கேரளம் என்றதுமே தென்னந்தோப்புகளும் பசுமை சூழ்ந்த மலைக் கிராமங்களும், வற்றாத நதிகளும், குருவாயூர், சபரிமலை போன்ற தலங்களும் புகழ்பெற்ற உற்சவங்களுமாக பல விஷயங்கள் நம் மனத்தில் நிழலாடும்.

கடவுளின் தேசம் எனும் போற்றுதலுக்குரிய கேரளம், தனக்கென விசேஷ கலாசார அமைப்பினைக் கொண்டது. மேலும் தனிப்பட்ட சரித்திரம், ஐதிகம், வழிபாட்டு நம்பிக்கைகள் என அதன் ஒவ்வொரு சிறப்பம்சமும் நம்மை வியப்பில் ஆழ்த்தும். அவற்றையொட்டிய திருக்கதைகளோ நம்முள் சிலிர்ப்பை விதைக்கும்.

கதை சொல்வதும் கேட்பதும் நமக்குப் புதிதல்லவே! வாருங்கள், கேரளத்துக்கே உரித்தான ஐதிகங்களை - நம்பிக்கைகளைத் தேடிப் பயணிக்கலாம்; அவற்றின் காரணக் கதைகளை ஆய்ந்தறிந்து பிரமிக்கலாம்.

அவ்வகையில் நாம் முதலில் செல்லப்போவது சூர்ய காலடி இல்லத்துக்கு!

கேரளத்தின் புகழ்பெற்ற நம்பூதிரி இல்லங்களில் ஒன்று சூர்ய காலடி என்று அழைக்கப்பட்ட இல்லம். சாட்சாத் சூரியபகவானே நேரில் தோன்றி அவர்களுக்கு மந்திர க்ரந்தம் ஒன்றைக் கொடுத்து அருள்புரிந்தாராம்.

சூரியனின் காலடி பட்டதாலேயே இந்த இல்லத்துக்குச் `சூர்ய காலடி’ என்று பெயர் வாய்த்ததாம். அதிஅற்புதமான மஹா கணபதி ஹோமத்தால் பெயர்பெற்றது சூர்ய காலடி இல்லம்.

இன்றும் இந்த இல்லத்தில் விநாயகர் சதுர்த்திக்கும் மற்ற விசேஷ காலங்களிலும் யானையை முன் நிறுத்தி, பிரத்யக்ஷமாக கணபதி ஹோமம் நிகழ்கிறது.

இந்தக் குடும்பத்தில் தோன்றிய நம்பூதிரி ஒருவருக்கு ஒரு தென்னந்தோப்பு இருந்தது. மூத்த செக்கன் என்பவனே இந்தத் தோப்புக்குக் காவலாளியும் பொறுப்பாளியுமாவான்.

தினமும் இரவில் அவன் குளிருக்கு இதமாக, தென்னை மட்டைகளைச் சேர்த்து நெருப்பு மூட்டி குளிர்காய்வான். தரையில் உதிரும் நத்துக்காய்களை உரித்து, கொப்பரைகளை தீயில் சுட்டு பாதியைத் தின்று பசியாறுவான்.

ஒருநாள், அவன் தேங்காயைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, திடுமென அவனுடைய பின்புறத்திலிருந்து ஒரு தும்பிக்கை மட்டும் நீண்டது. மூத்தசெக்கன் பயந்துபோனான்.

பின்னர் ஒருவாறு தன்னை ஆசுவாசப் படுத்திக்கொண்டு, துதிக்கையில் தேங்காய்த் துண்டங்களை வைத்தான். மறுகணம் அந்த இடத்தில் தும்பிக்கை மட்டுமல்ல அழகான குட்டி யானை ஒன்று தென்பட்டது. மிகவும் அழகான அந்த யானைக்குட்டியை மூத்தசெக்கனுக்கு மிகவும் பிடித்துப்போய்விட்டது. ஓடிச் சென்று அன்புடன் தழுவிக்கொண்டான்.

அதன் பிறகு நாள்தோறும் அந்தத் தோப்பில் குட்டியானையின் விஜயம் நிகழ்ந்தது. இது, அவனைத் தவிர வேறு எவருக்கும் தெரியாது.

ஒரு நாள் அதிகாலை! சூர்யகாலடி இல்லத்தின் நம்பூதிரி, மூத்தசெக்கனிடம் குட்டியானை தேங்காய் வாங்கி உண்ணும் காட்சியைப் பார்த்து விட்டார். `இது ஏதோ தெய்விக நிகழ்வு’ என்று மனம் சொல்ல, மூத்தசெக்கனிடம் சென்று யானையைத் தன்னிடம் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொண்டார்.

அவன் மறுத்தான். அவனுக்கு ஏராளமான பொன் பொருளைக் கொடுத்து சம்மதிக்க வைத்தார் நம்பூதிரி. ஆனால் குட்டி யானை அவனைவிட்டு விலகுவதாக இல்லை.

இல்லத்துக்கு வந்ததும் யானை மகா கணபதியாக மாறி நின்றது. நம்பூதிரி சிலிர்த்துப்போனார். கணபதியை வணங்கினார்!

பின்னர், நம்பூதிரி எரியும் நெருப்புடனும் தேங்காய்க் கொப்பரைகளுடனும் கூடிய ஒரு தொட்டியைக் கொண்டு வந்து காட்டினார். தொடர்ந்து யானையிடம், ``ஐயா! நீர் என்னுடன் வரவேண்டும்’’ என்றார். இப்போது அந்தக் குட்டி யானை நம்பூதிரியைப் பின் தொடர்ந் தது. இல்லத்துக்கு வந்ததும் யானை மகா கணபதியாக மாறி நின்றது.

நம்பூதிரி சிலிர்த்துப்போனார். கணபதியை வணங்கினார். அங்கேயே பிள்ளையாருக்கு மந்திரபூர்வமாகவும் விதி பூர்வமாகவும் ஹோமம் செய்து வழிபட்டார்.

“இனி நான் உன் இல்லத்திலேயே குடியிருப்பேன். என்னை விதிப்படி வணங்குவோர்க்கு எல்லா நலமும் தருவேன்” என்று அருளி மறைந்தார் கணபதி.

நம்பூதிரியும் விநாயகரை அங்கேயே பிரதிஷ்டை செய்து, தின மும் விதிப்படி ஹோமங்கள் செய்து, மகாகணபதியின் பேரருளுக்குப் பாத்திரரானார். கணபதியின் அருளால் சூர்யகாலடி இல்லத்தில் அற்புதங் கள் தொடர்ந்தன!

விருந்து வைத்த விநாயகர்!

பிள்ளையார் அருளால் சூர்ய காலடி இல்லத்தின் புகழ் திக்கெட்டும் பரவியது. இதைக் கண்டு மற்ற நம்பூதிரிகள் பொறாமை கொண்டனர்.

ஒருமுறை, திருவிதாங்கூர் மன்னர் குமார நல்லூர் பகவதியை வணங்குவதற்காக விஜயம் செய்திருந்தார். சூர்ய காலடி இல்லத்தாரைப் பழிவாங்க இதுவே தருணம் என்று எண்ணினர் மற்ற நம்பூதிரிகள்!

ஆகவே மன்னரிடம் சென்று, “மன்னா! தாங்களும் தங்களின் பரிவாரமும் இன்று சூர்யகாலடி இல்லத்துக்கு வந்து அங்கே உணவருந்திச் செல்ல வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்தனர்.

மன்னர் மற்றும் அவரின் பரிவாரத்துக்கு விருந்து உபசாரம் செய்வது எளிதான காரியமா? சூர்ய இல்லத்தார் திணறிப்போவார்கள்; மன்னரின் கோபத்துக்கு ஆளாவார்கள் என்பதே நம்பூதிரிகளின் திட்டம். இதை அறியாத மன்னர் அவர்களின் கோரிக்கையை ஏற்று, மறுநாள் மதியம் சூர்யகாலடி இல்லத்துக்கு வருவதாக செய்தி அனுப்பினார்.

அந்த இல்லத்தார் திகைத்தனர். திக்கற்றவர் களுக்குத் தெய்வம்தானே துணை! மறுநாள் காலை யில், கணபதி ஹோமம் முடிந்ததும் தங்களின் மனக்குறையை பிள்ளையாரிடம் சமர்ப்பித்தனர்.

கேரளத்தில் படகுப் போக்குவரத்து அதிகம் உள்ள பகுதி அது. வழிபாடு முடிந்த நிலையில் ஒரு படகு வந்து சேர்ந்தது. மனநலம் குன்றிய தங்களின் பிள்ளையோடு ஒரு குடும்பத்தினர் அந்தப் படகில் வந்திருந்தனர். பிள்ளையின் சிகிச்சைக்கும் பரிகார பூஜைகளுக்கும் நாளாகலாம் என்பதால், பல மாதங் களுக்குத் தேவையான உணவுப் பண்டங்களை - தானியங்களை அவர்கள் கொண்டுவந்திருந்தனர்.

பிள்ளையின் பிரச்னையைக் கேட்டறிந்த சூரிய காலடி இல்ல நம்பூதிரி, கணபதி வழிபாட்டில் நைவேத்தியத்துக்காக வைத்திருந்த வாழைப்பழத்தை எடுத்து, அவனுக்குக் கொடுத்தார். கணபதி அற்புதம் நிகழ்த்தினார். பழத்தைச் சாப்பிட்ட பிள்ளையின் மனநிலை - உடல்நிலை பூரணமாகக் குணமானது.

ஆனந்தத்தில் திளைத்த அவன் குடும்பத்தார், தாங்கள் கொண்டு வந்த பொருள்களைச் சூரிய காலடி இல்லத்தாரிடம் காணிக்கையாகச் சமர்ப் பித்துவிட்டுச் சென்றனர். அவற்றைக் கொண்டு மன்னருக்கும் பரிவாரத்துக்கும் அற்புதமாக விருந்து படைத்தது சூரியகாலடி இல்லம். பின்னர் நடந்ததை அறிந்து அவர்களுக்குப் பரிசுகள் பல கொடுத்து, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தினார் மன்னர். இந்தச் சம்பவம் மட்டுமா?

குட்டிச்சாத்தான்களையே வேலை வாங்கும் வல்லமை பொருந்திய போத்தி ஒருவருக்கு, இந்த இல்லத்தில் கிடைத்த அனுபவம் அசாத்தியமானது.

அந்தக் கதையை அடுத்த இதழில் காண்போம்.

- தொடரும்...

சுந்தரகாண்டம் பாராயணம்!

சீதாதேவி இருக்கும் இடத்தைக் கண்டறிந்து சொல்லி, ராமனுக்கு மகிழ்வைத் தந்தவர் அனுமன். திக்குத் தெரியாமல் தவிக்கும் பக்தனை சரியான திசையில் செல்வதற்கு சுந்தர காண்டப் பாராயணம் உதவும்.

நாள் ஒன்றுக்கு ஏழு சர்க்கங்களாக பாகுபடுத்திப் பாராயணம் செய்யலாம் ‘ஸப்த ஸர்க்க பாராயணம்’ என்று சிறப்பாகக் கூறுவார்கள். பல அலுவல்களில் ஈடுபட்டிருக்கும் இன்றைய தலைமுறையினருக்குக் கால அவகாசம் கிடைப்பது அரிது. ஆகையால் விருப்பப்படி கால அவகாசத்தை ஏற்படுத்திக் கொண்டு சிறிய சிறிய பகுதியாகவும் பாராயணம் செய்யலாம். பாராயணம் முடிந்ததும் சித்ரான்னங்கள் படைத்து வழிபட்டு ஏழைகளுக்கு விநியோகம் செய்யலாம்.