை தேரோட்டி ஓட்டுகிறாரோ, அப்படி நம்முடைய சரீரமாகிய தேரை இயக்குபவர் கண்ணன். குழல் ஊதுவதைக் கேட்டு பசுக்கள் அவரை நோக்கி வந்தன. புல்லாங்குழலுடன் கிருஷ்ணரை வைத்து வழிபடுவது, அனைத்து மங்கலங்களும் பெருக உதவும் என்பதில் சந்தேகம் இல்லை. ‘பசுபதி’ மற்றும் ‘கோபதி’ இருவரையும் சிறப்பாக வழிபாடு செய்து, துன்பங்களை விலக்கி இன்பமான வாழ்க்கையைப் பெறுங்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

?கடவுளை வழிபடும் எல்லோருக்கும் இறையருள் கிடைப்பதில்லை. இதற்குக் காரணம் பக்தியில் குறைபாடா அல்லது இறைவனின் பாரபட்சமா?

- எஸ்.லலிதா அனந்தசுப்பிரமணியம், சென்னை - 41

ஒரு தோட்டத்தில் பல வகையான மலர்களை யும் பழங்களையும் காண்கிறோம். மழையும், சூரிய ஒளியும், மண்ணும் அனைத்துக்கும் ஒன்றாகத்தானே இருக்கின்றன. அப்படியென்றால் ஏன் இந்த வேறுபாடு! சிந்தித்துப் பார்த்தால், அது விதைக்கப்பட்ட விதைகளின் வேறுபாடு என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

ஒரேமாதிரியான பழங்களில்கூட ஒரேமாதிரி சுவை இருப்பதில்லையே. இதற்கான காரணம் என்ன என்பதை, விதையின் தன்மையை நாம் அறிந்தால்தான் அறியமுடியும். கடவுள் ‘ஸர்வக்ஞர்’ - அனைத்தையும் அறிந்தவர். நம்முடைய கர்மபலன்களுக்கு ஏற்பவே நமக்கு போகங்களை அருள்கிறார். ஸத்யோஜ்யோதி சிவாசார்யர் 10-ம் நூற்றாண்டில் இயற்றிய ‘போக காரிகா’ எனும் நூலில், போகங்கள் என்பவை நாம் அனுபவிக்கும் நன்மைகளும் தீமைகளுமே என்று சிறப்பாக விளக்கியிருக்கிறார். இந்தச் சரீரம் நமக்கு அளிக்கப்பட்டிருப்பதே அவற்றை அனுபவித்து, இரு வினைகளையும் போக்கி, பரம்பொருளுடன் இணைவதற்கே.

கேள்வி - பதில்: சிலைகளுக்குச் சக்தி உண்டா?

இந்தப் பேறு இந்தப் பிறவியிலேயே நமக்குக் கிடைக்கவேண்டும் என்பதில்லை. ஆனால், இந்தப் பிறவியில் அந்த நிலையை அடைவதற்கு முயற்சி செய்யலாம். ஒரு சிறிய விதைதானே பெரிய மரமாக வளர்ந்து பல விதைகளை அளிக்கிறது!

‘வேண்டுதல் வேண்டாமை இலன் அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல’ என்று திருவள்ளுவரும், இறைவனைப் பாரபட்சம் அற்றவர் என்றும் அவரை வழிபடுவது மட்டுமே நமக்கு இம்மையிலும் மறுமையிலும் நன்மை அளிக்கவல்லது என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.

எனவே, இறைவன் எவரிடமும் பாரபட்சம் பார்ப்பதில்லை என்பதே உண்மை.

? விக்கிரகங்கள் மனிதர்களால் உருவாக்கப் படுகின்றன. அவற்றுள் தெய்விகச் சக்தி நிறைந் திருக்கும் என்று சொல்வது எப்படிச் சரியாகும்?

- சி.ரங்கநாதன், திருச்சி - 2

தாங்கள் வங்கியில் தங்களின் காசோலையை அளித்து பணம் எடுப்பதைப் பார்த்து, ஒருவர் உங்களிடம் `எப்படி, ஒரு தாளைக் கொடுத்து இவ்வளவு பணம் பெற்றீர்கள்' என்று கேட்டால், தங்களின் பதில் என்னவாக இருக்கும்!

பணத்தைப் பெற்றுக்கொண்டு பழங்களைத் தருவார் பழ வியாபாரி. உடனே, `காகிதத்தைப் பெற்றுக்கொண்டு பழங்கள் தருகிறாரே, அந்த வியாபாரி என்ன ஏமாளியா' என்று எவரேனும் கேட்டால், நீங்கள் என்ன சொல்வீர்கள்.

தாங்கள் நகைக்கடையில் தங்கத்துக்கு ஒரு விலையும் வெள்ளிக்கு ஒரு விலையும் கொடுத்து வாங்குவீர்கள். `எல்லாம் பொருள்கள்தானே, வெவ்வேறு விலை எதற்கு' என்று கேட்க முடியுமா!

இந்தக் கேள்விகளுக்கெலாம் தங்கள் மனதில் எழும் பதில்களைக் குறித்துக்கொண்டு, தாங்கள் கேட்ட கேள்வி குறித்து சிந்தித்துப்பாருங்கள். அந்தக் கேள்விக்கான பதில்களே, உங்கள் கேள்விக் கான பதிலை அளித்திருக்கும்.

உலகத்திலேயே வேறு எந்த மதத்திலும் இல்லாத தனிச் சிறப்பு நம் மதத்தில் உண்டு. நம் ஆகம சாஸ்திரங்களில், எங்கும் நிறைந்திருக்கும் இறைச் சக்தியை ஓரிடத்தில் நிலைபெறச் செய்து, மக்கள் அனைவரும் பயன்பெறவேண்டும் என்பதற்காக மிகச் சிறந்த கிரியைகள் கூறப்பட்டுள்ளன. இது நம் ஸநாதன தர்மத்தின் தனிச் சிறப்பு. சடங்குகள் அனைத்தும் அர்த்தமுள்ளவை.

‘சிலா பவதி தைவிகம்’ என்றபடி, கல்லானது தெய்வத்தன்மை வாய்ந்ததாக ஆக்கப்படுகிறது. காசோலை என்பது காகிதமாக இல்லாமல், அதில் எழுதப்பட்டிருக்கும் தொகையின் மதிப்பை எப்படிப் பெற்றுவிடுகிறதோ, அதேபோன்று ‘அர்ச்சகஸ்ய ப்ரபாவேன’ என்றபடி அந்த ஆலய ஆசார்யனின் தவம் மற்றும் பூஜா வலிமையால், குறிப்பிட்ட தெய்வ உருவத்துக்கு உரிய மந்திரங்களைக் கூறி வழிபடும்போது, அங்கு இறையருள் நிறையும்.

இந்தப் பேருண்மையைத் தாங்கள் செல்லும் ஆலயங்களில் இறைவனைக் கசிந்துருகி வழிபடும் போது உணரலாம். இறையனுபவம் என்பது நம்முடைய முன்வினைப் பயன்களைப் பொறுத்தே ஏற்படும். இனி, தாங்கள் ஆலய தரிசனத்தின்போது இறையை உணர வேண்டுங்கள். உணர்வீர்கள், தெளிவீர்கள்!

? வேத மந்திரங்களை ரிக்கார்ட் செய்துவைத்துக் கொண்டு கேட்கலாமா. அதனால் முழுமையான பலன் கிடைக்குமா?

- எம்.ராமசந்திரன், கோவைபுதூர்

பயனுள்ளது, பயனில்லாதது என்று எவற்றையும் நாம் கூறிவிட முடியாது. வேத ஒலிகளில் அந்த மந்திரங்களைக் கூறும் ஆசார்யரின் பங்கும் முக்கியமானதாக உள்ளது. பதிவு செய்து கேட்பதை நம்மால் முடியாத தருணங்களில் வைத்துக்

கொள்ளலாமே தவிர, அதையே வழக்கமாக்கிவிடக் கூடாது; அதையே முழுமையாக ஏற்க இயலாது.

- பதில்கள் தொடரும்...

வாசகர்களே... ஆன்மிகம் தொடர்பான அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் தருகிறார், சென்னை `காளிகாம்பாள் கோயில்' சிவஸ்ரீசண்முக சிவாசார்யர். கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: கேள்வி-பதில், சக்தி விகடன் 757, அண்ணாசாலை, சென்னை-600 002