Published:Updated:

தனம் தருவாள்...

திருமகள்
பிரீமியம் ஸ்டோரி
திருமகள்

திருமகளின் சிறப்புகளைக் கூறும் 100 பாடல்களைக் கொண்ட ‘திருமகள் அந்தாதி’ என்ற நூலை வண்ணச்சரபம் ஸ்ரீமத்தண்டபாணி சுவாமிகள் அருளியிருக்கிறார்.

தனம் தருவாள்...

திருமகளின் சிறப்புகளைக் கூறும் 100 பாடல்களைக் கொண்ட ‘திருமகள் அந்தாதி’ என்ற நூலை வண்ணச்சரபம் ஸ்ரீமத்தண்டபாணி சுவாமிகள் அருளியிருக்கிறார்.

Published:Updated:
திருமகள்
பிரீமியம் ஸ்டோரி
திருமகள்

பொன் மலராள், தூமலராள்...

மிழ்மறையான தேவாரத்தில் திருஞானசம்பந்தப்பெருமான் ஏறத்தாழ 50 இடங்களில் மகாலட்சுமியைப் பல்வேறு திருப்பெயர்களால் அழைக்கிறார். அவற்றில் திருமகள், பூமகள், அலராள், பங்கய மங்கை, பொன் மலராள், செய்யாள், தூமலராள், வானோர்சீர் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. சிவத்தலங்களை லட்சுமி தேவியின் இருப்பிடமாகவே அவர் சொல்லியிருக்கிறார். வேதாரண்யம் தலத்தை `மலர்மகள் நிலவிய மறைவதும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

திருமகளே வருக!

திருமகளின் சிறப்புகளைக் கூறும் 100 பாடல்களைக் கொண்ட ‘திருமகள் அந்தாதி’ என்ற நூலை வண்ணச்சரபம் ஸ்ரீமத்தண்டபாணி சுவாமிகள் அருளியிருக்கிறார். `திருமகளே’ என்று தொடங்கி `திருமகளே’ என்று நிறைவுறும் இந்த நூலின் பாடலைத் தினமும் பாராயணம் செய்து திருமகளை வழிபட்டால், எண்ணற்ற பலன்களைப் பெற முடியும்.

திருமகளே திருப்பாற்கடல் ஊடன்று தேவர்தொழ

வருமகளே உலகெல்லாமும் என்றென்றும் வாழவைக்கும்

ஒருமகளே நெடுமால் உரத்தே உற்று உரம் பெரிது

தருமகளே தமியேன் தலைமீது நின்தாள் வையே

கருத்து : திருவாகிய செல்வமகளே... திருப்பாற் கடலில் அமுதத்தோடு தேவர்கள் தொழும்படியாக வந்த பெண்ணே, உலகம் யாவற்றையும் உனது செல்வச் செழிப்பால் வாழவைப்பவளே, திருமாலின் மார்பிலே தங்கி வீரத்தைத் தந்து அவருக்கு வெற்றியைத் தருபவளே, அடியேன் தலையின் மீது நின்திருவடிகளை வைப்பாயாக.

தனம் தருவாள்...

மகாலட்சுமி தீர்த்தங்கள்

திருமகள் சிவபூசை செய்யவும் நீராடி மகிழவும் அமைத்த தீர்த்தங்களுக்கு ‘லட்சுமி தீர்த்தங்கள்’ என்று பெயர். திருப்பரங்குன்றம், பனையூர், வலம்புரம், திருப்புத்தூர், காஞ்சிபுரம், ராமேஸ்வரம் முதலான பல தலங்களில் லட்சுமி தீர்த்தங்கள் இருக்கின்றன. இவற்றில் முதன்மை பெற்றது திருவாவூர் திருக்குளமாகும். அது திருமகளின் திருப்பெயரால் ‘கமலாலயம்’ என்று அழைக்கப்படுகிறது.

திருநின்றியூரில் ஆலயத்துக்குத் தெற்கிலும் திருமழபாடியில் அம்பிகை சந்நிதிக்கு எதிரேயும் மகாலட்சுமி தீர்த்தம் அமைந்திருக்கிறது. அதேபோல், திருமாகறல் மாகறலீசுவரர் ஆலயத்துக்கு எதிரிலும், கடிகுளம் கற்பகனார் கோயிலிலும் இன்னும் அநேக தலங்களிலும் லட்சுமி தீர்த்தங்கள் உள்ளன. இவற்றில் நீராடி சிவபெருமானை வழிபட்டால் செல்வம் பெருகும் என்பது ஐதிகம்.