Published:Updated:

ஆன்மிகத் துளிகள்

ஆன்மிகத் துளிகள்
பிரீமியம் ஸ்டோரி
ஆன்மிகத் துளிகள்

தெய்வ வழிபாடு மனத்தில் நம்பிக்கையை அதிகரிக்கும்.

ஆன்மிகத் துளிகள்

தெய்வ வழிபாடு மனத்தில் நம்பிக்கையை அதிகரிக்கும்.

Published:Updated:
ஆன்மிகத் துளிகள்
பிரீமியம் ஸ்டோரி
ஆன்மிகத் துளிகள்

சகலமும் அருளும் பதிகம்!

ற்றமும் இறக்கமும் நிறைந்த வாழ்வில் சில தருணங்களில் மனித சக்தியால் தீர்க்கமுடியாத துயரங்கள் சூழும்போது, இறையருளை வேண்டிப் பிரார்த்திப்பது ஒன்றே துயரம் தீர்வதற்கான வழி. தற்போதும் அறிவியலால் தீர்வு காண இயலாதவாறு தொற்று நோய்ப் பிரச்னை மனித குலத்தைப் பயமுறுத்துகிறது.

திக்கற்றவருக்குத் தெய்வம்தானே துணை. தெய்வ வழிபாடு மனத்தில் நம்பிக்கையை அதிகரிக்கும். தன்னம்பிக்கை தேகத்தில் வலு சேர்க்கும்.

ஆகவேதான், தீராத பிணிகளால் மக்கள் வருந்தும் நிலையில், அந்தப் பிணிகளின் தீவிரம் தணியவும், அவற்றால் உண்டாகும் பாதிப்புகள் முற்றிலும் அகலவும் துணைசெய்யும் துதிப்பாடல்களைப் பெரியோர்கள் பாடி வைத்துள்ளார்கள். அவற்றில் ஒன்று இங்கே...

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு

சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு

தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு

செந்துவர் வாயுமை பங்கன்

திருஆல வாயான் திருநீறே.

வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு

போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு

ஓதத் தகுவது நீறுஉண்மையி லுள்ளது நீறு

சீதப் புனல்வயல் சூழ்ந்த

திருஆல வாயான் திருநீறே.

திருஞானசம்பந்தர் அருளிய இந்தப் பதிகத்தை அனுதினமும் பாடி, இறைவனைத் தியானித்து திருநீறு அணிந்து வர, சகல பிணிகளும் துன்பங்களும் நீங்குவதோடு, இல்லத்தில் சர்வ சுபிட்சங்களும் பொங்கிப் பெருகும்.

- நமசிவாயம், சென்னை-44

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வசந்த நவராத்திரி
வசந்த நவராத்திரி

அம்பத்தூரில் வசந்த நவராத்திரி!

லக நன்மையின் பொருட்டு எத்தனையோ விரத வழிபாடுகளையும், விழாக்களையும், ஆராதனைகளையும் நம் முன்னோர்கள் சொல்லிச் சென்றுள்ளார்கள். அவற்றில் குறிப்பிடத்தக்கது வசந்த நவராத்திரி. இறையின் பேரருளைப் பெற்றுத் தரும் வசந்த நவராத்திரி நாள்களில், உன்னதமான பல வைபவங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளார்கள், சென்னை - அம்பத்தூர் ஸ்வபாவானந்த குருமண்டலி அமைப்பினர்.

ஶ்ரீகுஹாநந்த மண்டலியின் குருமார்களின் அனுக்ரஹத்தோடும் ஶ்ரீஜகத் குருக்களான சிருங்கேரி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் மற்றும் ஶ்ரீஓங்காரானந்த ஸ்வாமிகள் ஆகிய மகான்களின் அனுக்ரஹத்தோடும் வரும் ஏப்ரல் மாதம் 2, 3, 4, 5 ஆகிய நாள்களில் வஸந்த நவராத்திரி உற்சவம் கொண்டாடப்படவுள்ளது.

அம்பத்தூர் ஶ்ரீமகாலக்ஷ்மி கல்யாண மண்டபத்தில்... சுவாஸினி பூஜைகள், வேதபிராமண தம்பதி பூஜைகள், ஆவரண பூஜைகள் மற்றும் சிறப்பு உபன்யாசங்களுடன் நடைபெறவுள்ள விழாவில் பக்த அன்பர்கள் அனைவரும் கலந்துகொண்டு, குருவருளும் திருவருளும் பெற்றுச் செல்லலாம் (தொடர்புக்கு: 98401 08403).

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism