Published:Updated:

எல்லை வகுத்த மகான்!

வியாசராஜர்
பிரீமியம் ஸ்டோரி
வியாசராஜர்

வியாசராஜர்

எல்லை வகுத்த மகான்!

வியாசராஜர்

Published:Updated:
வியாசராஜர்
பிரீமியம் ஸ்டோரி
வியாசராஜர்

பூவுலகின் புனிதம் காக்க மகான்கள் பலரும் நம் தேசத்தில் அவதரித்து அருள்பொழிந்தார்கள். அவர்களில் ஒருவர் வியாச தீர்த்தர். இவர் அவதரித்தது வைகாசி மாதம். இவரின் மகிமையைச் சொல்லும் அருள்கதைகள் நிறைய உண்டு.

வியாச தீர்த்தர்
வியாச தீர்த்தர்


ஒருமுறை ரங்கம்-திருவானைக்கோவிலுக்கு இடையே எல்லைப் பிரச்னை உண்டானதாம். அனைவரின் உள்ளங்களிலும் அபிப்பிராய பேதம். சாளுவ நரசிம்மன் என்ற மன்னனுடன் அங்கு வந்த வியாச தீர்த்தர், பிரச்னை தீர ஒரு வழி சொன்னார்.

‘‘குறிப்பிட்ட இடத்திலிருந்து ஒருவர், மூச்சு விடாமல் ஓடத் தொடங்க வேண்டும். அவர் எங்கு மூச்சு விடுகிறாரோ, அதுவே எல்லை!’’ என்றார்.

இதை மன்னன் சாளுவ நரசிம்மன் உட்பட அனைவரும் ஒப்புக் கொண்டனர். ஆனால், ‘யார் ஓடுவது?’ என்பதில் கருத்து வேறுபாடு எழுந்தது. முடிவில், ‘‘நானே ஓடுகிறேன்!’’ என்றார் வியாச தீர்த்தர். இரு தரப்பாரும் ஒப்புக்கொண்டார்கள்.

ரங்கநாதர் கோயிலிலிருந்து வியாச தீர்த்தர் ஓடத் தொடங் கினார். ஒரு குறிப்பிட்ட எல்லை வந்ததும் நின்றார். அதுவே ரங்கத்தின் எல்லையாக தீர்மானிக்கப்பட்டது. அந்த இடத்தில் ஓர் ஆஞ்சநேயர் விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்தார் வியாச தீர்த்தர். இந்த ஆசார்ய புருஷரே புகழ் பெற்ற வியாசராஜர் ஆவார். வியாசதீர்த்தராக இருந்தவர், வியாசராஜர் ஆனதற்கும் ஒரு வரலாறு உண்டு. அது:

கலிங்கப் போரில் வெற்றி பெற்ற அரசர் கிருஷ்ண தேவராயர் தலைநகர் திரும்பினார். அவரை அணுகிய அரண்மனை ஜோதிடர்கள், ‘‘ஒரு சில நட்சத்திரங்களின் சேர்க்கையால் மன்னருக்கு ஆபத்து வரும். குறிப்பிட்ட நாளில் மரணம் நேரும்!’’ என்றார்கள்.

கிருஷ்ண தேவராயர், வியாச தீர்த்தரைச் சரணடைந்தார். ஆலோசனை நடந்தது. அதன்படி, ஆபத்து நேர்வதாக இருந்த குறிப்பிட்ட நேரத்தில், வியாச தீர்த்தர் அரசராக இருப்பது என முடிவெடுக்கப்பட்டது. அரசாட்சியை வியாச தீர்த்தரிடம் ஒப்படைத்தார் கிருஷ்ண தேவராயர்.

குறிப்பிட்ட நேரம் நெருங்கியது. சிம்மாசனம் காலியாக இருந்தது. வியாச தீர்த்தர் சிம்மாசனத்துக்கு பூஜை செய்தார். தன் மேல் இருந்த காவி மேலாடையை எடுத்துச் சிம்மாசனத்தின் மீது எறிந்தார். பேரிரைச்சலுடன் அந்த ஆடை ‘பளிச்’சென்று தீப்பிடித்து எரிந்தது. அதன் சாம்பல் மட்டுமே எஞ்சியது. வரவிருந்த ஆபத்து நீங்கியது.

அதன் பின், தான் வழிபட்டு வந்த தெய்வ வடிவத்தைச் சிம்மாசனத்தில் அமர்த்திய வியாச தீர்த்தர், தானும் சிம்மாசனத்தில் அமர்ந்தார். ஆபத்தை நீக்கிய ஆசார்ய புருஷர், கிருஷ்ண தேவ ராயரிடமே மீண்டும் பதவியைத் தந்து, அவரையே அரசராக்கினார். அன்று தொடங்கி வியாச தீர்த்தர், வியாசராஜர் எனப்பட்டார். இவரே மறுபிறவியில் ராகவேந்திரராக அவதரித்தார் என்பர்.

-லதா, சென்னை-44

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism