Published:Updated:

பெருந்தச்சன்!

கேரளக் கதைகள்
பிரீமியம் ஸ்டோரி
News
கேரளக் கதைகள்

கேரளக் கதைகள் - 18 `சாஸ்தா வியாசர்' வி.அரவிந்த் சுப்ரமணியம் ஓவியம்: ஜெயசூர்யா

கேரளத்தின் மிக முக்கியமான வரலாற்று புருஷர்களில் ஒருவர் பெருந்தச்சன். இவரின் இயற்பெயர் ராமன் என்பார்கள். பெரும்-தச்சன் என்பது காரணப்பெயரே. இவர் வரருசியின் பன்னிரு புதல்வர்களில் ஒருவர். விஸ்வகர்ம சமுதாயத்தால் வளர்க்கப்பட்டு, கட்டடக் கலையில் பெரும் வல்லவராக விளங்கியவர்.

பெருந்தச்சன்!

லயங்கள், அரண்மனைகள் மற்றும் நீர் நிலைகள் என கேரளத்தில் பெருந்தச்சன் உருவாக்கிய அனைத்தும் இன்றைக்கும் அவரின் பெயரைப் பேசுகின்றன. பண்டைய நாட்களில் பிரமாண்டமான கோயில்கள் மற்றும் அரண்மனை வீடுகள் மிகப்பெரிய அளவில் கட்டப்பட்டன. மரங்களாலான இந்தக் கட்டுமானங்களுக்குத் திட்டமிடவும், பணிகளைத் திறம்படச் செய்யவும் திறமையான கலைஞரின் மேற்பார்வை அவசியமாகக் கருதப்பட்டது.

இந்த விஷயத்தில் அபரிமிதமான ஞானம் கொண்ட பெருந்தச்சனை எல்லோரும் கொண்டாடினார்கள். பெருந்தச்சன் கொள்கைப் பிடிப்பும் தெய்வ பக்தியும் மிகுந்தவர். எவ்வளவோ கட்டுமானங்களைக் கட்டியிருந்தாலும் தனக்கென்று ஒரு வீடு கூட கட்டிக்கொள்ளாதவர். ஆம்! ஆசையற்றவர் பெருந்தச்சன். அதேநேரம் தொழிலில் வெற்றியையும் புகழையும் அதிகம் விரும்பினார்.

ஒருமுறை உளியந்நூர் மக்கள் தங்கள் ஊரில் பெரும் குளம் ஒன்றை அமைக்கவேண்டும் என்று பெருந்தச்சனை அணுகி, அவரிடம் அந்தப் பணியை ஒப்படைத்தனர். அவர் தன் உதவியாளர்களின் உதவியுடன் வேலையைத் தொடங்கினார்.

முதல் நாள் அவர் வந்தபோது பெரியளவில் வரவேற்பு அளித்தனர் ஊர் மக்கள். அவர்களிடம் ``எப்படிப்பட்ட குளம் வேண்டும்?’’ என்று கேட்டார் பெருந்தச்சன்.

சிலர் சதுர வடிவத்தில் வேண்டும் என்றார்கள். வேறுசிலரோ செவ்வக வடிவம் என்றார்கள். மட்டுமன்றி `இல்லை... இல்லை... வட்ட வடிவில் தான் குளம் அமையவேண்டும்’ என்றும், `நீள் செவ்வகமாய் குளம் அமைந்தால்தான் நல்லது’ என்றும் ஆளாளுக்கு ஒரு கருத்தைச் சொன்னார்கள்.

பெரிதாகச் சிரித்த பெருந்தச்சன் எல்லோரையும் அமைதிப்படுத்தி, ``எல்லோருக்கும் திருப்தி தரும் விதமாக திருக்குளத்தை அமைப்பேன்’’ என்றார். சொன்னபடியே செய்தும் காட்டினார் பெருந்தச்சன். தாங்கள் விரும்பியபடியே திருக்குளம் அமைந்திருப்பது கண்டு ஊராருக்குத் திருப்தி.

வெவ்வேறு கோணங்களில் பார்த்தால் வெவ்வேறு வடிவத்தில் காட்சியளிக்கும் ஒரு தோற்ற மயக்கத்தை உருவாக்கி இருந்தார் பெருந்தச்சன். அனைவரும் பெருந்தச்சனை வாழ்த்தினர். அவரின் புகழ் நாளுக்குநாள் வளர்ந்தது.

பெருந்தச்சனுக்கு ஒரு மகன் இருந்தான். தந்தையைப் பின்பற்றி திறமைசாலியாக வளர்ந்தவன், நாளடைவில் அப்பாவைவிடவும் மகன் திறமைசாலி என்று பெயர்பெற்றான்.

ருமுறை பெருந்தச்சன் மகனுடன் பயணப்பட்டுக் கொண்டிருந்தார். வழியில் அவர்கள் ஒரு கிராமத்தை அடைந்தனர். அங்கு தச்சர்கள் சிலர் ஒரு கோயிலின் கூரையை உருவாக்கிக்கொண்டிருந்தனர். அந்தத் தச்சர்களுக்கு இவர்களை அடையாளம் தெரியவில்லை.

மரத்துண்டுகளை அளந்து குறியிடும் பணிகளைச் செய்து கொண்டிருந்தனர். அவர்களை வேடிக்கைப் பார்த்துக்

கொண்டிருந்தார் பெருந்தச்சன். நிறைவில் மரத்துண்டுகளை இணைத்து கூரை அமைக்கும் கட்டம் வந்தது. அவர்கள் கூரையை இணைக்கும்போது, துண்டுகள் சரியான அளவில் பொருந்தாததால் மிகவும் சிரமப்பட்டனர். நாள் முழுக்க செய்த வேலை வீணாகிவிடும் நிலை. அதனால் அவர்கள் பெரிதும் கவலை அடைந்தனர்.

அப்போது பெருந்தச்சன் தலையிட்டார். ``நான் பார்த்துக் கொள்கிறேன்’’ என்று கூறியபடி விறுவிறுவென மேலே ஏறினார். அனைத்து மரத் துண்டுகளையும் ஒரு விசித்திரமான வரிசையில் வைத்தார். பின்னர் தனது சுத்தியலால் மையத்தில் ஓர் அடி அடித்தார். சட் டென்று அனைத்து மரத்துண்டுகளும் ஒன்றுக்கொன்று இணைந்து பிரமீடு வடிவ அமைப்பை உருவாக்கின. அங்கிருந்த தச்சர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தார்கள்.

கீழே இறங்கி வந்தவர் மகனிடம் கேட்டார்: ``ஒரே ஒரு அடியில் கூரை கட்டும் புது உத்தியைப் பார்த்தாயா?”

“பார்த்தேன்... கற்றுக்கொண்டேன்...” என்றான் மகன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பெருந்தச்சன்!

ருமுறை கிராமத்துக்காரர்கள் சிலர் பெருந்தச்சனைச் சந்தித்தனர். அவர்கள் ஊரிலிருக்கும் ஆற்றின் நடுவே பாலம் அமைக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அந்தக் காலத்தில் ஆற்றுப் பாலம் அமைப்பது எளிதான காரியம் அல்ல. ஆனால், பெருந்தச்சன் சர்வசாதாரணமாக அந்தப் பணியைப் பூர்த்தி செய்தார். புதிய பாலம் விரைவில் உருவானது. அதிலும் வேடிக்கையாய் ஒரு கலைநுட்பத்தை அமைத்தார்.

அதாவது பாலத்தின் ஒரு முனையில் ஓரத்தில் பொம்மை ஒன்றை நிறுவியிருந்தார். மறு முனையில் பாலத்தில் ஒருவர் ஏறியதுமே இந்தப் பொம்மை இறங்கத் தொடங்கி தண்ணீருக்குள் மூழ்கும். அதன் வாயில் நீர் நிரம்பும். பாலத்தில் ஏறியவர் நடக்க நடக்க மேலே வரும் பொம்மை, அவர் அருகில் வந்ததும் வாயில் இருக்கும் நீரை அவர் மீது துப்பிவிடும். மக்கள் திக்குமுக்காடிப் போவார்கள்.

ஒருநாள் பெருந்தச்சனின் மகன் பாலத்தில் ஏறி நடந்து வந்தான். வழக்கம்போன்று பொம்மை இயங்கத் தொடங்கி, அவன் அருகில் வந்ததும் நீரை முகத்தில் உமிழ்ந்தது. தூரத்தில் நின்றிருந்த பெருந்தச்சன் அதைப் பார்த்து கைக்கொட்டிச் சிரித்தார். மகனுக்குப் பெருத்த அவமானமாக இருந்தது. ஆனாலும் வெளிக் காட்டிக்கொள்ளவில்லை. ஒரு புன்னகையோடு அங்கிருந்து நகர்ந் தான். மறுநாள் காலையில் பெருந்தச்சனின் பொம்மைக்கு எதிரில் இரண்டாவதாக ஒரு பொம்மை காணப்பட்டது.

ஒருவர் பாலத்தில் ஏறி நடக்கத் தொடங்கியதும் கீழே இறங்கி வாயில் தண்ணீருடன் மேலே வரும் முதல் பொம்மை, அந்த நபர் அருகில் வந்ததும் தண்ணீரை உமிழும் நேரத்தில், அதன் முகத்தில் இரண்டாவது பொம்மை ஓர் அறை கொடுத்தது. முதல் பொம்மையின் முகம் திரும்பிக்கொள்ள பாலத்தைக் கடப்பவர் தண்ணீர் படாமலும் அவமானத்துக்கு ஆளாகாமலும் கடக்க முடிந்தது. பெருந்தச்சனும் இரண்டாவது பொம்மையைப் பார்த்தார். அது தன் மகன் செய்த தந்திரம் என்பதை அறிந்தார்.

அவனிடம் தனது தோல்வியை அவர் ஏற்கவேண்டி வந்தது. என்றாலும், தந்தையை மிஞ்சிவிட்ட தனயனை நினைத்துப் பெருமிதம் கொண்டார். “அவன் என்னையும் வென்றுவிட்டான். ஏனென்றால், அவன் பெருந்தச்சனின் சிஷ்யன்” என்று பெருமையோடு சொன்னார்.