Published:Updated:

ஶ்ரீசாஸ்தா தரிசனம்

ஶ்ரீசாஸ்தா தரிசனம்
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீசாஸ்தா தரிசனம்

பாபு மனோ - காஞ்சிபுரம்

ஶ்ரீசாஸ்தா தரிசனம்

பாபு மனோ - காஞ்சிபுரம்

Published:Updated:
ஶ்ரீசாஸ்தா தரிசனம்
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீசாஸ்தா தரிசனம்

தெய்வங்களில் சில முதன்மை தெய்வங்களாகவும், பல பரிவார தெய்வங்களாகவும் வழிபடப்படுகின்றன. தனித்த கோயில்களையும் வழிபாட்டு முறைகளையும் கொண்ட நாட்டுப்புற தெய்வங்கள், கிராம தேவதையாகவும் காவல் தெய்வங்களாகவும் வழிபடப்படும். அப்படித் தமிழ் மண்ணுக்கே உரிய ஒரு தெய்வம்தான் ஐயனார். தமிழக நாட்டுப்புற தெய்வங்களில் முதன்மையான இடத்தைப் பிடித்த ஐயனார் சாத்தன், சாத்தனார் எனும் திருநாமங்களோடும் வழிபடப் படுகிறார்.

சாத்தனைப் பற்றிய குறிப்புகள் சிலப்பதிகாரத்தில் காணப்படுகின்றன. அதில் இந்திர விழா எடுத்த காதையுரையில் - அடியார்க்கு நல்லார் உரையில் வரும் மேற்கோளில், கீழ்க்காணும் பாடலில் சாத்தன் குறிப்பிடப்பட்டுள்ளார்.

`கச்சி வளைக்கச்சி காமக்கோட்டங் காவல்
மெச்சி யினிதிருக்கும் மெய்ச்சாத்தன் - கைச்செண்டு
கம்பக் களிற்றுக் கரிகால் பெருவளத்தான்
செம்பொன் கிரி திரித்த செண்டு.'


காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் அக்காலத்தில் `காமக் கோட்டம்' என வழங்கப்பட்டது என்றும், அங்கிருந்த சாத்தன் எனும் தெய்வத்தின் கையிலிருந்த செண்டு என்ற ஆயுதத்தைக் கரிகாலன் பெற்று, வடக்கே இருந்த அரசர்களை வென்று இமயமலையை அடைந்தான் எனும் குறிப்பு மேற்காணும் பாடல் வரிகள் மூலம் விளக்கப்படுகிறது.

தொல்குடி மரபில் சாத்தன் வழிபாடு இருந்தது என்கிறார்கள் ஆய்வாளர்கள். சங்க இலக்கியத்தில் `சாத்தன்’ என்ற பெயரில் சில குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. சாத்தன் எனும் பெயருடைய புலவர்கள் பலர் இருந்துள்ளனர். மதுரை கூலவாணிகன் சீத்தலைச் சாத்தன் என்பவர், ஐயனாரைக் குலதெய்வமாக வழிபட்டவர். குலதெய்வத்தின் பெயரைச் சூட்டுவது தொல் தமிழர் மரபு என்பதால், இவர் சாத்தன் எனும் பெயர் ஏற்றார் எனலாம்.

சாத்தன் என்ற சொல் `சாத்து' என்று கூட்டமாக இருக்கும் வணிகக் கூட்டத்தைக் குறிப்பிடுவதாகவும், அக்கூட்டத்துக்குக் காவல் தெய்வமாக சாத்தன் எனும் ஐயனார் இருந்தார் என்றும் சில குறிப்புகள் வரலாற்றில் காணப்படுகின்றன. அப்பர் சுவாமிகள் தன் பதிகத்தில்...

`பார்த்தனுக் கருளும் வைத்தார் பாம்பரை யாட வைத்தார்
சாத்தனை மகனா வைத்தார் சாமுண்டி சாம வேதம்
கூத்தொடும் பாட வைத்தார் கோளரா மதிய நல்ல
தீர்த்தமுஞ் சடையில் வைத்தார் திருப்பயற் றூரனாரே'


- என்று சாத்தனை சிவபெருமானின் மகனாகவே பாடியிருக்கிறார்.

மணர்கள் வழிபாட்டிலும் ஐயனாரைப் பரிவாரத் தெய்வமாய் வைத்து வழிபடுகிறார்கள். காஞ்சிபுரத்திலிருக்கும் திருபருத்திக்குன்று சமணர் கோயிலில் `பிரம்ம யட்சன்' என்ற பெயரில் யானை வாகனத்தோடு இருக்கும் சாத்தனை வழிபடுகின்றனர்.

ல்லவர் காலத்திலேயே ஐயனாருக்கென்று தனித்துவமான கலை அமைப்பைக் கொண்ட ஏராளமான சிற்பங்கள் செதுக்கப்பட்டன. அவற்றில் கோழி, நாய், குதிரை, யானை போன்ற விலங்குகளின் உருவங்களும் செதுக்கப் பட்டுள்ளன.

லையில் ஜடாபாரத்துடனும், மார்பில் ஆபரணங்களுடனும் அமர்ந்த நிலையில் ஒருகாலை தொங்கவிட்டு மறுகாலை மடக்கி, யோக பட்டத்துடனோ அல்லது இல்லாமலோ உத்குடிகாசனம் அல்லது மகாராஜா லீலாசன முறையில் அமர்ந்திருப்பார் ஐயனார். ஒருகையில் செண்டாயுதமும், மறுகையில் தண்ட ஹஸ்தமும் கொண்டபடி காட்சியருளும் ஐயனார் திருக்கோலமே பல இடங்களில் சிற்பங்களாகக் காணப்படுகின்றன.

