திருத்தலங்கள்
ஜோதிடம்
Published:Updated:

மனநிம்மதியும் சந்தோஷமும் அள்ளித் தரும் சந்திர பகவான் அபூர்வ துதிப்பாடல்!

சந்திரன்
பிரீமியம் ஸ்டோரி
News
சந்திரன்

சித்ரா பெளர்ணமியில் படிக்கவேண்டிய துதிப்பாடல்

சந்திரன் மனோகாரகன்; மனித மனத்தை இயக்குபவன். கடக ராசியான ஜல ராசி சந்திரனின் இருப்பிடம் என்கிறது ஜோதிடம். செடி- கொடிகளின் மருத்துவக் குணத்தை, சந்திரனின் கிரணங்கள் உருவாக்குகின்றன என்று சில ஞானநூல்கள் விளக்குகின்றன.

சித்ரா பெளர்ணமி - சித்தர்கள் போற்றும் திருநாள். அம்பாளை வழிபட உகந்த புண்ணிய தினம். சித்ரகுப்தர் வழி பாட்டுக்கும் உரிய நாள். இந்த தினத்தில் சந்திரனையும் வழிபடச் சொல்கின்றன ஞானநூல்கள்.

ஈசனின் சிரசில் சந்திரன் வீற்றிருப் பதால், சந்திரசூடன் என சிவனாருக்குத் திருநாமம் உண்டு. அதேபோல், அம்பாளின் சிரசிலும் விநாயகரின் சிரசிலும்கூட சந்திரன் வீற்றிருக்கிறான் என்கிறது புராணம். ஶ்ரீமந் நாராயணரின் கண்ணாகத் திகழ்கிறது எனச் சந்திரனைக் குறிப்பிடுவர்.

ஶ்ரீராமனை ஶ்ரீராமச் சந்திர மூர்த்தி என்று சிறப்பிப்பார்கள். ஆக, சித்ரா பெளர்ணமி தினத்தில் சந்திரனைப் போற்றி வழிபடுவதால், சகல தெய்வங் களின் அனுக்கிரஹத்தையும் பெறலாம்.

நல்ல காரியங்களைச் செயலாற்ற, சந்திர பலம் வேண்டும் என்கிறது சாஸ்திரம். சந்திர பலம் இருந்துவிட்டால், மனமானது ஈடுபாட்டுடன் செயலாற்றும். அந்தச் செயல் பூரண வெற்றியைப் பெறும். ஆக, மனமது செம்மையுற சந்திர வழிபாடு துணை செய்யும்.

திங்கள்கிழமை, சந்திரனுக்கு உரிய நாள். அன்றைய தினத்தில், ‘ஸம் ஸோமாய நம:’ என்று சொல்லி, 16 வகை உபசாரங்களை நடைமுறைப் படுத்தி வழிபடலாம். நாள்காட்டியில் சந்திர தரிசன நாள்களைக் குறிப்பிட்டிருப் பார்கள்,

அந்த தினங்களில் சந்திரனை தரிசித்து வணங்கலாம். அதேபோல் சந்திராஷ்டம தினங்களில் மனச் சோர்வு நீங்கிட, சந்திர பகவானை வழிபட வேண்டும்.

முழு நிலவு ஒளிரும் பெளர்ணமி நாள்கள் சந்திர வழிபாட்டுக்கு உகந்தவை. குறிப்பாக சித்ரா பெளர்ணமித் திருநாள் மிகவும் விசேஷமானது.

அன்று, கைகள் புஷ்பத்தை அள்ள, மனம் சந்திரனின் திருப்பெயரை அசைபோட, அவருடைய திருமேனியில், புஷ்பத்தைச் சமர்ப்பித்து வழிபடுவது விசேஷம். அவருக்கே உண்டான மென்மை மலர்களில் உண்டு. அதனை, அவரிடமே சமர்ப்பிப்பது, மனதுள் அவரது இயல்பை வரவழைக்கிற காரியம் ஆகும்.

மே-5 வெள்ளிக்கிழமை அன்று சித்ரா பெளர்ணமித் திருநாள். அன்றைய தினம் சந்திர பகவானைப் போற்றி வழிபட் டால் வாழ்வில் சந்தோஷம் பொங்கிப் பெருகும். அன்று சந்திர அஷ்டோத்ர சத நாமாவளி துதிகளைச் சொல்லி போற்றி கூறி வழிபடுவதால், மன நிம்மதி உண்டாகும்; சகல மங்கலங் களும் கைகூடும்.

சந்திர அஷ்டோத்ர சத நாமாவளி

ஓம் ஶ்ரீமதே நம:

ஓம் சசதராய நம:

ஓம் சந்த்ராய நம:

ஓம் தாராதீசாய நம:

ஓம் நிசாகராய நம:

ஓம் ஸுதாநிதயே நம:

ஓம் ஸதாராத்யாய நம:

ஓம் ஸத்பதயே நம:

ஓம் ஸாதுபூஜிதாய நம:

ஓம் ஜிதேந்திரியாய நம: 10

ஓம் ஜயோத்யோகாய நம:

ஓம் ஜ்யோதிச்சக்ர ப்ரவர்தகாய நம:

ஓம் விகர்தநாநுஜாய நம:

ஓம் வீராய நம:

ஓம் விச்வேசாய நம:

ஓம் விதுஷாம்பதயே நம:

ஓம் தோஷாகராய நம:

ஓம் துஷ்டதூராய நம:

ஓம் புஷ்டிமதே நம:

ஓம் சிஷ்டபாலகாய நம: 20

ஓம் அஷ்டமூர்த்திப்ரியாய நம:

ஓம் அனந்தாய நம:

ஓம் கஷ்டதாருகுடார காய நம:

ஓம் ஸ்வப்ரகாசாய நம:

ஓம் ப்ரகாசாத்மனே நம:

ஓம் த்யுசராய நம:

ஓம் தேவபோஜனாய நம:

ஓம் கலாதராய நம:

ஓம் காலஹேதவே நம:

ஓம் காமக்ருதே நம: 30

ஓம் காமதாய நம:

ஓம் ம்ருத்யுஸம்ஹாரகாய நம:

ஓம் அமர்த்யாய நம:

ஓம் நித்யானுஷ்டான தாயகாய நம:

ஓம் க்ஷபாகராய நம:

ஓம் க்ஷீணபாபாய நம:

ஓம் க்ஷய வ்ருத்தி ஸமன்விதாய நம:

ஓம் ஜைவாத்ருகாய நம:

ஓம் சுசயே நம:

ஓம் சுப்ராய நம: 40

ஓம் ஜயினே நம:

ஓம் ஜயபலப்ரதாய நம:

ஓம் ஸுதாமயாய நம:

ஓம் ஸுரஸ்வாமிநே நம:

ஓம் பக்தானாமிஷ்ட தாயகாய நம:

ஓம் பக்திதாய நம:

ஓம் முக்திதாய நம:

ஓம் பத்ராய நம:

ஓம் பக்த தாரித்ரிய பஞ்ஜனாய நம:

ஓம் ஸாமகான ப்ரியாய நம: 50

ஓம் ஸர்வ ரக்ஷகாய நம:

ஓம் ஸாகரோத்பவாய நம:

ஓம் பயாந்தக்ருதே நம:

ஓம் பக்திகம்யாய நம:

ஓம் பவபந்தவிமோசனாய நம:

ஓம் ஜகத் ப்ரகாச கிரணாய நம:

ஓம் ஜகதானந்த காரணாய நம:

ஓம் நிஸ்ஸபத்னாய நம:

ஓம் நிராஹாராய நம:

ஓம் நிர்விகாராய நம: 60

ஓம் நிராமயாய நம:

ஓம் பூச்சாயாச்சாதிதாய நம:

ஓம் பவ்யாய நம:

ஓம் புவனப்ரதிபாலகாய நம:

ஓம் ஸகலார்திஹராய நம:

ஓம் ஸெளம்ய ஜனகாய நம:

ஓம் ஸாதுவந்திதாய நம:

ஓம் ஸர்வாகமக்ஞாய நம:

ஓம் ஸனகாதிமுனி ஸ்துத்யாய நம:

ஓம் ஸிதச்சத்ர

த்வஜோ பேதாய நம: 70

ஓம் ஸிதாங்காய நம:

ஓம் ஸிதபூஷணாய நம:

ஓம் ச்வேத மால்யாம்பர தராய நம:

ஓம் ச்வேதகந்தானு லேபனாய நம:

ஓம் தசாச்வ ரத ஸம்ரூடாய நம:

ஓம் தண்டபாணயே நம:

ஓம் தனுர்தராய நம:

ஓம் குந்தபுஷ்போ ஜ்வலாகராய நம:

ஓம் நயனாப்ஜ ஸமுத்பவாய நம:

ஓம் ஆத்ரேய கோத்ரஜாய நம: 80

ஓம் அத்யந்தவினயாய நம:

ஓம் பிரிய நாயகாய நம:

ஓம் கருணாரஸ ஸம்பூர்ணாய நம:

ஓம் கர்கடப்ரபவே நம:

ஓம் அவ்யாய நம:

ஓம் சதுரச்ராஸனாரூடாய நம:

ஓம் சதுராய நம:

ஓம் திவ்ய வாஹனாய நம:

ஓம் விவஸ்வன் மண்டல

க்ஞேயவாஸாய நம:

ஓம் வஸுஸம்ருத்திதாய நம: 90

ஓம் மஹேச்வர ப்ரியாய நம:

ஓம் தாந்தாய நம:

ஓம் மேருகோத்ர ப்ரதக்ஷிணாய நம:

ஓம் க்ரஹமண்டல மத்யகாய நம:

ஓம் க்ரஸிதார்காய நம:

ஓம் க்ரஹாதிபாய நம:

ஓம் த்விஜ ராஜாய நம:

ஓம் த்யுதிலகாய நம:

ஓம் த்விபுஜாய நம:

ஓம் த்விஜ பூஜிதாய நம: 100

ஓம் ஒளதும்பர நகாவாஸாய நம:

ஓம் உதாராய நம:

ஓம் ரோகிணீ பதயே நம:

ஓம் நித்யோதயாய நம:

ஓம் முனிஸ்துத்யாய நம:

ஓம் நித்யானந்த பலப்ரதாய நம:

ஓம் ஸகலாஹ்லா தனகராய நம:

ஓம் பலாசஸ்மித ப்ரியாய நம: 108