பிரீமியம் ஸ்டோரி

னலாசுரனை விழுங்கிய கணபதியின் திருமேனி குளிர, சப்த ரிஷிகள் அறுகம்புல்லைச் சமர்ப்பித்தனர். மேனி குளிர்ந்தது. அதனால் மகிழ்ந்த கணநாதர் அறுகம் புல்லை தனக்கான பத்ரமாக ஏற்றுக்கொண்டார்.

பிள்ளையார்... பிள்ளையார்!

மற்ற தெய்வங்களை விட, விநாயகர் பலன்களை முந்தி வந்து தருபவர். எனவேதான் அவரை `முந்தி விநாயகர்' என வழிபடுகிறோம்!

பிள்ளையார்... பிள்ளையார்!

விநாயகர் மந்திரங்களைப் பிரம்ம முகூர்த்த வேளை எனும் அதிகாலை 4.30 முதல் 6 மணிக்குள் உச்சரிப்பது, கூடுதல் பலனளிக்கும் என்று கணேச உத்தர தாயினி உபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது.

விநாயகரின் 12 அவதாரங்கள்

1. வக்ரதுண்ட விநாயகர்

2. சிந்தாமணி விநாயகர்

3. கஜானனர்

4. விக்னராஜர்

5. மயூரேசர்

6. பாலச்சந்திர விநாயகர்

7. தூமகேது விநாயகர்

8. கணேச விநாயகர்

9. கணபதி விநாயகர்

10. மகோற்கட விநாயகர்

11. துண்டி விநாயகர்

12. வல்லப விநாயகர்

பிள்ளையார்... பிள்ளையார்!

மோதகத்தில் வெண்மையான அரிசி மாவுதான் உடல். அதனுள்ளே பூரணமாக விளங்கும் இனிப்புதான் ஆத்மா. இரண்டையும் அவர் கையில் ஒப்படைத்துச் சரணடைகிறோம் என்பதே மோதக தத்துவம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அரசு, அத்தி, மந்தாரை,வில்வம், வேம்பு, நாவல், அரை நெல்லி, வாகை ஆகிய மரங்களின் அடியில் அருளும் பிள்ளையார் விசேஷமானவர். தோஷங்கள் நீங்கிட இம்மரங்களைச் சுற்றி வந்து வணங்குவது நல்லது.

பிள்ளையார்... பிள்ளையார்!

சாணம், புற்றுமண்,மஞ்சள், வெள்ளெருக்கு, வெல்லம், சந்தனம் ஆகியவற்றில் பிள்ளையார் செய்து வழிபட்டால், எல்லாவித நலன்களும் பெற்று நிறைவில் மோட்சம் அடைவர் என்கிறது விநாயக புராணம்.

எல்லா தெய்வ வடிவங்களும் சிற்ப முறைப்படி செய்து வழிபட வேண்டியவை. ஆனால், கணபதி உருவம் அப்படியல்ல. மஞ்சளால் பிடித்து வைத்தால்கூட போதும்; கணபதி அவ்வடிவில் எழுந்தருளி வரம் தருவார்.

பிள்ளையார்... பிள்ளையார்!

கணபதி, விஷ்ணு, சிவன், சூரியன், அம்பிகை, என்று ஐந்து மூல தெய்வங்களையும் ஒரே பீடத்தில் வைத்து பூஜிப்பதை `கணபதி பஞ்சாயதனம்' என்பர். இதில் விநாயகப்பெருமானை நடுவில் வைத்து வழிபட்டால் அரசாளும் யோகம் கிட்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு