Published:Updated:

ஆன்மிகத் துளிகள்

ஆன்மிகத் துளிகள்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆன்மிகத் துளிகள்

`கணவனுடன் எந்நாளும் சேர்ந்தே இருக்க வேண்டும்’ என்று வேண்டிக் கொண்டு தீபாவளி நாளில் கேதார கௌரி விரதம் இருக்கின்றனர் பெண்கள்.

அம்மையும் அப்பனும்!

சனின் உடலில் பாதியை அடைய திருக்கேதாரத்தில் தவம் செய்தாள் பார்வதி. சதுர்த்தசி நாளில் சக்திக்கு தன் உடலில் பாதி யைத் தந்து அர்த்தநாரீஸ்வரர் ஆனார் சிவன். ஆகவே, `கணவனுடன் எந்நாளும் சேர்ந்தே இருக்க வேண்டும்’ என்று வேண்டிக் கொண்டு தீபாவளி நாளில் கேதார கௌரி விரதம் இருக்கின்றனர் பெண்கள். அப்போது அம்மியையும், குழவியையும் சிவசக்தியாக பாவித்து பூஜை செய்வது வழக்கம்.

- தனலட்சுமி, சென்னை-21

ஆன்மிகத் துளிகள்

சொக்கன் ஆடிய சொக்கட்டான்!

கயிலாய பர்வதத்தில் தீபாவளி நாளில் சிவனும் பார்வதியும் சொக்கட்டான் ஆடினார்களாம். அதை நினைவூட்டும் விதமாகவே குஜராத் மாநில மக்கள் தீபாவளி நாளன்று இரவில் சொக்கட்டான் ஆடும் பழக்கத்தை இன்றும் கடைப்பிடித்து வருகின்றனர்.

- கே.என். மகாலிங்கம், பாண்டிச்சேரி-4

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
ஆன்மிகத் துளிகள்

அன்னக் குவியல் வைபவம்!

ஆக்ரா, மதுரா சேர்ந்த தற்போதைய வடமதுரா பிரதேசம்தான் பழைய கோகுலம். `வ்ரஜ பூமி’ எனும் சிறப்புப் பெற்றது.

துவாபர யுகத்தில் கண்ணனின் வழிகாட்டலின்படி கோகுலவாசிகள் கோவர்த்தனகிரியை வழிபட்டதை அறிவோம். அதன்பொருட்டு கோபம் கொண்ட தேவேந்திரன் கடும் மழையைப் பொழிவிக்க, கண்ணபிரான் கோவர்த்தன மலையையே குடையாகப் பிடித்து கோகுலத்தைக் காத்த திருக்கதையையும் அறிவோம். அதனால்தான் கண்ணனுக்கு ‘கோவர்த்தன கிரிதாரி’ எனும் சிறப்புப் பெயர் ஏற்பட்டது. இன்றும் மதுரா பகுதியில் கோவர்த்தனகிரி பூஜை நடத்தப்படுகிறது.

தீபாவளிக்கு மறு நாள் அந்த வழிபாடு நடைபெறும். கிரிராஜன்தான் மணமகன்; தீபாவளியே மணமகள். அவர்களின் திருமண நாளே அது. அன்றைய தினம் ‘அன்னக் குவியல்’ என்ற பெயரில் விருந்து வைபவமும் நடைபெறும்; மகான் வல்லபாசார்யர் ஏற்படுத்தியது. `சப்பன் போக்’ என்ற பெயரில் 56 வகையான உணவுப் பண்டங்கள் படைக்கப்படும். இனிப்புப் பண்டங்கள், இனிப்பு இல்லாதவை, கிழங்கு, பழங்கள் எனப் பலவித பண்டங்கள் விருந்து வைபவத்தில் இடம்பெறும்!

- ஜானகி, மன்னார்குடி