Published:Updated:

சதாபிஷேகம் செய்வது எந்த வயதில்?

கேள்வி பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி பதில் ( bestdesigns )

கேள்வி பதில்

சதாபிஷேகம் செய்வது எந்த வயதில்?

கேள்வி பதில்

Published:Updated:
கேள்வி பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி பதில் ( bestdesigns )

?நம்முடைய தர்மப்படி மறுபிறவி நிச்சயம் என்கிறோம். பிறப்பறுக்க அருள் செய்யும்படி இறைவனை வேண்டிக்கொள்ள வேண்டும் என்பது பெரியோர் வாக்கு. மறுபிறவி உண்டு எனில், முன்னோருக்காக நாம் செய்யும் ஆராதனைகள், குறிப்பிட்ட ஆத்மாவை எப்படிச் சென்றடையும்?

மறுபிறவி
மறுபிறவி
Pogonici

- சி.பாண்டியன், மதுரை-3

புண்ணியம் - பாவம் ஆகியவை முழுமையாக அழிக்கப்பட்ட பிறகே, பிறப்பு இல்லாத தன்மையான மோக்ஷத்தை நாம் அடைய முடியும். அதுவரை நாம் பல பிறவிகள் எடுத்து, நம்முடைய கர்ம வினைகளை அழிப்பதற்கு இறைவன் வாய்ப்பு அளிக்கிறார்.

இவற்றைப் போகம் என்று கூறுவர். போகம் என்றால் இன்பம் - துன்பம் இரண்டுமே. நாம் நம் முன்னோர்களுக்குச் செய்யும் ஆராதனையானது, அவர்கள் எந்த உருவத்தில் பிறந்து இருப்பார்களோ, அதற்கேற்ப அந்த உருவத்தில் அவர்களைச் சென்றடையும் என்று சாஸ்திரம் தெளிவுபடுத்துகிறது.

பசுக் கூட்டத்தில், மாடுகளுக்கு இடையே இருந்தாலும் தனது கன்றினை ஒரு பசுவானது எப்படி மிகச் சரியாக அடையாளம் கண்டுகொள்கிறதோ, அப்படியே நாம் செய்யும் கர்மாவானது... எந்தச் சந்தேகத்துக்கும் இடமின்றி நாம் யாரைக் குறித்துச் செய்கிறோமோ, அவரைச் சென்று சேர்ந்துவிடும். இங்கு நாம் ஓரிடத்தில் இருந்து தொலைபேசியில் ஒருவரைத் தொடர்புகொள்ள

முயல்கிறோம். சில நொடிகளில் அவரைத் தொடர்புகொள்ள முடிகிறது. அதுபோன்று தேவதைகளையும், ரிஷிகளையும், பித்ருக் களையும் மந்திரம், கிரியை, பாவனா என்ற முறையில் எளிமையான வகையில் தொடர்புகொள்ளும் வகையில் நம் சனாதன தர்மம் வழிகாட்டியுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மோக்ஷம்
மோக்ஷம்
bestdesigns

நாம் நம் முன்னோர்களுக்குரிய கடனைச் செலுத்திவிட வேண்டும். அவர்களுக்கு மோக்ஷம் கிடைத்திருக்கும் என்று நாமே அனுமானம் செய்துவிடக் கூடாது. ஒருவேளை, ஏதாவது கர்மாக்களினால் அவர்களுக்கு மோக்ஷம் கிடைக்காமல் இருந்தால், நாம் நம் கடமைகளைச் செய்ய தவறியவர்களாக ஆகிவிடுவோம்.

அவர்களுக்கு தெய்வத்தின் அருளால் மோக்ஷம் கிடைத்திருந்தாலும் நாம் செய்யும் கிரியை நமக்கு ஓர் ஆசீர்வாதமாகவும், நாம் நமது கடமையைச் செய்துவிட்டோம் என்ற மன திருப்தியையும் அளிக் கும். ஆதலால், எக்காரணத்தைக் கொண்டும் பித்ரு காரியங்கள் செய்வதில் தவறக்கூடாது.

? வயது 60 பூர்த்தியானதும் சஷ்டியப்த பூர்த்தி, 80 நிறைவுற்றதும் சதாபிஷேகம்... இதேபோல் குறிப்பிட்ட வயதில் நடத்தவேண்டிய வேறு வைபவங்கள் உண்டா; என்னென்ன?

-சி.கிருஷ்ணமூர்த்தி, சங்கரன்கோவில்

54 வயது பூர்த்தி ஆனவுடன் உக்ரசாந்தி

60 வயது ஆரம்பம் ஆகும்போது உக்ர ரத சாந்தி

60 வயது பூர்த்தி ஆகும்போது ஷஷ்டியப்தபூர்த்தி

70 வயது ஆரம்பம் ஆகும்போது பீமரத சாந்தி

77 வயது நிறைவுற்றதும் 78 வயதுக்குள்

விஜயரத சாந்தி

80 வயது 8 மாதங்கள் பூர்த்திஆனதும் சதாபிஷேகம்

100 வயது பூர்த்தியானதும் பூர்ணாபிஷேகம்

சாஸ்திரம் தரும் விளக்கம் இது. இவ்வாறு அனைவரும் அந்தந்த வயதில் குறிப்பிட்ட சாந்திகளைச் செய்துகொண்டு, தங்களின் கர்மவினைகளை எளிமையாகப் போக்கிக் கொள்ளலாம். ஒவ்வொரு வருடமும் நமது பிறந்த மாதத்தில் வரும் நட்சத்திரத்தில் ஆயுஷ்ஹோமம் செய்வது சிறப்பு.

மஞ்சள் பிள்ளையார்
மஞ்சள் பிள்ளையார்

? வீட்டில் எந்த சுப காரியம் என்றாலும் அதற்கான சடங்கு சம்பிரதாயங் களில் மஞ்சள் பிள்ளையார் பிடித்துவைத்து வழிபடுவது வழக்கம். சில தருணங்களில் சந்தனத்திலும் பிள்ளையார் பிடித்து வைப்பது உண்டு. இங்ஙனம் பிள்ளையாராகப் பிடித்து வைத்த மஞ்சள் சந்தனத்தை வழிபாட்டுக்குப் பின்னர் எப்படிப் பயன்படுத்தலாம்?

- கீதா மனோகரன், காரைக்கால்

எந்தவொரு சுப காரியத்துக்கு முன்னதாகவும் மஞ்சளில் பிள்ளையார் செய்து வழிபட வேண்டும். சந்தனம் கொண்டு பிள்ளையார் செய்து வழிபடுவது இல்லை. மஞ்சள் தீய சக்திகளை ஸ்தம்பிக்கச் செய்யும். நாம் ஆரம்பிக்கும் சுப காரியமானது நல்ல முறையில் நடைபெற வேண்டும் எனும் நோக்கத்துடன் விக்ன விநாயகரை மஞ்சளில் ஆவாஹனம் செய்து வழிபடுவது மரபு.

அந்த பூஜை நிறைவுற்றதும் அங்குள்ள மஞ்சளிலிருந்து பிள்ளை யார் நம் இருதயத்துக்கு வந்ததாக எண்ணி வழிபாடுகள் செய்யவும். பிறகு அந்த மஞ்சளைத் தீர்த்தத்தில் கலந்து சிறிதளவு பருகலாம்; மேனியில் பூசிக்கொள்ளலாம். வீட்டில் பூஜையறை முதலான உரிய இடங்களில் மஞ்சளைத் தடவி, வீட்டில் எப்போதும் தெய்வச் சாந்நித்தியம் - சக்தி நிறைந்திருக்கும்படிச் செய்யலாம்.

? பெண்கள் வில்வ இலையைப் பறிக்கலாமா? ஸ்வாமி அர்ச்சனைக் காக இதுபோன்று இலைகள், பூக்களைப் பறிக்குமுன் அல்லது பறிக்கும் தருணத்தில் சொல்லவேண்டிய துதிகள் வேண்டுதல்கள் ஏதேனும் உண்டா?

- வி.யாழினி, திருச்சி

பெண்கள் அம்பிகையின் வடிவங்களாக உள்ளவர்கள். வில்வ இலைகளைப் பறிக்கும்

போது சிவ சம்பந்தமான ஸ்லோகங்கங்களைச் சொல்லிக்கொண்டோ, `சிவ சிவ’ என சிவநாமங்களைச் சொல்லிக் கொண்டோ வில்வம் பறிக்கலாம்; மங்கலம் ஸித்திக்கும்.

? காகத்தைத் தவிர மற்ற பறவைகளுக்கு அன்னம் இடக் கூடாதா? காகத்துக்கு ஏன் முக்கியத்துவம். இதுகுறித்து நம் சாஸ்திரங்கள் வலியுறுத்துவது என்ன?

- க.சரவணன், சென்னை-67

பொதுவாக அனைத்து பிராணிகளுக்கும் நாம் அன்னம் இடலாம். ஆனால் சிறப்பாக காலை மற்றும் மதியத்தில் காகத்துக்கும் இரவில் நாய்க்கும் அன்னம் இட வேண்டும்.

சிராத்தம் போன்ற கிரியைகளின்போது ‘உச்சிஷ்ட பிண்டம் வாயஸேப்யோ தத்யாத்’ என்ற வசனத்தினால் முன்னோர் கடன் செய்தபிறகு, அன்னத்தைக் காகத்துக்கு வைக்கவேண்டும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

‘காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்

அன்னநீ ரார்க்கே உள’ - என்று திருவள்ளுவரும்,

‘ஆர்க்கும் இடுமின் அவரிவர் என்னன்மின்

பார்த்திருந்துண்மின், பழம்பொருள் போற்றன்மின்

வேட்கையுடையீர் விரைந்தொல்லை உண்ணன்மின்

காக்கை கரைந்துண்ணுங் காலம் அறிமினே’

- என திருமூலர் திருமந்திரத்திலும் காக்கையைச் சிறப்பிக்கின்றனர்; அவற்றைப் போல நாமும் பகிர்ந்துண்டு வாழவேண்டும் என்று வழிகாட்டு கின்றனர். காக்கைகள் கரைந்து விருந்தினர் வருகையை அறிவிக்கும். இதை ‘விருந்து வரக் கரைந்த காக்கையது பலியே’ என்று குறிப்பிடு கிறது குறுந்தொகை. இப்படி, பல உயர்ந்த குணங்களைக் கொண்ட காக்கைக்கு அன்னமிடுவது மிகவும் சிறப்பு. அதேபோல், மற்ற உயிரினங்களுக்கும் உணவு அளித்து மகிழலாம்.

- பதில்கள் தொடரும்..

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism