Published:Updated:

பெய்க மழை

பெய்க மழை
பிரீமியம் ஸ்டோரி
பெய்க மழை

பெய்க மழை

பெய்க மழை

பெய்க மழை

Published:Updated:
பெய்க மழை
பிரீமியம் ஸ்டோரி
பெய்க மழை

இயற்கையையும் மாற்றும் வல்லமை இறைவனின் அடியார்களுக்கு உண்டு. இதற்கு உதாரணமாக 150 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்லலாம்.

பெய்க மழை
பெய்க மழை

தருமபுர ஆதினம் 14 வது பட்டம் ல கந்தப்ப தேசிக சுவாமிகள் ஒருமுறை திருநெல்வேலி சமஸ்தானத்துக்கு எழுந்தருளியிருந்தார். அப்போது ராதாபுரம், வள்ளியூர் பகுதிகளில் கடுமையான வறட்சி நிலவியது. விவசாயிகள் உணவுக்கே வழியின்றித் திண்டாடினர். எனினும் அதிகாரிகள் நிலத்துக்கான வரியைச் செலுத்துமாறு மக்களை வற்புறுத்தினர். இதுகுறித்து முறையிட மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு மக்கள் சென்றனர்.

வெள்ளையரான அந்தக் கலெக்டர் வரியைத் தள்ளுபடி செய்ய மறுத்ததோடு திமிராக, "வடக்கே இருந்து ஒரு சாமியார் வந்திருக்கிறாராமே அவரிடம் சென்று சொல்லுங்கள். மழை பொழியும்" என்று கிண்டல் செய்து அனுப்பியிருக்கிறார்.
மக்கள் மனம் நொந்துபோனார்கள். நேரே மகாசன்னிதானம் தங்கியிருக்கும் இடத்துக்குக் கூட்டமாக வந்தார்கள். உதவியாளர் சன்னிதானத்திடம் பொதுமக்கள் பார்க்க வந்திருப்பதைச் சொல்லவே சன்னிதானம் பலகணியிலிருந்து அவர்களுக்கு தரிசனம் கொடுத்து அவர்களின் குறைகளைக் கேட்டார். மக்கள் நடந்தவற்றைச் சொல்லிக் கண்ணீர் விட்டனர்.

உடனே மகாசன்னிதானம், "யாரும் வருத்தப்பட வேண்டாம். இறைவன் இருக்கிறான்" என்று சொல்லி தேற்றிவிட்டு தன் உதவியாளர்களிடம், "வந்திருக்கும் அனைவருக்கும் உடனே உணவு வழங்க வேண்டும்" என்று சொல்லிவிட்டு பூஜை அறைக்குள் நுழைந்து தாழிட்டுக் கொண்டு ஜபம் செய்ய ஆரம்பித்தார். பின்பு வெளியே வந்து,


"சைவ சமயமே சமயம் எனில் அச்சமயத்து
தெய்வம் பிறை சூடும் தெய்வம் எனில்
ஐவரைவென்று ஆனந்த வெள்ளத்தில்
அழுந்துவதே முக்தி எனில்
வானங்காள் பெய்க மழை!"


என்னும் பாடலைப் பாடினார்.
என்ன ஆச்சர்யம் அதுவரை நிர்மலமாக இருந்த வானம் சூல்கொண்டது. மேகங்கள் திரண்டு மழை பெய்யத்தொடங்கியது. நீர் நிலைகள் எல்லாம் நிரம்பி வழிந்தன. மக்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர். மெய்யான பக்திக்கு இறைவனும் செவிகொடுப்பான் இயற்கையும் செவி மடுக்கும்.

- சக்திதர்