Published:Updated:

பிணிகள் தீர்க்கும் ஸ்ரீதன்வந்த்ரி மகா ஹோமம்!

ஸ்ரீதன்வந்த்ரி 
மகா ஹோமம்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரீதன்வந்த்ரி மகா ஹோமம்

உண்மையில் இந்தக் கலியுகத்தில் மக்கள் நோயின்றி ஆரோக்கிய மாக வாழத் திருவுள்ளம் கொண்ட பகவான் விஷ்ணு எடுத்த அவதாரம்தான் தன்வந்த்ரி அவதாரம்!

பிணிகள் தீர்க்கும் ஸ்ரீதன்வந்த்ரி மகா ஹோமம்!

உண்மையில் இந்தக் கலியுகத்தில் மக்கள் நோயின்றி ஆரோக்கிய மாக வாழத் திருவுள்ளம் கொண்ட பகவான் விஷ்ணு எடுத்த அவதாரம்தான் தன்வந்த்ரி அவதாரம்!

Published:Updated:
ஸ்ரீதன்வந்த்ரி 
மகா ஹோமம்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரீதன்வந்த்ரி மகா ஹோமம்

ன்வந்த்ரி பகவான் மகாவிஷ்ணுவின் அவதாரம். மற்ற அவதாரங்களில் தன்னுடைய அவதார நோக்கம் நிறைவேறியதும் தன்னுடைய யதாஸ்தானமான வைகுந்தத்தை அடைந்துவிடும் பகவான் மகாவிஷ்ணு, தன்வந்த்ரி அவதாரத்தில் மட்டும் இந்தப் பூவுலகிலேயே அர்ச்சா மூர்த்தியாக - குறிப்பிட்ட சில ஆலயங்களில் பரிவார தெய்வமாகக் காட்சி அருள்கிறார்.

தன்வந்த்ரி அவதாரம், அமிர்தம் வேண்டி தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலைக் கடைந்தபோது அமிர்தகலசத்துடன் தோன்றிய அவதாரம். இந்த அவதாரம் சுயநலம் கொண்ட தேவர்களுக்காக ஏற்பட்ட அவதாரமல்ல.

‘என்ன தேவர்களுக்கு சுயநலமா?’ என்று கேட்டால், ஒரே ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிடலாம். அசுரன் ஒருவனுடன் ஏற்பட்ட போரில் தங்களுக்கு உதவிய முசுகுந்த சக்கரவர்த்திக்கு, அவர் கேட்ட விடங்க மூர்த்தியைத் தராமல் இருக்க முயற்சி செய்தது சுயநலம்தானே! இப்படி பல நிகழ்வுகள் தேவர்களின் குறிப்பாக இந்திரனின் சுயநலத்தை வெளிப்படுத்தவே செய்கின்றன.

உண்மையில் இந்தக் கலியுகத்தில் மக்கள் நோயின்றி ஆரோக்கிய மாக வாழத் திருவுள்ளம் கொண்ட பகவான் விஷ்ணு எடுத்த அவதாரம்தான் தன்வந்த்ரி அவதாரம்! தேவர்களை அதற்குக் கருவியாகக் கொண்டார் என்றே சொல்லவேண்டும்.

பிணிகள் தீர்க்கும் ஸ்ரீதன்வந்த்ரி 
மகா ஹோமம்!

அது மட்டுமா? நம் அனைவரையும் காப்பாற்ற தன்வந்த்ரி அவதாரம் நிகழவேண்டும் என்பதற்காக, கூர்ம அவதாரம் எடுத்து மந்தரமலையின் பெரும்சுமையைத் தாங்கவும் செய்தார், பரம காருண்ய மூர்த்தியான ஸ்ரீமகாவிஷ்ணு!

ஸ்ரீமகாவிஷ்ணுவின் உத்தரவின்படி தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தனர். அப்போது கடலிலிருந்து ஆலகால விஷம் தோன்றியது. சிவபெருமான் அதை விழுங்கிவிட்டார். தொடர்ந்து காமதேனு, ஐராவதம், கற்பகவிருட்சம், கௌஸ்துப மணி ஆகியவையும் மகாலட்சுமியும் தோன்ற, மங்கலகரமான அம்சங்களுடன் தன்வந்த்ரி பகவானும் திருக்கரத்தில் அமிர்த கலசத்துடன் அவதரித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அவர் திருக்கரத்திலிருந்து பெற்ற அமிர்தத்தை உண்டதால்தான் தேவர்கள் அழியாத அமரத்துவத்தைப் பெற்றனர் என்கின்றன ஞானநூல்கள். இவரையே மருத்துவத்துறையின் பிதாமகன் என்பர்.

