Published:Updated:

உதவலாம் வாருங்கள்!

வாசகர்களின் ஆன்மிகப் பகிர்வுகள்

பிரீமியம் ஸ்டோரி

ஆலயங்கள், சமய இலக்கியங்கள், சாஸ்திரங்கள் மற்றும் புராண நூல்கள் குறித்த ஆன்மிகத் தகவல்கள் மற்றும் வாசகர்களின் சந்தேகங்களுக்கு வாசகர்களே தகவல் பகிரும் பகுதி இது. ஆன்மிகம் தொடர்பான உங்களின் சந்தேகங்கள், தேவைப்படும் தகவல்களை நீங்கள் கேள்வியாகக் கேட்கலாம். அத்துடன் இங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு, துல்லிய விவரங்களை - பதில்களை நீங்கள் அறிந்திருந்தால் அவற்றையும் பகிரலாம்.

ஶ்ரீதட்சிணாமூர்த்தி
ஶ்ரீதட்சிணாமூர்த்தி
ஓவியர் பத்மவாசன்

ம்ஸ்கிருதத்தில் `ச' என்ற அட்சரத்துக்கு உரிய அம்பிகை ஶ்ரீதேவி. மங்கள கௌரி என்றும் சொல்வார்கள். இந்த அம்மனுக்குரிய அட்சர பீடம் உஜ்ஜயினியில் இருப்பதாக அறிகிறேன். அந்த ஊரில் எந்த கோயிலில் இந்த அம்பிகை அருள்கிறாள், இந்த தேவிக்கான வழிபாட்டுச் சுலோகம் என்ன எனப்போன்ற தகவல்கள் தேவை.

- கே.பத்மநாபன், கோவை-2

சித்தபுருஷர்களில் அநாதிச் சித்தரின் சரிதத்தைப் படிக்க விரும்புகிறோம். இவரின் முழுமையான சரிதம் எந்த நூலில் உள்ளது; இவருக்கான ஜீவ சமாதித் தலம் எங்குள்ளது. விவரம் அறிந்தவர்கள் தகவல் பகிருங்களேன்.

- எம்.குமார், நாகர்கோவில்

ங்களின் குலதெய்வம் கொன்றையாண்டி ஐயனார். நெல்லை ஶ்ரீவைகுண்டம் பூர்வீகம். மாசி சிவராத்திரியில் வீட்டில் வழிபடுகிறோம். எனினும் கோயிலுக்கு நேரில் சென்று தரிசிக்க விரும்புகிறோம். இவருக்கான கோயில் ஶ்ரீவில்லிப்புத்தூர் அருகில் உள்ளது என்று அறிகிறோம். ஆலய அமைவிடம் குறித்து துல்லியமான விவரம் அறிந்தோர் தகவல் பகிர்ந்தால் பயனுள்ளதாக இருக்கும்.

- கே.முருகன், சென்னை-106

சோழர்களின் வழிபாட்டுத் தெய்வமான நிதும்பசூதனி அம்பிகையின் சரிதமும் வழிபாட்டு ஸ்லோகங்களும் தேவை. அதேபோல் நிதும்பசூதனிக்கு எங்கெல்லாம் ஆலயம் அமைந்துள்ளன என்ற விவரமும் தேவை.

- சி.சிவபாலன், கடலூர்

ப்தரிஷிகளைப் போற்றும் துதிநூல்கள் வழிபாட்டு விவரங்கள் எங்கு கிடைக்கும். மேலும் சப்தரிஷிகள் வழிபட்ட ஆலயங்கள் குறித்த தகவலும் தேவை.

- பி.பொன்னப்பன், திருநெல்வேலி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஶ்ரீசக்தி தட்சிணாமூர்த்தி

சக்திவிகடன் 16.11.21 தேதியிட்ட இதழில், 'தேவியுடன் ஶ்ரீதட்சிணாமூர்த்தி பகவான் அருளும் தலங்களின் விவரம் தேவை' என திருச்சி வாசகர் அ.திருமலை கேட்டிருந்தார். அவருக்குக் கீழ்க்காணும் விவரங்களை திருநெல்வேலி வாசகர் தெ.நமசிவாயம் பகிர்ந்துள்ளார்.

‘தட்சிணம் என்றால் தெற்கு எனப் பொருள். ஞானத் திருவடிவினராக வணங்கப்படும் தெய்வம் தட்சிணாமூர்த்தி.

வெளித் தோற்றத்தில் சலனம் இல்லாத சிவவடிவாகத் தோன்றினாலும் உள்ளே ஞானமே வடிவான அருட்சக்தி நிறைந்த சிவ வடிவம் இது.

சில தலங்களில் சக்தியோடு அருள்கிறார் தட்சிணாமூர்த்தி.

சக்தி தட்சிணாமூர்த்தி கோட்ட தெய்வமாக அருளும் தலம் சுருட்டப்பள்ளி.

திருவிடைமருதூர் தலத்தில் சாம்பவி தட்சிணாமூர்த்தி சுதைச் சிற்பமாக அருள்கிறார்.

வாணியம்பாடி சிவாலயத்தில் சக்தி தட்சிணாமூர்த்தியின் உலா திருமேனி உள்ளது.

திருக்கள்ளில் - திருக்கண்டலம் சிவானந்தேஸ்வரர் ஆலயத்தில் சக்தி தட்சிணாமூர்த்தி தனிச் சந்நிதியில் அருள்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு