Published:Updated:

வெட்டுக்கிளியும் தர்ம சாஸ்திரமும்

ஆன்மிகக் கதை
பிரீமியம் ஸ்டோரி
ஆன்மிகக் கதை

ஆன்மிகக் கதை

வெட்டுக்கிளியும் தர்ம சாஸ்திரமும்

ஆன்மிகக் கதை

Published:Updated:
ஆன்மிகக் கதை
பிரீமியம் ஸ்டோரி
ஆன்மிகக் கதை

முற்காலத்தில் சாஸ்திர பண்டிதர் ஒருவர் இருந்தார். அவரிடம் வாதம் செய்து வெற்றிபெறுவது கடினம். எல்லாவற்றுக்கும் மாற்று தர்க்கத்தை முன்வைக்கும் அபூர்வ திறமை அவருக்கு உண்டு.

ஆன்மிகக் கதை
ஆன்மிகக் கதை


சிலநேரங்களில் அவரின் வாதம் தர்மத் துக்கு எதிரானதாகவும் இருக்கும். இப்படி தர்ம சாஸ்திரத்தை மாற்றிக்கூறுவது பாவம். ஆனால் அந்தப் பண்டிதரோ அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. அதன் விளைவாக பாவம் சேர, மீண்டும் பிறப்பெடுத்தார்.ஆனால் மனிதனாக இல்லை, பிற உயிர்க ளாகப் பிறக்க ஆரம்பித்தார்.

திருவள்ளுவர் ஒரு பிறப்பில் கற்ற கல்வி ஏழு பிறவிக்கும் தொடர்ந்து வரும் என்று கூறுவார். அதேபோல் இந்தப் பண்டிதரும் எப்பிறவி எடுத்தாலும் தன் முற்பிறவியையும் கற்ற கல்வியையும் மறக்காமல் இருந்தார்.

அப்படி ஒரு பிறவியில் வெட்டுக்கிளியாகப் பிறந்தார். ஒரு நாள் சாலையைக் கடக்க முயன்றது அந்த வெட்டுக்கிளி. தூரத்தில் ரதம் ஒன்று ஓடிவரும் சத்தம் கேட்டது. எங்கே ரதம் தன் மேல் ஏறிவிடுமோ என்ற அச்சத்தில் வெட்டுக்கிளி வேகமாக சாலை யைக் கடக்கத் தொடங்கியது.

அப்போது ரிஷி ஒருவர் அதன் முன்னே வந்தார். `இவ்வளவு கற்றும் உனக்குப் பிறப் பின் மீது ஆசை நீங்கவில்லையே' என்றார்.

அப்போது அந்த வெட்டுக்கிளிக்குத் தன் முற்பிறவி நினைவு வந்தது. தான் தர்மத்தை மாற்றிக்கூறிய பாவத்தை உணர்ந்து வருந்தி னார். ரிஷியிடம் தனக்கு மோட்சம் அருளு மாறு வேண்டினார். ரிஷியும் அவ்வாறே செய்து வெட்டுக்கிளியைக் கடைத்தேற்றினார்.

அந்த ரிஷி வியாசபகவான். இந்தக் கதை ஸ்காந்த புராணத்தில் உள்ளது. நாமும் நம் வாழ்வில் நம் வசதிக்கு ஏற்ப நியாய தர்மத்தை வளைத்துப் பேசுகிறோம். அதன் பலன் எப்படிப் பட்டது என்பதை அறிந்துகொள்ள இந்த வெட்டுக்கிளியின் கதை உதவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism