Published:Updated:

ஆன்மிகத் துளிகள்

ஆன்மிகத் துளிகள்
பிரீமியம் ஸ்டோரி
ஆன்மிகத் துளிகள்

இந்த ஆறு விஷயங்களிலிருந்தும் ஒருவன் விலகி வாழ்ந்தால் நிச்சயமாக அவன் நூற்றாண்டை நிறைவு செய்வான்.

ஆன்மிகத் துளிகள்

இந்த ஆறு விஷயங்களிலிருந்தும் ஒருவன் விலகி வாழ்ந்தால் நிச்சயமாக அவன் நூற்றாண்டை நிறைவு செய்வான்.

Published:Updated:
ஆன்மிகத் துளிகள்
பிரீமியம் ஸ்டோரி
ஆன்மிகத் துளிகள்

`பாம்பைக் கண்டு பயம் இல்லையா?'

ர்த்தமான மகாவீரர், அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். எனினும் ஆடம்பரமோ, அதிகார தோரணையோ இன்றி நாட்டு மக்கள் அனைவரையும் சகோதர சகோதரிகளாக பாவித்தார். எல்லோரிடமும் அன்புடன் பழகினார். அவரது வாழ்வில் நடந்த சுவையான ஒரு சம்பவம்..

ஒரு நாள் மகாவீரர் சென்ற வழியில் இருந்த மரக் கிளையில் ஒரு பாம்பு தொங்கிக்கொண்டிருந்தது. உடனே அதைப் பிடித்தவர், `‘பாம்பே, யாருக்காகவோ பயந்துகொண்டு நீ மரக்கிளையில் பதுங்கி இருக்கிறாய். நீ இருக்க வேண்டிய இடம் இதுவல்ல’' என்றவர், அந்தப் பாம்பை அருகில் இருந்த ஒரு பொந்துக்குள் விட்டார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
ஆன்மிகத் துளிகள்
ஆன்மிகத் துளிகள்

இதைக் கண்ட அவரின் நண்பர்கள், `‘வர்த்தமானா... பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பர். உனக்குப் பயம் என்பதே கிடையாதா?’' என்று கேட்டனர். உடனே, `‘பயம் என்றால் என்னவென்று நீங்களே சொல்லுங்கள்!'’ என்றார் மகாவீரர். நண்பர்கள் விழித்தனர்.

அவர்கள் மௌனமாக இருப்பதைக் கண்ட மகாவீரர், ``நண்பர்களே, நான் அறிந்தவரையிலும்... நாம், பிறருக்குத் தீமை செய்யும்போதுதான் பயப்பட வேண்டும். நன்மை செய்யும் பட்சத்தில் எவருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. பாம்புக்கு நான் நன்மையே செய்தேன். பொந்தில் வாழ வேண்டிய அந்தப் பாம்பு மரத்தில் தொங்கக் கூடாது அல்லவா? அதனால் பாம்பைப் பிடித்து, அதற்குரிய இடத்தில் சேர்க்கும் நல்ல காரியத்தை செய்தேன்’’ என்றார். நண்பர்கள் அமைதி ஆனார்கள்.

நூறு வயது வரை வாழ...

ரு முறை திருதராஷ்டிரன், தன் சகோதரர் விதுரரிடம், ‘‘மனிதனுக்கு ஆயுள் நூறு வருடம் என்பர். எனினும் நூறு வருடங்களை எந்த மனிதரும் கடப்பதில்லை. இதற்குக் காரணம் என்ன?’’ என்று கேட்டார்.

விதுரர் பதில் சொன்னார்: ‘‘அரசே... மனித ஆயுளை அறுக்கும் வாள்கள் ஆறு.

முதலாவது வாள் - கர்வம். பலர், ‘இந்த உலகில் நானே கெட்டிக்காரன். மற்றவரெல்லாம் முட்டாள்: என்று நினைக்கிறார்கள். கர்வம் இல்லாமல் இருக்க, தன் குற்றங்களையும் பிறர் நற்குணங்களையும் பார்க்க வேண்டும்.

இரண்டாவது வாள் - அதிகம் பேசுவது. தனக்குப் பேச விஷயங்கள் இல்லாதபோதும், வீண்பேச்சு பேசுபவன், வீண் வம்பை விலைக்கு வாங்குகிறான்.

மூன்றாவது வாள் - தியாக உணர்வு இன்மை. அதீத ஆசையே தியாக உணர்வைத் தடுக்கிறது.

நான்காவது வாள் - கோபம். கோபத்தை வெல்பவனே உண்மையான யோகி. கோபம் வந்து விட்டால் தர்மம், அதர்மம் எது என்பது தெரியாமல் போகிறது. பாவங்களைச் செய்ய நேரிடுகிறது.

ஐந்தாவது வாள் - சுயநலம். சுயநலமே எல்லா தீமைகளுக்கும் காரணம். சுயநலம்கொண்டவன் பாவம் செய்யத் தயங்குவதில்லை.

ஆறாவது வாள்-துரோகம். நண்பர்கள் கிடைப்பது அரிது. அர்களுக்குத் துரோகம் செய்தல் கூடாது.

இந்த ஆறு விஷயங்களிலிருந்தும் ஒருவன் விலகி வாழ்ந்தால் நிச்சயமாக அவன் நூற்றாண்டை நிறைவு செய்வான்.’’

- சக்தி. அ. உமாராணி, கிருஷ்ணகிரி-1