Published:Updated:

சுவாஸினி பூஜை எதற்காக?

சுவாஸினி பூஜை
பிரீமியம் ஸ்டோரி
சுவாஸினி பூஜை

ஆன்மிகக் கேள்வி பதில்கள்

சுவாஸினி பூஜை எதற்காக?

ஆன்மிகக் கேள்வி பதில்கள்

Published:Updated:
சுவாஸினி பூஜை
பிரீமியம் ஸ்டோரி
சுவாஸினி பூஜை

? இணையவழி ஆன்மிக சங்கமம் ஒன்றில் கலந்து கொண்டேன். சிவாசார்யர் ஒருவர் பூஜைகளின் மகிமைகளை விளக்கினார். பரார்த்த பூஜை, ஆத்மார்த்த பூஜை குறித்தும் பேசினார். நான் தாமதமாகக் கலந்துகொண்டதால், இந்த பூஜைகள் பற்றி அறியமுடியவில்லை. நீங்கள் விளக்குங்களேன்.

-கே.காவ்யா, சென்னை-55

சுவாஸினி பூஜை
சுவாஸினி பூஜை


`பூஜா’ என்ற சொல்லுக்கு, நம் அனைத்து எண்ணங்களையும் நிறைவேற்றி அருள்வதுடன், நாம் யார், நமக்கும் நம்மைப் படைத்த இறை வனுக்கும் உள்ள தொடர்பு யாது என்பவை குறித்த அறிவை அடையவைக்கும் கிரியை என்று பொருள்.

உலக நன்மையின் பொருட்டு சகலரும் சகலமும் பெறவேண்டும் என்ற நோக்குடன் ஆலயங்களில் பூஜை தொடர்ந்து நடக்ககும். இந்த பூஜையை, ‘பரார்த்த பூஜை’ என ஆகமம் கூறுகிறது.

நாம் வீட்டில் தினமும் செய்யும் பூஜை, ‘ஆத்மார்த்த பூஜை’. இது பெரும்பாலும் நமக்கா கவும், நம் குடும்பத்தின் நன்மைக்காகவும் நாம் செய்யும் பூஜை ஆகும். சிலநேரங்களில் நாம் பொது நலனுக்காக பூஜை செய்திருக்கலாம். ஆனால், அவை ஆலயங்களில் செய்யும் பூஜைக் குச் சமமாகாது. எனவே, தாங்கள் வீட்டில் பூஜை செய்வதுடன், ஆலயங்களுக்கும் சென்று இறைவனை தரிசித்து வழிபட்டு நன்மைகள் அடையலாம்.

? அம்பிகையைப் போற்றும் லலிதா சகஸ்ரநாமத்தை முறைப்படி பாராயணம் செய்து வழிபட விரும்புகிறேன். எந்தெந்த நாள்களில் பாராயணம் செய்யலாம், அதனால் உண்டாகும் பலாபலன்கள் என்ன என்று விளக்குங்களேன்.

- கா.சூரியா, விருதுநகர்

அம்பிகையின் ஸ்தோத்திரங்களில் தனிச் சிறப்பு வாய்ந்தது லலிதா சஹஸ்ரநாமம். அம்பிகையின் ஆயிரம் திருநாமங்களும் பிரம்மாண்ட புராணத்தில் அமைந்துள்ளன. இந்த நாமாவளிகள், அம்பிகையைச் சூழ்ந்திருக்கக்கூடிய ரஹஸ்ய யோகினிகளால் அருளப்பட்டவை. இவற்றை ஹயக்ரீவர், அகத்தியருக்கு உபதேசமாக அருளினார்.

‘மாதா’ என்று கூறினாலே ஆயிரம் நாமாக் களைக் கூறிய புண்ணியம் கிடைக்கும் என்பது முன்னோர் வாக்கு. ‘நாம பாராயண ப்ரீதா’ என்பதற்கேற்ப, நாமாக்களைப் பாராயணம் செய்தால் மகிழ்ச்சி அடையக்கூடிய பராசக்தியை வழிபடுவது, அனைவருக்கும் பொதுவானதே. ஆனால், லலிதா சஹஸ்ரநாம ஸ்தோத்திரத்தில் பல ரகசிய தேவதைகளின் சிறப்புகள், உபாஸனை முறைகள் விளக்கப் பட்டுள்ளதால், தகுந்த குருவிடம் உபதேசம் பெற்று ஜபிப்பது சிறந்தது.

குறிப்பாக வெள்ளிக் கிழமைகள், ஜன்ம, அனுஜன்ம, திரிஜன்ம நட்சத்திர நாள்கள், நவமி, சதுர்த்தசி, பௌர்ணமி நாள்களில் இந்த ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்வது சிறந்த பலன்களை அளிக்கும். பௌர்ணமியன்று சந்திரனில் அம்பிகை இருப்பதாகப் பாவித்து, இந்த ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்தால், தீராத நோய்கள் நீங்கி நீண்ட ஆயுள் பெறலாம். ஜுரம் முதலியவற்றால் பீடிக்கப்பட்டவர்களின் தலையைத் தொட்டுக்கொண்டு பாராயணம் செய்தால், அந்தப் பிணிகள் நீங்கும்.

