Published:Updated:

ஒருவர் ஆன்மிக மார்க்கத்தில் உயர்வு பெற கட்டுப்பாடுகள் ஏன்?

ஆன்மிகம்
ஆன்மிகம்

முயற்சி என்பது நம்முடையது. அதனுடன் ‘திரு’ என்ற தெய்வ சக்தியும் இணையும்போது, வினையானது நல்லவிதமாக நிறைவுபெறுகிறது.

ஆன்மிகம் தொடர்பான அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் தருகிறார், சென்னை 'காளிகாம்பாள் கோயில்' சிவஸ்ரீசண்முக சிவாசார்யர். விரிவாக படிக்க க்ளிக் செய்க.. http://bit.ly/2mm6sGT

? விதிப்படிதான் வாழ்க்கை என்றால் மனிதனின் திறமைக்கும் முயற்சிக்கும் அவசியம் என்ன?

- ஆர்.பொற்செல்வி, சென்னை - 40

விதி நமக்குச் சூழ்நிலையை உருவாக்கிக் கொடுக்கிறது. அந்தச் சூழ்நிலையில் நம்முடைய திறமையையும் முயற்சியையும் விடாமல் தொடர வேண்டும்.

விதையை நல்ல நிலத்தில் விதைத்தால் மட்டும் போதாது; தினமும் அதற்குத் தண்ணீர் விடவும் வேண்டும். காற்றும் சூரிய ஒளியும் அந்த விதை மரமாக வளர்வதற்கு எப்படி உதவுகின்றனவோ, அதேபோல் விதியுடன் நம்முடைய முயற்சியும் திறமையுமே சேர்ந்தேதான் நமக்குப் பலன் கொடுக்கின்றன. `விதி' என்று விட்டுவிடாமல், நம்மால் இயன்ற அளவு நம்முடைய ஆற்றலை வெளிப்படுத்துவது அவசியம்.

ஒருவர் ஆன்மிக மார்க்கத்தில் உயர்வு பெற கட்டுப்பாடுகள் ஏன்?

சிலநேரம் நாம், நம்முடைய முழு முயற்சி மற்றும் திறமையை அளித்தாலும், அந்தக் காரியம் முழுமை அடைவதில்லை. ஆனால், சில தருணங்களில் சிறிய முயற்சியிலேயே காரியம் கைகூடிவிடும். ஆக, விதிப்பயனை நல்ல வழியில் அடைந்திட, பக்தியுடன் கூடிய நம்முடைய செயல்கள் உதவும்.

முயற்சி என்பது நம்முடையது. அதனுடன் ‘திரு’ என்ற தெய்வ சக்தியும் இணையும்போது, வினையானது நல்லவிதமாக நிறைவுபெறுகிறது.

? ஒருவர் ஆன்மிக மார்க்கத்தில் உயர்வு பெற உண்ணாமல் விரதம் இருப்பது, உறங்காமல் விழித்திருப்பது, தாம்பத்திய உறவை மறுப்பது ஆகியவை முக்கியமாகச் சொல்லப்படுகின்றன. இந்த வழிமுறைகள் ஏன்?

இவை எல்லா ஜீவராசிகளுக்கும் பொது. பசி, தூக்கம், தாம்பத்திய உறவு போன்றவை அவரவர் பிறந்த பிறவியில் அவர்களை நிலை நிறுத்தச்செய்கின்றன. ஆனால், நம்மை மேல் நோக்கிய பாதையில் அழைத்துச்செல்ல அவற்றைக் கட்டுப்படுத்தவேண்டியது மிகவும் அவசியமானது. கூடவே கூடாது என்று சொல்லப்படவில்லை; கட்டுப்பாடு தேவை என்றே வழிகாட்டல் இருக்கிறது.

இந்திரியங்களின் வழியே நம் மனம் சென்றுவிட்டால், தெய்விக அனுபவத்தைப் பெறுவது கடினமாகிவிடும். எனவே, விரத காலங்களில் நம் மனத்தைக் கட்டுப்படுத்துவதற்கு இதுபோன்ற பயிற்சிகள் நமக்கு உதவும். இல்லற தர்மத்தைக் காக்க வேண்டியதும் நம் கடமை.

ஒருவர் ஆன்மிக மார்க்கத்தில் உயர்வு பெற கட்டுப்பாடுகள் ஏன்?

முற்றும் துறந்த ஞானிகளுக்கு அனைத்துக் காலங்களிலும் கட்டுப்பாடு அதிகம். இல்லறத்தில் இருப்பவர்களுக்கு முக்கியமான விரத காலங்களில், இதுபோன்ற பயிற்சிகள் மனக் கட்டுப்பாட்டை அளிக்கின்றன.

?இறைவனை வடிவங்களுக்கு அப்பாற்பட்டவர் என்றும் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவர் என்றும் சொல்வர். எனில், அவருக்கென்று ஒரு வடிவம் கொடுப்பதும் அவரை தரிசிக்கக் கோயிலுக் குச் செல்வதும் ஏன்?

? விதிப்படிதான் வாழ்க்கை என்றால் மனிதனின் திறமைக்கும் முயற்சிக்கும் அவசியம் என்ன?

? நல்ல நோக்கத்துடன் நாம் செய்யும் வழிபாட்டுக்கு உரிய பலன் கிடைக்காவிட்டால், மனம் பக்தியின் பிடியில் இருந்து நழுவி விடுகிறதே... இதற்கு என்ன செய்வது?

- இந்தக் கேள்விகளுக்கு சக்தி விகடன் இதழில் சென்னை 'காளிகாம்பாள் கோயில்' சிவஸ்ரீசண்முக சிவாசார்யர் அளித்துள்ள பதில்களை முழுமையாக வாசிக்க > கேள்வி - பதில்: உடலைப் பிரிந்தபின் உயிரின் நிலை என்ன? https://www.vikatan.com/spiritual/gods/spiritual-questions-and-answers-3

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் சிறப்புக் கட்டுரைகள்! > ரூ.200 மதிப்பிலான் ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2mjxazv

அடுத்த கட்டுரைக்கு