கடன் தொல்லை தீரும்
ருணஹர கணேச ஸ்தோத்திரத்தைச் சொல்லி, தினமும் விநாயகரை வழிபட்டு வந்தால், கடன் தொல்லைகளில் இருந்து விடுபட்டு நிம்மதி அடையலாம். அந்த ஸ்லோகம்...
ஸிந்தூர வர்ணம் த்விபுஜம் கணேசம்
லம்போதரம் பத்மதளே நிவிஷ்டம்
ப்ரஹ்மாதி தேவை பரிஸேவ்ய மானம்
ஸித்தைர்யுதம் தம் ப்ரணமாமீ தேவம்
ஸ்ருஷ்ட் யா தௌ ப்ரஹ் மணா ஸம்யக் பூஜித பல ஸித்தயே
ஸதைவ பார்வதீ புத்ர ருணநாசம் கரோதுமே
த்ரிபுரஸ்ய வதாத் பூர்வம் சம்பு நா ஸம்யகர்ச்சித
- எஸ்.கீதா, சென்னை-91


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அனுமன் அவதாரம்
சத்ரபதி சிவாஜியின் குரு ராமதாஸர். சிறந்த ஆஞ்சநேய பக்தர். அவரது கருத்துப்படி ஆஞ்சநேயர் பிறந்த கதை இதுதான்:
‘புத்திர காமேஷ்டி யாகத்தின்போது கிடைத்த தெய்வீக பாயசத்தை, தன் மனைவியரான கௌசல்யை, சுமித்திரை, கைகேயி ஆகியோருக்கு அளித்தார் தசரதன். அப்போது, சுமித்திரையின் கையிலிருந்த பாயசத்தை வாயுதேவன் எடுத்துச் சென்று, அஞ்சனையிடம் கொடுத் தான். அஞ்சனை அதைப் பருகி, ஆஞ்சநேயனைப் பெற்றாள்!’ என்று குறிப்பிடுகிறார். ஆக, அனுமனும் ஓர் அவதார புருஷனே!
- அ. மீனாட்சி, விழுப்புரம்-2

கெட்ட கனவுகள் விலகும்
அரச மரம், தீர்த்தக்குளம், மலை ஆகியவற்றில் ஒன்றை வலம் வந்து வழிபடுவதன் மூலம் தூக்கத்தில் கெட்ட கனவுகள் தோன்றாது. அதேபோல் லட்சுமி பஞ்சகம், லட்சுமி அஷ்டகம் முதலான தோத்திர நூல்களைப் பாராயணம் செய்து வந்தால், வீட்டில் தரித்திரம் நீங்கும்; தீமைகள் விலகி மங்கல காரியங்கள் கூடிவரும்.
- ஆர்.வசந்தன், சென்னை-44
ஓவியங்கள்: உமா