ந்த புராணத்தில்தான் முதன்முதலில் சாஸ்தா பற்றிய செய்திகள் வருகின்றன. கந்தபுராணத்தில் மகாசாஸ்தா படலத்தில் இந்திராணிக்குக் காவலாக மகாகாளர் என்னும் தன் தளபதியை சாஸ்தா நியமித்த தாகக் கந்த புராணம் கூறுகிறது.

யிலையில் சேரமான் இறைவனைக் கண்டு மகிழ்ந்து பாட, அவர் பாடிய பாடல்களை ஈசன் சாஸ்தாவிடம் கொடுத்து பூவுலகில் வெளியிடுமாறு அருளினாராம். அதன்பொருட்டு சேரமான் வந்த வெள்ளைநிறக் குதிரையில் சாஸ்தாவைப் பூமிக்கு அனுப்பி வைத்ததாகப் பெரிய புராணத்தில் - வெள்ளா னைச் சருக்கத்தில் குறிப்பிடுகிறார் சேக்கிழார்.

இறைவனின் ஆணையை ஏற்று வெள்ளைக் குதிரையில் வந்திறங்கிய சாத்தன், சேரமானின் திருக் கயிலாய ஞான உலா எனும் நூலை அரங்கேற்றம் செய்தார். இது பன்னிரு திருமுறைகளில் ஒன்றாக வைக்கப்பட்டுள்ளது.

`சிறுகண் யானைப் பெறலருந் தித்தன்
செல்லா நல்லிசை உறந்தைக் குணாது,
நெடுங்கை வேண்மான் அருங்கடிப் பிடவூர்
அறப்பெயர்ச் சாத்தன் கிளையேம், பெரும!'

- என்ற புறப்பாடல் வரிகள் இந்த ஊரைச் சேர்ந்தவரே சாத்தனார் என்று சுட்டுகின்றன. திருப்பட்டூர் என இன்று அழைக்கப்படும் இவ்வூரே `பிடவூர்' என அக்காலத்தில் அழைக்கப்பட்டுள்ளது. இவ்வூரில் உள்ள பெரியசாமி கோயில் ஐயனார், பூரண - புஷ்கலை சமேதராக அருள்கிறார். ஒரு கையில் ஏட்டுச் சுவடி வைத்துள்ளார். ஒவ்வோர் ஆண்டும் ஆடி சுவாதி தினத் தன்று திருக்கயிலாய ஞான உலா விழா இங்கு கொண்டா டப்படுகிறது.

லங்கையில் உள்ள வடமராட்சியிலும், வன்னிப் பகுதியிலும் ஐயனார் வழிபாடு உண்டு. `ஐயனார் கலட்டி' என்ற இடமும் வடமராட்சியில் உண்டு.

ட்டக் களப்பில் ஐயனார் வணிகர்களின் குலதெய்வமாக வணங்கப்படுகிறார். அங்கு ஐயனாரின் உறைவிடம் காடு என்றே கருதுகின்றனர்.

ன்னிப் பகுதியிலுள்ள சிங்கள மக்கள் ஐயனாரைத் தங்கள் `வேளாண்மை தெய்வமாக' வழிபடுகிறார்கள். நல்லபடி யாக அறுவடை முடிந்தபின் பானைக்குள் தீபம் ஏற்றி ஐயனாரை வழிபடுவர். இச்சடங்கு `முட்டி மங்கல்ய' என்று வழங்கப்படுகிறது.

யனார், கிராமத்தைக் காக்கும் ஊர்ப் பொதுத் தெய்வமாக, காவல் தெய்வமாகப் பல்வேறு ஊர்களில் வழிபடப்படுகிறார். கூடமுடைய ஐயனார், செங்குளத்து ஐயனார், கொக்குளத்து ஐயனார் என்று பல்வேறு திருநாமங்கள் அவருக்கு உண்டு. பெரும்பாலும் ஐயனார் கோயில்கள், திறந்தவெளியில் கண்மாய்க் கரைகளில் - நீர்நிலையை ஒட்டியுள்ள பகுதிகளில், வயல் வெளிகளில் ஆலமர நிழலில் கிழக்குப் பார்த்த வாசலுடன் அமைந்திருக்கும். வெள்ளைக் குதிரை, வேட்டை நாய், வீரர்கள் புடைசூழ ஐயனார் வீற்றிருப்பார்.

யனார் திருவிழாவின் போது பக்தர்கள் மண்குதிரைகளைக் காணிக்கையாகச் செலுத்தும் வழக்கம் உண்டு. இது குதிரை எடுப்பு, புரவியெடுப்பு, புரவிக் காணிக்கை என்று குறிப்பிடப் படுகிறது. காணிக்கைக் குதிரைகள் ஒரே இடத்தில் எடுக்கப்பட்ட மண்ணால் உருவாக்கப் பட்டதாக இருத்தல் வேண்டும்; வழிபாடு முடிந்ததும் அக்குதிரைகள் உடைக்கப்பட வேண்டும் என்பது மரபு.

யனாருக்குச் செய்யப்படும் அத்தனைச் சிறப்புகளும் அவரது வாகனமான குதிரைக்கும் செய்யப்படுகின்றன. பல இடங் களில் குதிரையையே ஐயனாராக வழிபடும் வழக்கமும் உள்ளது. பக்தர்களுக்குத் தீங்கு வரும்போது ஐயனார் இக்குதிரைகளில் ஏறி, விரைந்து வந்து காப்பாற்றுவார் என்பது நம்பிக்கை.

யனாருக்குப் பெரும்பாலும் சைவப் படையலே படைக் கின்றனர். சாம்பிராணிப் புகையும், பலியும் துணைத் தெய்வமான கருப்பண்ண சாமிக்கே உரித்தானது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism