திருத்தலங்கள்
திருக்கதைகள்
ஜோதிடம்
தொடர்கள்
Published:Updated:

கல்வி தருவாள்...

சரஸ்வதி
பிரீமியம் ஸ்டோரி
News
சரஸ்வதி

திருமறைக்காட்டில் சரஸ்வதி கலைகளின் வடிவமாக நின்று சிவனை வழிபட்டாள்.

திருக்காளத்தி

ரஸ்வதி வழிபட்ட தலங்களில் முதன்மையானது காளத்தியாகும். ஒருமுறை, முனிவர் ஒருவரின் சாபத்தால் பேசும் தன்மையை இழந்த சரஸ்வதி காளத்திக்கு வந்து வழிபட்டாள். அவள் இங்கு சரஸ்வதி தீர்த்தம் என்ற பெயரில் காளத்தீசுவரர் ஆலயத்துக்குள்ளேயே ஒரு தீர்த்தத்தை உண்டாக்கி, அதில் நீராடி சிவ வழிபாடு செய்தாள். அதன் பலனால் அவளுக்கு மீண்டும் பேசும் தன்மை வாய்த்தது. புராணக் காலத்தில் அடியார்கள் பலரும் இங்கு வந்து சரஸ்வதி தீர்த்தத்தில் நீராடி, சிவபெருமானை வணங்கி பேசும் தன்மையை மீண்டும் பெற்றுள்ளனராம்.

திருமறைக்காடு

திருமறைக்காட்டில் சரஸ்வதி கலைகளின் வடிவமாக நின்று சிவனை வழிபட்டாள். நாவரசர், ‘கலைகள் வந்திறைஞ்சும் கழல்’ என்று பாடியிருக்கிறார். இங்கு அவள் வேத சரஸ்வதியாகவே வீற்றிருந்து அருள்செய்கிறாள்.

திருவீழிமிழலை - ராமேஸ்வரம்

வாக்தேவி மூன்று காலங்களில் காயத்ரி, சாவித்திரி, சரஸ்வதி என்று மூன்று வடிவங்களைக் கொள்கிறாள். இந்த மூன்று வடிவங்களுடன் அவள் வழிபட்ட தலம் திருவீழிமிழலையாகும். இங்குள்ள மூன்று லிங்கங்கள் காயத்ரீசுவரர், சாவித்திரீசுவரர், சரஸ்வதீசுவரர் என்று அழைக்கப்படுகின்றன.

கல்வி தருவாள்...

ராமேஸ்வரத்தில் சரஸ்வதி மூன்று வடிவங்களிலிருந்து வழிபட்டு அமைத்த தீர்த்தங்கள் முறையே காயத்ரி, சாவித்திரி, சரஸ்வதி தீர்த்தங்கள் என்ற பெயரில் வரிசையாக அமைந்துள்ளன.

பிறைசூடிய கலைவாணி

ஞான சரஸ்வதி சிவபெருமானிடமிருந்து வெளிப்படும் ஞானப் பெண்ணாதலின், அவரைப் போலவே ஜடாமகுடம் தரித்து அதில் பிறைச் சந்திரனைச் சூடியுள்ளாள். ஸ்ரீதத்துவநிதி நூலானது `சரஸ்வதி, சந்திரனைச் சூடி அமுதக் கலசத்தை ஏந்தினாள்’ என்று கூறுகிறது. கடலங்குடியில் கிடைத்து, இந்நாளில் தஞ்சாவூர் அருங்காட்சியகத்திலுள்ள சரஸ்வதியின் முடியில் சந்திரனைக் காணலாம்.

கோட்ட தேவதை

ஞ்சை மாவட்டம் திருப்பூந்துருத்தி புஷ்பவனேஸ்வரர் ஆலயத்தில் கருவறைக் கோட்ட தேவதையாக சரஸ்வதி அருள்கிறாள். இவள் மேலிரு கரங்களில் அட்சமாலையுடன் சுவடியையும், கீழ் இரு கரங்களில் `அபய’, `ஊரு’ முத்திரைகளையும் கொண்டுள்ளாள். வேலூர் - தோட்டப்பாளையம் தாரகேசுவரர் ஆலயத்தில், கோட்ட தெய்வமான பிரம்மாவுக்கு நேர் எதிரில் சரஸ்வதியைக் காணலாம்.