பிரீமியம் ஸ்டோரி

ஞானநூல்கள் பலவும் யானைகளின் சிறப்பைப் போற்று கின்றன. யானைகளின் தோற்றம் குறித்து புராணங்களும் கதை சொல்கின்றன. அதாவது பிரம்மதேவன் மண்ணை உருண்டையாக்கி, சில மந்திரங்களை அதன் மீது ஓதினார். அந்த உருண்டையை அதிதி என்ற தேவ மங்கை சாப்பிட்டாள். ஆயிரம் ஆண்டுகள் கழித்து அவளிடமிருந்து வெளிப்பட்ட மண் உருண்டை இரண்டு துண்டுகளாயின.

அவற்றில் ஒன்றை `ஐராவதம்' என்ற ஆண் யானையாகவும் மற்றொன்றை `அபுரமு' என்ற பெண் யானையாக வும் உருவம் தந்து உயிர் கொடுத்தார் பிரம்மன் (ஐராவதம் பாற்கடலில் தோன்றியது என்றும் ஒரு திருக்கதை உண்டு).

ஆன்மிகத் துளிகள்!

இந்த யானைகள் இரண்டும் வெள்ளை நிறத்துடனும் நான்கு தந்தங்களைக் கொண்டும், இறக்கைகளையும் கொண்டிருந்தன. இந்த இரண்டுக்கும் துணையாக மேலும் ஏழு ஜோடி யானைகளைப் படைத்தார் பிரம்மன். மொத்த முள்ள இந்த எட்டு இணைகளும் எட்டு திசை களையும் காத்து நிற்கின்றன என்பது நம்பிக்கை. `அஷ்ட திக் கஜங்கள்’ என்று புராணங்கள் போற்றும் அந்த யானைகளின் (இணைகளின்) பெயர்களையும் அவற்றுக்கான திசைகளையும் தெரிந்துகொள்வோமா...

ஐராவதம் - அபுரமு - கிழக்கு

புண்டரீகன் - கபிலா - தென்கிழக்கு

புஷ்பதந்தன் - தமரகர்ணி - வடமேற்கு

வாமனன் - அங்கனா - தெற்கு

சுப்ரதீகன் - அனுபமா - வடகிழக்கு

அஞ்சனன் - அஞ்சனாவதி - மேற்கு

சர்வபெளமான் - சுப்ரதந்தி - வடக்கு

குமுதன் - பெங்கலா - தென்மேற்கு

ஆன்மிகத் துளிகள்!

சூரிய விரதம்!

சூரியனுக்காக அனுஷ்டிக்கும் ஞாயிறு விரதத்தை `ரவி வார விரதம்’ என்று சொல்வார்கள். இந்த விரதம் இருப்பவர்கள் உப்பு, எண்ணெய்யைத் தவிர்க்கவேண்டும். சூரியன் மறையும் நேரத்துக்குப் பிறகு உணவு அருந்துவதைத் தவிர்த்து, மறுநாள் விடியும் வரை உபவாசம் இருக்க வேண்டும். மறுநாள் காலையில் கோயிலுக்குச் சென்று நவகிரகங்களில் சூரியனுக்குச் செந்நிற மலர்களால் அர்ச்சனை செய்து, செஞ்சந்தனம் சமர்ப்பித்து வழிபட வேண்டும். இந்த விரதத்தை முறைப்படி அனுஷ்டிப்பவர்களுக்குச் சரும நோய்கள் மற்றும் கண் நோய்கள் குணமாகும்; இல்லத்தில் சுபிட்சம் பெருகும்.

- மல்லிகா அன்பழகன், சென்னை-78

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு