கி.பி 997-ம் ஆண்டு, மன்னன் ராஜராஜன் இலங்கைவரை தன் அரசாங்கத்தை விரிவாக்கினான். அதனால் வணிகப் போக்குவரத்துகள் அதிகரித்தன. ஒருநாள் கோடியக்கரை துறைமுகத்திலிருந்து படகு ஒன்று இலங்கை வல்வெட்டித்துறை செல்லத் தயாராகிக்கொண்டிருந்தது.

வேலையாள்கள் பொருள்களைப் படகில் ஏற்றிக்கொண்டிருந்தார்கள். அப்போது மூதாட்டி ஒருத்தி படகில் ஏறி அமர்ந்துகொண்டாள். அந்த அன்னையின் முகத்தில் கனிவும் முதுமையும் கலந்திருந்தது. பணியாளர்கள் அவளிடம் சென்று , “நீங்கள் யார்? எங்கு செல்ல வேண்டும்?“ என்று கேட்டனர். அதற்கு அந்த அன்னை, “ என் பெயர் கயிலைமலை அரசி. நான் வல்வெட்டித்துறை செல்ல வேண்டும்” என்றாள். அதற்கு அந்தப் பணியாளர்கள், “அம்மா, கடல்பயணம் நீண்டது மட்டுமல்ல ஆபத்தானதும் ஆகும். வயதான தங்களால் அத்தகைய ஒரு பயணத்தை மேற்கொள்ள முடியாது” என்று கூறினர்.

ஆனால் அன்னையோ பதில் கூற மறுத்து அமைதியாக அமர்ந்தே இருந்தாள். பின் அவளைத் தொந்தரவு செய்ய விரும்பாத பணியாளர்கள் தங்கள் வேலையைப் பார்க்கத் தொடங்கிவிட்டனர். பொருள்கள் ஏற்றப்பட்டுக் கப்பல் புறப்பட்டுவிட்டது. நடுக்கடல், அமைதியாக இருந்த சமுத்திரம் திடீரென்று சீறத்தொடங்கிவிட்டது. கப்பல் கடுமையாக ஆடியது. ஒரு கட்டத்தில் எங்கே கவிழ்ந்துவிடுமோ என்ற அச்சமும் ஏற்பட்டது.

அப்போது அந்த மூதாட்டி எழுந்து படகின் விளிம்புக்கு வந்தாள். “ ஏய்... பேசாமலிரு” என்று கடலை அதட்டினார். பணியாளர்களுக்கு அந்தத் துயரத்திலும் சிரிப்பு வந்தது. “கடலுக்குப் போய் கட்டளையிடுகிறாளே இந்தக் கிழவி...” என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர். ஆனால் என்ன அதிசயம்... மூதாட்டி சொல்லித் திரும்பிய கணத்தில் சமுத்திரம் அமைதியாகிவிட்டது. அதுவரை ஆர்ப்பறித்த அலைகளைக் காணோம். சமதளத்தில் நகரும் ரதத்தைப்போல கப்பலும் விரைவாக நகர்வதை உணர்ந்தார்கள். அப்போது பயபக்தியோடு அன்னையை அனைவரும் திரும்பிப் பார்த்தனர். அன்னையோ ஒளிவீசும் புன்னகையோடு அமர்ந்திருந்தாள்.

வல்வெட்டித் துறைமுகமும் வந்தது. மூதாட்டியும் இறங்கிக்கொண்டாள். அவள் அங்கிருந்த ஒரு வேப்ப மரத்தடியில் சென்று அமர்ந்தாள். சில நாள்கள் அங்கேயே தங்கியிருந்தாள். எல்லோரும் அவளை வணங்கிச் சென்றனர். ஒருநாள் அவளைக் காணவில்லை. எங்கு சென்றிருப்பார் என்று தவித்தனர். அப்போது, அங்கே ஒரு ஒளி தோன்றி மறைந்தது. உடனே கப்பலில் பணியாற்றிவர்கள் அங்குவந்து தங்கள் கப்பலில் நடந்த அதிசயத்தைச் சொல்லி. ‘வந்தது அந்த உலக நாயகியான மாரியம்மன்தான்’ என்று சொல்லிப் போற்றினர். அங்கே முத்துமாரியம்மனுக்கு ஒரு கோயில் எழுப்பி வழிபட ஆரம்பித்தனர். அன்றிலிருந்து இன்றுவரை தேடிச்சென்று கோயில் கொண்ட அம்பிகை, அங்கு முத்துமாரியம்மனாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.