வியாச முனிவரின் மகன் சுக முனிவர். அவரை எல்லோரும் ‘சுக பிரம்ம மகரிஷி’ என்றே அழைப்பர். ஒருநாள் அவர் தன் தந்தையிடம், ‘`பிரம்ம ஞானம் பெற எனக்கு வழி சொல்லுங்கள்’’ எனக் கேட்டார்.

‘`மிதிலைக்குச் செல். அரசர் ஜனகரே உனக்குப் பிரம்ம ஞானம் வழங்கத் தகுதி உடையவர்’’ என்றார் வியாசர்.

அதன்படி மிதிலை அரண்மனையை அடைந்தார் சுக முனிவர்.

காவலர்களிடம், ‘`உங்கள் அரசரிடம் போய் சுக பிரம்ம மகரிஷி வந்திருக்கிறார் என்று சொல்லுங்கள்’’ என்றார்.

காவலாளிகளும் ஜனகரிடம் சென்று, சுக பிரம்ம மகரிஷி வந்திருப்பதாகத் தெரிவித்தனர். அதற்கு ஜனகர், ‘`அவருடன் வந்திருக்கும் மற்ற இருவரை விட்டுவிட்டு, அவரை மட்டும் தனியாக வரச் சொல்லுங்கள்’’ என்றார்.

‘`அரசே! அவர் தனியாகத்தான் வந்திருக்கிறார்’’ என்றார்கள் காவலாளிகள்.

ஜனகர், ‘`நான் சொன்னதை மட்டும் அவரிடம் சொல்லுங்கள்!’’ என்றார் கண்டிப்புடன்.

சுக முனிவரிடம் வந்த காவலர்கள், அரசர் கூறியதை அப்படியே அவரிடம் தெரிவித்தனர்.

அதைக் கேட்டுச் சிந்தனையில் ஆழ்ந்தார் சுக முனிவர். பின்னர், காவலாளிகளுடன் சென்று அரசரைச் சந்தித்து, ‘`நான் சுக பிரம்மம் வந்திருக்கிறேன்’’ என்று தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

இப்போது ஜனகர் என்ன சொன்னார் தெரியுமா?

‘`உங்களைத் தனியாகத்தானே வரச் சொன்னேன்..! இப்போதும் துணைக்கு ஒருவரை வைத்துக்கொண்டிருக்கிறீரே?’’ என்று கேட்டாராம்.

சுகருக்கு இப்போதுதான் தனது தவறு புரிந்தது. அவர் சொன்னார்... ‘`மன்னிக்கவும். நான் சுகன் வந்திருக்கிறேன்!’’

ஆம்... பிரம்ம ஞானத்தை அடைய விரும்புபவர்களுக்கு, அகங்காரம் அறவே கூடாது!

-ராமு, மதுரை.