Published:Updated:

தீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் ஸ்ரீதன்வந்திரி மஹா ஹோமம்! நீங்களும் சங்கல்பிக்கலாம்!

ஸ்ரீதன்வந்திரி மஹா ஹோமம்

ஸ்ரீதன்வந்திரி மஹா ஹோமம் : ஹோமத்தில் கலந்துகொண்டு சங்கல்பம் செய்துகொள்வதன் மூலம் நிறைந்த பலனைப் பெறலாம்.

தீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் ஸ்ரீதன்வந்திரி மஹா ஹோமம்! நீங்களும் சங்கல்பிக்கலாம்!

ஸ்ரீதன்வந்திரி மஹா ஹோமம் : ஹோமத்தில் கலந்துகொண்டு சங்கல்பம் செய்துகொள்வதன் மூலம் நிறைந்த பலனைப் பெறலாம்.

Published:Updated:
ஸ்ரீதன்வந்திரி மஹா ஹோமம்

ஸ்ரீதன்வந்திரி பகவான் மகாவிஷ்ணுவின்‌ அம்சமாக அவதரித்தவர். தேவர்களும்‌ அசுரர்களும்‌ அமுதத்திற்காகப் பாற்கடலைக்‌ கடைந்தபோது, திருமகளோடு அமுத கலசத்துடன்‌ பாற்கடலிலிருந்து தோன்றியவர்‌. தேவர்களுக்கு அமுதத்தை வழங்கி அவர்களுக்கு மரணமிலாப்‌ பெருவாழ்வு அளிப்பதற்கென்றே தோன்றியவர்‌. அதன் பிறகும் தன்வந்திரி பகவான் 32 தலைமுறைகளில்‌ பல பிறவிகள்‌ எடுத்து நான்கு வேதங்களுக்கும்‌ இணையான ஆயுர்வேத மருத்துவத்தை வடமொழியில்‌ அளித்தவர் என்பது நம் முன்னோர்களின் வாக்கு.

தன்வந்திரி பகவான்
தன்வந்திரி பகவான்

தன்வந்திரி பகவான் ஒரு பிறவியில் தீர்க்கமர்‌ என்பவரின்‌ மகனாகவும், அடுத்த பிறவியில் காசி ராஜனின்‌ மகனாகவும்‌ பிறகு சேதுமான்‌ என்ற திருநாமத்தோடு தீர்த்த பசு என்ற மன்னரின்‌ மகனாகப் பிறந்து ஆயுர்வேதம் என்ற தலைப்பில் பல மருத்துவ நூல்களை எழுதினார் என்கின்றனர். கனிஷ்க மன்னனின் அவையை அலங்கரித்த சுஸ்ருதர்‌ என்ற மருத்‌துவ மேதைக்கு ஆயுர்வேத மருத்துவ முறையை தன்வந்திரி பகவானே கற்பித்தார்‌. பிறகு அனு என்ற அரசனின்‌ மகனாகப்‌ பிறந்து பராசர முனிவரிடம்‌ பாடங்கள்‌ கற்று ஆயுர்வேதத்தை முழுமையாக்கினார் என்கின்றன வடமொழி நூல்கள்.

மருத்துவத்தின் கடவுளான தன்வந்திரி சகல நோய்களையும் தீர்க்கும் ஆற்றல் கொண்டவர். இந்த தன்வந்திரி பகவானை ப்ரீத்தி செய்யும் விஷயங்களில் முக்கியமானது ஸ்ரீதன்வந்திரி மஹாஹோமம். தன்வந்த்ரி பகவானை அவரது மூலமந்திரத்தைச் சொல்லி வணங்குவதன் மூலமும் பல்வேறு விதமான அபூர்வ மூலிகைகள் கொண்டு யாகம் செய்வதன் மூலமும் அவரின் அருளைப் பெறலாம். நோயுற்றவர்கள், தங்களின் நோய் தீரவும் நீடித்த ஆரோக்கியம் பெறவும் நீண்ட ஆயுள் பெறவும் ஸ்ரீதன்வந்திரி ஹோமத்தில் கலந்துகொண்டு சங்கல்பம் செய்து கொள்வது நல்லது என்கின்றனர் ஆன்றோர்கள். இத்தகைய அற்புத ஹோமத்தைத் தனி ஒருவராகச் செய்வது என்பது பெரும் பொருட்செலவு பிடிக்கும். எனவே ஆலயங்கள் மற்றும் பொது இடங்களில் நடைபெறும் ஹோமத்தில் கலந்துகொண்டு சங்கல்பம் செய்துகொள்வதன் மூலம் நிறைந்த பலனைப் பெறலாம் என்பர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தன்வந்த்ரி ஹோமம்
தன்வந்த்ரி ஹோமம்

நோய்த்தொற்று பரவும் இந்த வேளையில் உங்கள் குடும்ப க்ஷேமத்துக்காகவும் உலக நன்மைக்காகவும் உங்கள் சக்தி விகடன் - திண்டிவனம் நல்லியக்கோடன் நகர் அலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாசப்பெருமாள் பெருமாள் கோயில் நிர்வாகம் இணைந்து வாசகர்களாகிய உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் பூரண நலன் வேண்டி இந்த ஹோமத்தை நடத்தவுள்ளது. பிரத்தியேகமான ஹோம திரவியங்களும், விலை உயர்ந்த ஆகுதிகளும் கொண்டு முறைப்படி இந்த ஹோமம் நடைபெறவுள்ளது. முறைப்படி வேதம் பயின்ற சிரோன்மணிகளைக் கொண்டே இந்த ஹோமம் நடக்கவிருக்கிறது. எனவே விருப்பமுள்ள வாசகர்கள் உங்கள் குடும்ப நலன் வேண்டி இதில் கலந்துகொண்டு சங்கல்பிக்கலாம். ஸ்ரீமகா தன்வந்த்ரி ஹோம வைபவத்துடன், பகவானுக்குத் சிறப்பு திருமஞ்சனம் மற்றும் விசேஷ பூஜைகள் நடைபெற உள்ளன.

அலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாசப்பெருமாள் பெருமாள்
அலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாசப்பெருமாள் பெருமாள்

புகழ்மிக்க இந்த ஆலயத்தில் தீராத நோயால் அவதிப்பட்ட நல்லியக்கோட மன்னனின் நோயைத் தீர்க்க இங்கே பெருமாள் ஸ்ரீதன்வந்திரி பகவானாகவே வந்து அருள்புரிந்து நலம் அளித்தாராம். இத்தைகைய பெருமை கொண்ட இந்த ஆலயத்தில் நடைபெறும் ஸ்ரீதன்வந்திரி ஹோமத்தில் கலந்து கொண்டால் பல்வேறு நோய்கள், தோஷங்கள், துன்பங்கள் கொண்டவர் எல்லோரும் நிச்சயம் பலன் பெறுவர். உடல் குறைபாடுகள் நீங்கி நோய் அச்சமின்றி பூரண ஆயுளை அடைவர் எனப்படுகிறது. எனவே துன்பங்கள் நீங்கி, இன்பங்கள் சூழ இந்த இனிய வைபவத்தில் கலந்து கொள்வோம்!

குறிப்பு : உங்கள் தெளிவான முகவரியைக் குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும்.

ஸ்ரீனிவாசப்பெருமாள் பெருமாள்
ஸ்ரீனிவாசப்பெருமாள் பெருமாள்

வாசகர்கள் கவனத்துக்கு:

இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (₹.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்மம்+குங்குமம்) அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி ஹோம வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, ஹோம வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism