Published:Updated:

ஆன்மிகத் துளிகள்

ஆன்மிகத் துளிகள்
பிரீமியம் ஸ்டோரி
ஆன்மிகத் துளிகள்

பெற்றோர் விருப்பப் படி சமிக்கும், மந்தாரனுக்கும் திருமணம் நடந்தேறியது.

ஆன்மிகத் துளிகள்

பெற்றோர் விருப்பப் படி சமிக்கும், மந்தாரனுக்கும் திருமணம் நடந்தேறியது.

Published:Updated:
ஆன்மிகத் துளிகள்
பிரீமியம் ஸ்டோரி
ஆன்மிகத் துளிகள்

வன்னி இலையும் மந்தாரை பூக்களும்!

ன்னி இலையாலும் மந்தார மலராலும் விநாயகரை அர்ச்சித்து வழிபடுவதால், விசேஷ பலன்கள் கிடைக்கும். அதே போல், இந்த மரங்களின் கீழே அமர்ந்து அருள்பாலிக்கும் விநாயக மூர்த்தங்களைத் தரிசிப்பதும் சிறப்பு. அப்படியென்ன சிறப்பு இந்த இரண்டு விருட்சங்களுக்கும்?

ஓளரவ முனிவர்-சுமேதை தம்பதியின் மகள் சமி. தெளமிய முனிவர் என்பவரின் மகன் மந்தாரன். இவன் செளனக முனிவரின் சீடனும்கூட. பெற்றோர் விருப்பப் படி சமிக்கும், மந்தாரனுக்கும் திருமணம் நடந்தேறியது.

ஆன்மிகத் துளிகள்

ஒருமுறை சமியும், மந்தாரனும் தங்களின் உறைவிடத்துக்குப் போகும் வழியில், விநாயகரின் அருள்பெற்ற புருசுண்டி முனிவர் எதிர்ப்பட்டார். இவர்கள் இருவரும் அவரை வணங்கவில்லை. மாறாக, அவரின் உருவத்தைக் கண்டு எள்ளி நகையாடினர். ஆம்! புருசுண்டி முனிவர், விநாயகரைப் போன்றே யானை முகம் கொண்டவர். அவர், தன்னை சமி-மந்தாரன் தம்பதி ஏளனம் செய்வதைக் கண்டு கோபம் கொண்டு, மரங்களாக மாறும்படி அவர்களை சபித்தார். தங்கள் தவறை உணர்ந்த கணவன், மனைவி இருவரும் சாப விமோசனம் அருளும்படி முனிவரிடம் வேண்டினர். ``விருட்சங்களாகத் திகழும் உங்கள் நிழலில் விநாயகர் குடிகொள்ளும்போது விமோசனம் கிடைக்கும்’’ என்று கூறிச் சென்றார் முனிவர்.

சாபத்தின்படி மந்தாரன் மந்தார மரமாகவும், சமி வன்னி மரமாகவும் மாறினர். இந்த நிலையில் தங்களின் பிள்ளை களைக் காணாமல் தவித்த பெற்றோரும், மந்தாரனின் குருவான செளனகரும் அவர்களை எங்கெங்கோ தேடி அலைந்தனர். இறுதியில் ஞான திருஷ்டியின் மூலம் நடந்ததை அறிந்து வருந்தினர்.

செளனகர் அந்த மரங்களைக் கண்டடைந்தார். அவற்றின் கீழ் அமர்ந்து விநாயகரை எண்ணி பன்னிரண்டு ஆண்டுகள் தவம் புரிந்தார். அதன் பலனாக விநாயகப் பெருமான் காட்சி தந்தார். அவரிடம், தன் மாணாக்கனுக்கும் அவன் மனைவிக்கும் சாப விமோசனம் அருளும்படி வேண்டினார் செளனகர்.

உடனே விநாயகர், ‘‘முனிவரே! அடியவர்கள் இட்ட சாபத்தை எவராலும் போக்க இயலாது. எனவே, இவ்விருவரும் விருட்சங்களாக இருந்தபடியே முக்தியை பெறுவார்கள். நாம் இம்மரங்களின் நிழலில் எழுந்தருள்வோம். வன்னி மற்றும் மந்தாரை மரங்களையும் அவற்றின் கீழ் இருக்கும் என்னையும் வழிபடுபவர்களுக்கு சகல இடர்களும் நீங்கும். அவர்களது விருப்பங்கள் யாவும் ஈடேறும். வன்னி இலையாலும் மந்தார மலர்களாலும் என்னை அர்ச்சித்து வழிபடுவோரும் இன்னல்கள் நீங்கி இன்பம் அடைவர்’’ என்று அருள்பாலித்தார். ஆகவே, வன்னி இலைகளும் மந்தார புஷ்பங்களும் பிள்ளை யாருக்கு உகந்தவை என்றாயின.

சுபா கண்ணன், சென்னை - 18

அரம்பையர் போற்றிய அரனார்!

பாற்கடலில் தோன்றிய பொக்கிஷங்களில் அரம்பையரும் அடங்குவர். சிவாலய பூஜையின்போது பலி நிகழ்ச்சியில் மகா பலிபீடத்தில் மற்ற தேவர்களுடன் இவர்களும் பூஜிக்கப்படுகின்றனர். இவர்களின் தலைவி அரம்பை.

இந்தத் தேவியைக் குறித்த விரதம் ரம்பா திருதியை ஆகும். தம்மை வழிபடுவோருக்கு இளமையையும் வளத்தையும் மாறா இன்பத்தையும் அரம்பை அருள்வதாக ஐதிகம். இவளின் பெயரால் பரமேஸ்வரரும் அரம்பேஸ்வரர் எனப் போற்றப்படுகிறார்.

அரம்பைக்கு இறைவன் காட்சியளித்த நான் கார்த்திகை மாதம் ரோகினி நட்சத்திரம் (இந்த வருடம் 1.12.2020 அன்று கார்த்திகை மாத ரோகிணி நட்சத்திர நாள்).

ஆன்மிகத் துளிகள்

அரம்பை வழிபட்டுப் பேறுபெற்ற தலமான இலம்பையங் கோட்டூர் இந்நாளில் எலுமியங்கோட்டூர் எனப்படுகிறது. சென்னையிலிருந்து செல்லம்பட்டிடை என்ற ஊருக்குச் சென்று அங்கிருந்து சுமார் ஒரு கி.மீ. தூரம் பயணித்தால் இவ்வூரை அடையலாம். இவ்வூர் இறைவன் தெய்வநாயகர், அரம்பையால் வழிபடப்பட்டவர் ஆதலால் அரம்பேஸ்வரர் என்ற பெயரும் உண்டு. அம்பிகை-கோடேந்து முலையம்மை.

இங்கே அரம்பையர் மல்லிகை வனத்தில் பெருமானைப் பூசித்ததால் மல்லிகை தலமரமாகத் திகழ்கிறது. இங்குள்ள தட்சிணா மூர்த்தி, அரம்பையருக்கு ஆன்ம ஞானம் அருள்பவராகக் காட்சி தருகிறார்.

காவிரி கரைத் தலமான திருப்பைஞ்ஞீலியும் அரம்பையர் அருள்பெற்ற தலமாகும். இங்கு வந்து சிவபூஜை செய்த அம்பிகைக்கு நிழல் தரும் விதமாக, அரம்பையர் வாழை மரங்களாகி நின்றனர். வாழைக்குக் கதலி என்றும் பெயர் உண்டு. ஆகவே, இத்தலத்தின் ஈசனுக்குக் கதலிவசந்தர் என்றும் திருப்பெயர் உண்டு. திருச்சி- மணலூர்பேட்டையிலிருந்து 7 கி.மீ. தொலைவிலுள்ளது இத்தலம்.

ஆடுதுறைக்கு மேற்கேயுள்ள தலம் திருநீலக்குடி. அம்பிகை பசு வடிவம் கொண்டு சிவனாரைப் பூஜித்தத் தலமிது. அவளுடன் அரம்பையரும் வழிபட்டனர் ஆதலால், இத்தல இறைவனுக்கு அரம்பேசுவரர் என்று திருப்பெயர்.

- பி.உலகம்மாள், கருங்குளம்

ஆன்மிகத் துளிகள்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism