Published:Updated:

எங்கள் ஆன்மிகம்: விளக்கொளி தந்த அகத்தியர்!

பொதிகை மலை
பிரீமியம் ஸ்டோரி
News
பொதிகை மலை

நாங்கள் அகத்தியரை தரிசிக்கச் சென்றபோது திட்டமிட்டுப் பயணத்தை மேற்கொள்ளவில்லை.

ன் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது அகத்தியப் பெருமானும், பொதிகை மலையும்தான். அகத்தியப் பெருமானை நம்பியவர்கள் யாரும் கைவிடப்பட மாட்டார்கள் என்பதற்கு என் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன்.

1.5.2010 அன்று பொதிகை மலையில் அகத்தியப் பெருமானை தரிசிக்கச் சென்றேன். என்னோடு புனே இந்திய வானிலைத் துறை விஞ்ஞானி பாலசுப்பிரமணியன், சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த நண்பர் காளீஸ்வரன், திருவண்ணாமலை எடத்தனூர் அரசு உயர்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் குமரகுரு, போட்டோகிராபர் ராமகிருஷ்ணன், என் ஆன்மிக நண்பர் உச்சிமாகாளி சுவாமி ஆகியோர் உடன் வந்தனர். அப்போது பொதிகை மலையைப் பற்றி நாங்கள் சரியாக அறியாத காலம்.

நாங்கள் அகத்தியரை தரிசிக்கச் சென்றபோது திட்டமிட்டுப் பயணத்தை மேற்கொள்ளவில்லை. பொதுவாக பொதிகை மலைப் பயணம் மூன்று நாள்கள் பிடிக்கும். கேரளம் வழியாகச் செல்லும் பயணிகளை போனாக்காடு எஸ்டேட்டில் இறக்கி விட்டுவிட்டு வாகனமும் ஓட்டுநரும் மூன்று நாள்கள் அங்கேயே காத்து இருப்பார்கள். அதுபோலவேதான் எங்களையும் ஓட்டுநர் இறக்கிவிட்டுவிட்டுக் காத்திருந்தார். வாகனத்தில்தான் எங்களது பணப்பை இருந்தது.

எங்கள் ஆன்மிகம்: விளக்கொளி தந்த அகத்தியர்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஆனால், நாங்கள் ஒரே நாளில் வழிபாடு முடித்து கீழே இறங்கி விடுவது என்று தீர்மானித்திருந்ந்தோம். அகத்தியருக்கு பூஜை செய்துவிட்டுக் கீழே இறங்கினோம். இரவு, அத்திரி மலை எஸ்டேட் பங்களாவில் தங்காமல் கீழே இறங்கினோம். அதாவது 28 கி.மீ ஒரே நாளில் நடக்கத் திட்டமிட்டோம். எங்கேயும் நிற்காமல் நடக்க ஆரம்பித்தோம்.

எங்கள் முன்னால் காளீஸ்வரன், குமரகுருபரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் கிளம்பினார்கள். இவர்கள் மூன்று பேரும் மறுநாள் பணிக்குச் செல்ல வேண்டும். எனவே அவர்கள் வேகமாக நடந்தார்கள். நான், உச்சிமாகாளி சுவாமிகள், பாலசுப்பிரமணியன் ஆகியோர் வழிகாட்டிகள் ரஞ்சித், ராஜ்குமாருடன் பின்னால் கிளம்பினோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

எங்களின் நடை கொஞ்சம் மந்தமாகவே இருந்தது. முட்டு இடிச்சான் தேரி, ஏ.சி.காடு, ஏழுமடங்கு என்று புல்வெளிக்கு வந்தோம். மாலை 4 மணிக்கே இருட்டி விட்டது. எனவே பாதைகள் எதுவுமே எங்களுக்குப் பிடிபடவில்லை. மேலும் 10 கி.மீ கடக்க வேண்டும்.

எங்கள் ஆன்மிகம்: விளக்கொளி தந்த அகத்தியர்!

அப்போதுதான் எனக்கு நினைவுக்கு வந்தது. நான் பொதிகை மலை பயணம் கிளம்பும்போது, தேவையான பொருள்களோடு டார்ச் ஒன்றையும் எடுத்துவைத்தாள் என் மகள் துர்கா. அது இப்போது பயன்பட்டது. ஆனாலும் உள்ளுக்குள் ஓர் உதறல். இந்த இடத்தைக் கடக்க குறைந்தது ஐந்து மணி நேரம் ஆகும். டார்ச் விளக்கு ஒரு மணி நேரம்தான் தாக்குப் பிடிக்கும்.

“அகத்தியப் பெருமானே! இந்த டார்ச்சில் சார்ஜ் தீர்வதற்குள் எங்களைப் போனக்காடு கொண்டு சேர்த்துவிடுங்கள்” என்று வேண்டிக்கொண்டேன். ஆனாலும் உள்ளூர கீழே வாகனம் நிற்கிறது. எனக்கென்ன கவலை என்ற இறுமாப்பும் இருந்தது.

அகத்தியர்
அகத்தியர்

ஒரு வழியாக நாங்கள் கருமேனியற்று கேம்ப்பை அடைந்தோம். “இதற்கு மேல் போக முடியாது... யானை நிற்கிறது!” என்றார் ராஜ்குமார். அந்த கேம்ப், யானையிடம் இருந்து தப்பிக்க அமைக்கப்பட்ட ஓர் இடம். அனைவரும் அதிர்ந்துவிட்டோம். வாகனம் நிற்கும் இடம்வரை எப்படியாவது எங்களைக் கூட்டிக்கொண்டு போய்விடுங்கள் என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டோம். அவரும் அழைத்துச் சென்றார். லாத்தி மோட்டா அருகில் வரும்போது, யானை நிற்பதுபோல இருந்தது.

டார்ச் லைட்டைப் பார்த்தால் யானைகளுக்குக் கோபம் வர வாய்ப்பு உண்டு. சில நாள்களுக்கு முன்புதான் அந்த இடத்தில் இரண்டு பேர் யானையிடம் சிக்கி உயிரிழந்திருந்தார்கள். எனவே, எங்களை மிகக் கவனமாக அழைத்துச் சென்றார் ராஜ்குமார். இரவு 8 மணிக்கு போனக்காடு பிக்கெட் ஸ்டேஷனுக்கு வந்து விட்டோம். ஆனால் அங்கு எங்களுக்குப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

எங்கள் ஆன்மிகம்: விளக்கொளி தந்த அகத்தியர்!

ஆம்! என் காரை எடுத்துக்கொண்டு காளீஸ்வரன் குழுவினர் மலையை விட்டுக் கீழே இறங்கிவிட்டார்கள். நாங்கள் அப்படியே அதிர்ச்சியில் ஆழ்ந்துவிட்டோம். வாகனம் போய் விட்டது. கையில் காசில்லை. எப்படி ஊருக்குப் போவது?

டீக்கடை வைத்திருப்பவர், “முன்னதாக வந்தவர்கள், நீங்கள் காலையில்தான் வருவீர்கள் என்றார்கள். ஓட்டுநரும் அவர்களைக் கீழே இறக்கிவிடப் போய்விட்டார்” என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ‘வாகனம் இருக்கிறது. காசு இருக்கிறது என்று சொன்னாயே. எல்லாம் ஒரே நேரத்தில் காணாமல் போய்விட்டன, பார்த்தாயா!’ என்று அகத்தியர் சொல்வதுபோல் இருந்தது.

எவரையும் கைப்பேசியிலும் தொடர்பு கொள்ள இயலவில்லை. அவை செயலிழந்து விட்டன. இதற்கிடையில் கைடு ராஜ்குமார் வேறு விதண்டாவாதம் பேச ஆரம்பித்து விட்டார். அதிக பணம் கேட்க ஆரம்பித்தார்.

எங்கள் ஆன்மிகம்: விளக்கொளி தந்த அகத்தியர்!

பணம் எடுக்க வேண்டும் என்றால் விதுரா என்ற இடத்துக்குச் செல்ல வேண்டும். ஆகவே, வாடகை வாகனம் பிடித்தோம். விதுரா வந்தோம். விஞ்ஞானி பாலசுப்பிரமணியனிடம் ஏ.டி.எம் கார்டு இருந்தது. அது மழையில் நனைந்து இருந்த காரணத்தினால் வேலை செய்யுமோ, செய்யாதோ என பயமாக இருந்தது. ஆனால், நல்லவேளை பணம் வந்தது. வாடகைக் கணக்கு முடித்தோம். கைடுகளுக்குப் பணம் கொடுத்தோம். அதன்பின் காலையில் வரும் பேருந்துக்காக நாங்கள் அங்குள்ள இருக்கையில் படுத்துவிட்டோம்.

`ஆகா... வாகனத்தில் பெரிய தோரணையாக வந்துவிட்டுக் கடைசியில் நடைமேடையில் படுத்துக்கிடக்கிறோமே’ என்று எண்ணியபோது, எவராக இருந்தாலும் சரி, அவர் எவ்வளவு பெரியவராக இருந்தாலும் சரி... தெய்வ அனுக்கிரத்தைத் தவிர வேறு எதுவும் இங்கு நிரந்தரம் இல்லை என்ற உண்மை உறைத்தது.

எங்கள் ஆன்மிகம்: விளக்கொளி தந்த அகத்தியர்!

பின்னர் ஒருவழியாக நாங்கள் செங்கோட்டை வந்து அங்கிருந்து திருநெல்வேலிக்குக் கிளம்பினோம். இதில் விசேஷம் என்னவென்றால். நாங்கள் எந்தப் பேருந்து நிலையத்தில் படுத்துக்கிடந்தோமோ... அதற்கு எதிர்ப்புறம் உள்ள ஒரு தங்கும் விடுதியில்தான் எங்கள் வாகனம் இருந்துள்ளது. சுற்றுச் சுவர் மறைத்துவிட்டதால், அதுவும் எங்களுக்குத் தெரியாமல் போனது.

எங்கள் ஆன்மிகம்: விளக்கொளி தந்த அகத்தியர்!

இந்தப் பயணம் எங்களின் அகங்காரத்தை அடித்து நொறுக்கியது ஒருபுறம் என்றால், மறுபுறம் அகத்தியப் பெருமானின் துணை எங்களைக் கரை சேர்த்தது என்றே சொல்லலாம். ஆம்... அவரருளால்தான் மகள் துர்கா கொடுத்த டார்ச் குறிப்பிட்ட நேரம் தாண்டியும் எங்களுக்கு வழிகாட்டியது. இல்லையென்றால் இந்த அளவுக்குக்கூட பயணப்பட முடியாமல் வனத்தில் சிக்கிக்கொண்டிருப்போம்.

வனப் பயணத்தில் மட்டுமல்ல, வாழ்க்கைப் பயணத்திலும் அகங்காரத்தை விலக்கி தெய்வத்திடம் முழுமையாக சரணடைந்து விட்டால், தெய்வ அனுக்கிரகம் நம் வாழ்வில் ஒளி பாய்ச்சும்!