அதேபோல், விபூதியைத் தொட்டுக்கொண்டு பாராயணம் செய்து, அந்த விபூதியை இட்டுக் கொள்ள நோய்கள் நீங்கும். குடத்தில் நீர் நிரப்பி லலிதா சகஸ்ரநாமத்தைப் பாராயணம் செய்து, அந்த நீரால் நீராடினால் பூத, பிரேத, பிசாசு போன்ற உபாதைகள் விலகும். வெண்ணெய்யில் மந்திரித்துக் கொடுத்தால் பிள்ளைப்பேறு கிடைக்கும். எதிரிகள் விலகுவார்கள். இப்படி, பலவித பலன்களை தேவியின் அருளால் நாம் பெறலாம். எந்த ஒரு தேவையுமின்றி தேவியைத் துதிப்பதையே நோக்கமாகக் கொண்டவர்களாக வழிபட்டால், உயர்ந்த நிலையான மோட்சம் கிடைக்கும்.

சுமார் 85 சுலோகங்களில்... இந்த ஸ்தோத்திரத் தைப் பாராயணம் செய்வதால் ஏற்படக்கூடிய பலன் களை, மிகவும் விஸ்தாரமாக ஹயக்ரீவர் அகத்தியருக்கு விளக்கியுள்ளார்.

இந்த ஆயிரம் நாமங்கள் ரகசியமானவையாகவும் தேவிக்கு மிகவும் பிரியமானவையாகவும் உள்ளவை. இவற்றைப் பாராயணம் செய்து வழிபடுவதால் கங்கை முதலிய புண்ணிய நதிகளில் நீராடிய புண்ணியம் வாய்க்கும்; புனித க்ஷேத்திரத்தில் கோடி லிங்கங்களைப் பிரதிஷ்டை செய்த பலன் கிடைக்கும்.

கேள்வி பதில்கள்
கேள்வி பதில்கள்
Muralinath


? ஒருமுறை ஓம்காரத்தின் மகிமையை விளக்கியிருந்தீர்கள். அதுபற்றி மீண்டும் விளக்கம் தந்தால் பயனுள்ளதாக இருக்கும்.

-எம்.சரவணன், தூத்துக்குடி

‘ஓம்’ - இந்த ஒலியில் உலகம் முழுவதும் அடங்கியிருப்பதாக நம் ரிஷிகள் உணர்ந்தும் அனுபவித்தும் கூறியுள்ளார்கள். ‘ஓம் இதிதகும் ஸர்வம்’ என்று கூறி, `அனைத்தும் ஓம்காரமே’ என்று விளக்குகிறது வேதம்.

ஒரு மனிதனுக்கு எப்படி தலை முக்கியமோ, அதுபோன்று ஓம்காரமானது அனைத்து மந்திரங்களுக்கும் தலை போன்றது. எனவேதான் எந்தத் தெய்வத்தின் மூல மந்திரமாக இருந்தா லும் ‘ஓம்’ இல்லாமல் இருப்பதில்லை. மந்திரங்களின் ஓரெழுத்து வெளிப்பாடே ஓம்காரம். மந்திரங்களை உபதேசமாகப் பெற்றவர்கள் அனைவரும், மூல மந்திரங்களை ஜபிப்பதும், தெய்வ ஸ்தோத்திரங்களையும், ஓம்காரத்தையும் உச்சரிப்பதும் வழிவழியாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் முறை.

சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம், திரோபாவம் மற்றும் அனுக்ரஹம் என்ற ஐந்தும் இந்த ஓம்காரத்தினுள் அடக்கம். மகான்கள் பலரும் `பிரணவ ஜபம்’ என்று ஓம்காரத்தை மட்டுமே ஜபம் செய்து ஸித்தி அடைந்திருக்கிறார்கள்.

? சுவாஸினி பூஜை பெண்களுக்கு உகந்ததாகப் போற்றப்படுவது ஏன்?

- ஆர்.சுதா, வேலூர்

‘வஸ்’ என்றால் `தங்குதல்’ என்று அர்த்தம். ‘வாஸினி’ என்றால் `தங்குபவள்’ என்று பொருள். ‘சு’ என்பது அம்பாளின் சக்தியையும் சாந்நித்தியத்தையும் குறிக்கும். ‘சுவாஸினி’ என்றால், முழுமையான சக்தியுடன் தங்குபவள் என்று அர்த்தம். இந்த சுவாஸினி பூஜையில், சக்தி எனப்படும் அம்பாளின் முழு ஆற்றலும் வெளிப்படும் என்கின்றன வேதநூல்கள்.

அதாவது, பூஜைக்கு வரும் பெண்களே சுவாஸினி பூஜையை, அம்பிகை வழிபாட் டைச் செய்வார்கள். அப்படிச் செய்வதற்கு முன்னதாக, அவர்களே அம்பிகையாக மாறி, அந்த பூஜையைச் செய்வார்கள் என்பது விசேஷம். பெண்கள், வாழ்வில் ஒரேயொரு முறை சுவாஸினி பூஜையில் கலந்துகொண்டு, அம்பிகையாக தங்களை வரித்துக்கொண்டு, அந்த ஜகன் மாதாவை, கருணைத் தாயை மனதார பூஜித்தால் போதும்; சீக்கிரமே சகல துயரங்களும் நீங்கி இல்லத்தில் நல்ல விஷயங்கள் நடக்கத் தொடங்கிவிடும்.

- பதில்கள் தொடரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism