Published:Updated:

அதிகார சண்டிகேஸ்வரர்!

அதிகார சண்டிகேஸ்வரர்
பிரீமியம் ஸ்டோரி
News
அதிகார சண்டிகேஸ்வரர்

சிவபெருமானுடன், பஞ்ச மூர்த்தியரில் ஒருவராக பவனி வருபவர். சிவனாரின் ரிஷப வாகனமே இவருக்கும் வாகனம்.

சிவபக்தியால் அதிகாரப் பதவியை அடைந்தவர் சண்டிகேஸ் வரர். சண்டேசர், சண்டிகேசுவரர் என்று பக்தர்களால் போற்றப்படும் இந்த நாயன்மாரின் திருப்பெயர் விசாரசர்மர்.

சிவாலயங்கள் அனைத்திலும் இவரே தன அதிகாரியாகவும் விளங்குபவர். எப்போதும் சிவ சிந்தனையில் ஆழ்ந்திருப்பவர்.

இவரின் கவனத்தை தம் பக்கம் ஈர்க்க, பக்தர்கள் இவரின் சந்நிதியில் கைகளைத் தட்டியும் நூல் பிரித்துப் போட் டும் `வேண்டுதலை ஈசனிடம் சொல்லி விடுங்கள்' என்று வேண்டுகோள் விடுப்பர். இது தவறான பழக்கம் என்று ஆன்றோர்கள் சொல்வது உண்டு.

சண்டிகேஸ்வரர், ஈசனின் அடியார் கூட்டத் தலைவனாக இருப்பவர். சிவன் கோயிலில் வடக்குப் பிராகாரத்தில் தனிச் சந்நிதியில் சிவ தியானத்தில், கோஷ்ட துர்கைக்கு எதிரே இவர் அமர்ந்திருப்பார்.

சிவபெருமானுடன், பஞ்ச மூர்த்தியரில் ஒருவராக பவனி வருபவர். சிவனாரின் ரிஷப வாகனமே இவருக்கும் வாகனம். தனது மானையும் மழுவையும் ஏந்தும் அதிகாரத்தை இவருக்கு இறைவன் அருளியுள்ளார்.

இவ்வளவு சிறப்புகளும் இவரை அடைய காரணம் இவரது சிவபக்தி.

திருச்சேய்ஞலூரில் எச்சதத்தன்- பவித்திரை தம்பதிக்கு மகனாய் அவதரித்தார் விசாரசர்மன். இவர் பிறப்பு முதலே சிந்தனையெல்லாம் சிவ மயம் என்று இருந்தவர். அதனால் தினமும் பசுக்களை மேய்க்கச் சென்றபோது, ஈசனைப் பசுவின் பாலால் அபிஷேகித்து வழிபட்டு வந்தார்.

தந்தை பிரம்பால் அடித்தும்கூட பூஜையை விடாமல் தொடர்ந்தார்.

ஒருநாள், கோபத்தில் பூஜைக்கான பால் பாத்திரத்தை காலால் எட்டி உதைத்தார், இவரின் தந்தை. அதனால் கோபமான விசார சர்மன், தன் கையில் இருந்த மாடு மேய்க்கும் கோலை எறிந்தார்.

கோல் மழுவாக மாறி தந்தையின் காலை வெட்டி யது. தந்தை என்றும் பார்க்காமல், சிவபூஜைக்கு இடையூறு செய்ததால் அவரைத் தண்டித்த விசாரசர்மரின் பக்தியால் நெகிழ்ந் தார் சிவனார்.

நேரில் தோன்றி ஆசிபுரிந்தார்.

``விசாரசர்மா! இனி, உனக்கு நானே தந்தையும் தாயும். உன்னை நம் அடியார்களுக்குத் தலைவன் ஆக்குகிறோம். நாம் சூடுவன, உடுப்பன, உண்ணும் பாத்திரம் ஆகியவற்றை உனக்கே உரிமையாகும்படி செய்தோம். உனக்கு சண்டீச பதம் அளிக்கிறோம்!’’ என்று அருள்புரிந்தார்.

அதிகார சண்டிகேஸ்வரர்
அதிகார சண்டிகேஸ்வரர்

அத்துடன், தனது விரிசடையில் இருந்த கொன்றை மாலையை எடுத்து சண்டிகேஸ் வரருக்கு அணிவித்தார். அதுமட்டுமன்றி, எம்பெருமான், உமாதேவியார், விநாயகர், முருகவேள் ஆகியோரோடு சண்டீசரும் பஞ்ச மூர்த்தியரில் ஒருவராக எழுந்தருளும் பாக்கியமும் பெற்றார்.

சிவபக்தியில் சிறந்த சண்டீசரின் பூசைத் திருநாள் - தை உத்திரம் ( பிப்-1 ). சண்டீசரைப் போலவே, இதே திருநாளில் பூசைக்கு உரியவர் திலகவதியார். சைவம் தழைத்தோங்க தன்னையே ஈந்த பெருமாட்டியையும் இந்நாளில் வணங்கி மகிழ்வோம்!

- எஸ். உமாபதி, மதுரை-3

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

மெளனம் காப்பது நல்லது!

குறிப்பிட்ட தருணங்களில் மெளனம் மிக அவசியம் என்கின்றன ஞான நூல்கள். குளிக்கும்போதும், ஹோமம் நடக்கும்போதும், சாப்பிடும் போதும் பேசக்கூடாது என்று அறிவுறுத்துகின்றன.

ஸ்நானம் செய்யும்போது பேசுகிறவனது சக்தியை, வருணன் அபகரிக்கிறார்.

ஹோம காலத்தில் பேசுகிறவனது செல்வத்தை அக்னி பகவான் அபகரிக்கிறார்.

போஜன காலத்தில் பேசுகிறவனது ஆயுளை எமன் அபகரிக்கிறார்.

ஆகையால், குறிப்பாக இந்த மூன்று வேளைகளிலும் மௌனம் சாதிப்பவன் பல நன்மைகள் பெறுகிறான்.

- கே.வேலுமணி, பல்லடம்