? திருக்கோயில்களில் பிரசாதமாகத் தரப்படும் எலுமிச்சைப் பழத்தை எவ்விதமாகப் பயன்படுத்தலாம். சிலர், பிரசாத எலுமிச்சையை ஊறுகாய் போட்டு பயன்படுத்துகிறார்களே, அது சரியா?

- கே.பழனிச்சாமி, கோவை-2

! நமக்கு அர்ச்சனைப் பிரசாதமாக தேங்காய், பழங்கள் கொடுக்கும் போது பழத்தை அப்படியே உட்கொள்கிறோம். தேங்காயைச் சமையலுக்குத்தானே பயன்படுத்துகிறோம். அதுபோல் எலுமிச்சம்பழம் தங்களுக்குப் பிரசாதமாகக் கொடுக்கப்பட்டால், அதைப் பக்குவப்படுத்தி உட்கொள்வதில் தவறு ஏதும் இல்லை. ஆனால் தாங்கள் திருஷ்டி படக் கூடாது என்று வேண்டுதல் செய்து, அதை அம்மனுக்குச் சாத்தி, அப்படிக் கிடைக்கும் எலுமிச்சை பழங்களை உணவாகப் பயன்படுத்தக் கூடாது. பழம் ஒன்றுதான் என்றாலும், நாம் வேண்டிப் பெற்றுக் கொள்ளும் தன்மைக்கு ஏற்ப பயன்பாடு மாறுகிறது.

? ஆலயத்தில் நந்தியின் காதில் வேண்டுதல் சொல்லி வழிபடலாமா?
-சி.ராமு, கடலூர்

! ஆகமங்களில் இறைவனை எப்படி வழிபட வேண்டுமென்ற விளக்கங்கள் பல உள்ளன. ஒரு கைபேசியில் நாம் ஒருவரிடம் பேசுவதற்கு, இந்த முறையில் வைத்துப் பேசவேண்டும் என்று நியதி இருக்கும். அப்படியே நாமும் பயன்படுத்துவோம். அதேபோன்று விதிகள் நிறைந்தவைதான் நமது தர்மங்கள்.

விதிகளில் அவரவர் பக்குவ நிலைக்கு ஏற்ற வேறுபாடுகள் இருக்கலாம். ஒவ்வொருவரும் உரிய விதிகளைப் பின்பற்றி வழிபடவேண்டும்.

அவ்வகையில், நந்தியம்பெருமானின் காதுகளில் நம்முடைய வேண்டுதல்களைக் கூறுவது என்பது குறித்து ஆகமங்களில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே விதிக்காததைச் செய்வது என்பது பலன் அளிக்காது.

? தை அமாவாசை, மாசி மகம் போன்ற நாள் களில் பித்ரு காரியங்கள்- முன்னோர் வழிபாடு களைச் செய்ய முடியாதவர்கள், வேறோர் அமாவாசை நாளில் செய்யலாமா?

-எல்.கார்த்திகேயன், முசிறி

! வருடம்தோறும் செய்யும் சிராத்தம் போன்ற வற்றைத் தவிர்க்க முடியாத காரணங்களால் செய்ய முடியவில்லை எனில், அடுத்து வரக் கூடிய ஏகாதசி, சிராத்த திதியில் செய்யலாம். தீட்டு, போன்றவை இருப்பின் அது முடிந்தவுடன் செய்யவும். தை அமாவாசை, மாசி மகம் போன்ற பித்ருக்களுக்கான நாள்கள் அப்படி அல்ல. அடுத்த அமாவாசையில் செய்வது தை அமாவாசையில் செய்வதற்கு நிகராகாது.

? கோயிலில் தெய்வச் சிலைகளைத் தொட்டு வணங்கலாமா?

- வி.ரேணுகா, தேனி

! ஆலயங்களில் அர்ச்சகரால் உலக மக்கள் நன்மைக்காக அனுதினமும் அர்ச்சனைகள், பூஜைகள் நடைபெற்று வருகின்றன. நமக்காகத் தானே வழிபாடுகள் நடைபெறுகின்றன. இந்த பூஜைப் பொருள்களை நான்தானே கொடுத்தேன். நான் அதிகாரம் படைத்தவன், என்னை யாரும் கேட்க முடியாது என்று நினைக்கக் கூடாது.

நமது அறியாமையால் ஆகமங்களுக்கு எதிரான காரியங்கள் நடைபெற்றால், அங்குள்ள தெய்வச் சாந்நித்தியம் குறைந்து போகும்; அதற்கு நாம் காரணமாகி விடுவோம். இதனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் நம்மைப் பாதிக்கும்; சந்தேகம் வேண்டாம். அனைத்து ஜீவன்களுக்கும் நடைபெறும் வழிபாட்டை நமது அறியாமையால் மாற்றுவது தவறு. ஆகமங்கள் வழியே பிரதிஷ்டை செய்யப்பட்ட தெய்வ வடிவங்களைக் கண்டிப்பாகத் தொடக்கூடாது.

சிலர் அவர்கள் குடும்பத்துக்கென உருவாக்கிய குல தெய்வ ஆலயங்கள் மற்றும் பஜனை மடங்கள் போன்ற வற்றில், அங்குள்ள தெய்வங்களை அந்த ஆலயத்தை நிர்வகிக்கும் பெரியவர்கள் அனுமதித்தால் தொட்டு வழிபடலாம். நம் வீட்டில் உள்ள பணப் பெட்டியை நாம் தொடலாம். வேறொருவர் வீட்டில் உள்ள பணப் பெட்டியையோ, வங்கியில் உள்ள பணப் பெட்டகத்தையோ நாம் தொடு வது தவறு. ஆகவே, ஆகம விதிப்படி பிரதிஷ்டை செய்யப்பட்ட தெய்வ வடிவங்களைத் தொடுவது கூடாது.

? வேண்டுதல் நிறைவேறாவிட்டால் அதற்காக எடுத்துவைத்த காணிக்கையை என்ன செய்யலாம்?

- சி.பச்சையப்பன், வள்ளியூர்

! நம் முயற்சிக்கும் பக்திக்கும் ஏற்பவே ஆண்டவன் பலன் அளிக்கிறார் என்கிறது ஆன்மிகம். நாம் வேண்டுவது அனைத்துமே நடைபெற வேண்டும் என்பது அவசியம் இல்லை. பலர், நான் கடவுளுக்குச் செய்தேன்; அவர் எனக்கு ஒன்றுமே செய்யவில்லை, நான் ஏன் அவரை வழிபட வேண்டும் என்று கேட்பதை அறிவேன். நாம் அளிக்கும் பொருளுக்காக கடவுள் நமக்கு அருளுவார் என்று நினைப்பது அறிவுடைய செயல் இல்லை.

ஒரு வேண்டுதலுக்காக இதைச் செய்கிறோம் என்று சொல்லிவிட்டு அதை செய்யாமல் போவது என்பது சத்தியத்தை மீறிய செயலே ஆகும். நமது சத்தியத்தை நிலைநிறுத்த சுவாமி பல வகைகளில் நம்மைச் சோதிப்பார். கலங்காது நின்று சுவாமியிடம் சத்தியத்தின் வழியே நம்பிக்கை வைப்பதே நல்லது. நம்முடைய தாய், தந்தையைப் போல நினைத்து கடவுளிடம் சொன்ன படியே நடப்பதே சிறந்தது. வேண்டுதல் நிறைவேறா விட்டாலும் உங்கள் காணிக்கையை செலுத்திவிடுங்கள். எதிர்காலத்தில் மிகப் பெரிய பலனை இதனால் நீங்கள் அடையலாம்.

- பதில்கள் தொடரும்...

தானம் தரும் பலன்கள்!

தானம் செய்வதால், தானம் பெறுபவர் வாழ்த்தினாலும் வாழ்த்தா விட்டாலும் தானம் செய்பவர் நிச்சயம் பலன் பெறுவார். புண்ணியமும் வந்து சேரும் என்று நம் முன்னோர் கூறியுள்ளனர்.
ஞானநூல்கள் சொல்லும் சில தானங்களையும் பலன்களையும் அறிவோம்.

வஸ்திர தானம்: ஆயுள் விருத்தி.

பூமி தானம்: பிரம்மலோகத்தைத் தரும்.

வெண்கலப்பாத்திரத்தில் தேனை வைத்து தானம் செய்தல்: புத்திர பாக்கியம் உண்டாதல்.

நெல்லிக்காய் தானம்: ஞானம் தரும்.

கோயிலில் தீப தானம்: உயர்ந்த பதவி கிடைக்கும்.

விதை, வித்துக்கள் தானம்: தீர்க்காயுள், சந்ததி விருத்தி.

அரிசி தானம்: பாவம் போகும்.

பழம், தாம்பூல தானம்: ஸ்வர்க்கம் தரும்.

கம்பளி தானம்: வாயுரோகம் நீங்கும்.

அன்னதானம்: நினைத்தது கிட்டும்.