Published:Updated:

செங்கல் எப்படி கண்ணாடியாகும்?

ஆன்மிக துணுக்குகள்
பிரீமியம் ஸ்டோரி
ஆன்மிக துணுக்குகள்

ஆன்மிக துணுக்குகள்

செங்கல் எப்படி கண்ணாடியாகும்?

ஆன்மிக துணுக்குகள்

Published:Updated:
ஆன்மிக துணுக்குகள்
பிரீமியம் ஸ்டோரி
ஆன்மிக துணுக்குகள்

செங்கல் எப்படி கண்ணாடியாகும்?

ஜென் குரு ஒருவரது ஆசிரமத்தில், அவரின் சீடன் ஒரு மூலையில் அமர்ந்தபடி, சலனமற்ற மனதை அடையும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தான். அவனைப் பார்க்க எவர் வந்தாலும் விழி திறந்து அவன் பார்க்கவில்லை.

ஜென் குரு
ஜென் குரு


வெளியில் சென்றிருந்த குரு ஆசிரமத்துக்குள் நுழைந்ததும் சீடன் தன்னைத் திரும்பிப் பார்ப்பதற்காக, அவன் அருகில் போய் நின்றார். நெடுநேரம் கடந்தும் சீடன் அவரைக் கண்டுகொள்ளவில்லை. ஒரு செங்கல்லைக் கொண்டு வந்து தரையில் தேய்க்கத் தொடங்கினார்.

இந்த சத்தத்தில் விழி திறந்த சீடன், குருவைப் பார்த்து, “என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டான். “செங்கல்லை கண்ணாடியாக்க முயலுகிறேன்” என்றார் குரு. “செங்கல் எப்படி கண்ணாடியாகும்?” உங்களுக்குப் பைத்தியமா?” என்று எரிச்சலுடன் கத்தினான் சீடன்.

அவனது எரிச்சலைக் கண்டு நகைத்தவர், “செங்கல் கண்ணாடி யாகாது எனில், உன் மனம் மட்டும் கண்ணாடியாகி விடுமா, என்ன?” என்றார் ஜென்!

ஆம்! மனதைக் கண்ணாடியாக்குவதுதான் கடும் முயற்சி. அதற்கு சத்தியம் எனும் பண்பு அவசியம். சத்தியம் இருக்கும் இடத்தில்தான் களங்கமற்ற அறிவு பிறக்கும். சத்தியமும் நல்லறிவும் இணைந்தால், ‘ஆனந்தம்’ தானாக வந்து கலக்கும்.

எண்ணெய்க் குளியல்அகத்திக் கீரை?

செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பெண்களும் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் ஆண்களும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பார்கள்.

இந்த தினங்களில் அகத்திக்கீரை சாப்பிடக் கூடாது என்பார்கள். காரணம், இந்த நாட்களில் உடல் உறுப்புகள் சற்று அசதியைச் சந்திக்கும். அப்போது, அகத்திக் கீரை முதலானவை உடல் நலனுக்கு ஏற்புடையதாக இருக்காது. எனவே, இதுபோன்ற நாட்களில் அகத்திக் கீரையைத் தவிர்க்கச் சொல்கிறது ஆயுர்வேதம்.

தவிர... கிழமைகள், கிரகங்களின் பெயரில் அமைந் திருக்கின்றன. அந்தந்த கிழமைகளில் அந்தந்த கிரகங்களின் தன்மை புலப்படும். உணவுகளின் மூலம் இவற்றின் தன்மைகள் மேலும் தூண்டப்படலாம். இதைத் தவிர்க்க குறிப்பிட்ட நாட்களில் கீரையைத் தவிர்க்கலாம். இது ஜோதிடத்தின் அறிவுரை.