ஆயுர்வேதத்தின் சிருஷ்டிகர்த்தா ஸ்ரீதன்வந்த்ரி பகவான். நாள்பட்ட தீராத நோய்க்கும், உடல் சம்பந்தப்பட்ட கோளாறுகளுக்கும் தீர்வு வேண்டி, ஸ்ரீதன்வந்திரி பகவானை மனதார வழிபட்டு பிரார்த்தித்துக் கொண்டால், விரைவில் நிவாரணம் பெறலாம். ஆம்! குறைவற்றச் செல்வமான நோயற்ற வாழ்க்கையை வரமாகப் பெற ஸ்ரீதன்வந்த்ரி பகவானையே நாம் வழிபட வேண்டும்.

ஸ்ரீதன்வந்த்ரி பகவானைத் திருவோணம், அஸ்தம், சுவாதி, புனர்பூசம், ஆகிய நட்சத்திர நாள்களிலும், ஏகாதசி திதியிலும், ஞாயிறு மற்றும் வியாழக்கிழமைகளிலும் வழிபடுவது நல்லது. அவரை வேண்டிச் செய்யப்படும் வழிபாடுகளில் முக்கியத்துவம் வாய்ந்தது, மகா ஸ்ரீதன்வந்த்ரி ஹோமம் ஆகும். இந்த ஹோமத்தில் கலந்துகொண்டு தரிசிப்பதுடன், ஸ்ரீதன்வந்த்ரி பகவானை மனத்தில் தியானித்து வழிபடுவதால், நோயற்ற நீண்ட ஆயுளைப் பெறலாம் என்கின்றன ஞானநூல்கள்.

அவ்வகையில், இன்றைக்கு உலக மக்களைப் பெரும் துன்பத்தில் ஆழ்த்தியுள்ள கொடுமையான கொரோனா பெருந்தொற்றின் பாதிப்புகள் அனைத்தும் விலகவும், பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் நலம்பெறவும், வாசகர்கள் அந்தப் பாதிப்புக்கு ஆளாகாத வண்ணம் பூரண உடல் ஆரோக்கியம் பெறவும் வேண்டி, சக்தி விகடன் சார்பில் பிரமாண்டமான மகா ஸ்ரீதன்வந்த்ரி ஹோமம் நடைபெறவுள்ளது.

சக்தி விகடன் மற்றும் திருவடிசூலம் ஆதிபரமேஸ்வரி ஸ்ரீகருமாரி அம்மன் அறக்கட்டளை இணைந்து வழங்கும் இந்த ஹோம வைபவம், வரும் 27.9.2020 (புரட்டாசி - 11) ஞாயிற்றுக்கிழமை அன்று நிகழவுள்ளது.மகா தன்வந்த்ரி ஹோமம் நடைபெறவுள்ள இந்தத் திருநாள், பெருமாளுக்கு மிகவும் உகந்த புரட்டாசி மாதம் - ஏகாதசி திதி- திருவோண நட்சத்திரம் மற்றும் அமிர்தயோகம் கூடிய உன்னதமான திருநாள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நாளில் செய்யப்படும் வழிபாட்டு வைபவங்களுக்குப் பன்மடங்கு பலன் உண்டு என்பர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அற்புதமான இந்தத் தினத்தில் நூற்றி எட்டு திவ்யதேச சந்நிதிகளின் சங்கமத் தலமான செங்கல்பட்டு அருகிலுள்ள திருவடிசூலம் சப்த சைலஜ ஸ்ரீபாதாத்ரி நூற்றியெட்டு திவ்யதேசத்தில், தேவி ஸ்ரீகுகயோகி மதுரைமுத்து ஸ்வாமிகள் முன்னிலையில் நடைபெறும் மகா தன்வந்த்ரி ஹோம வைபவத்துடன், ஆலயத்தில் சந்நிதி கொண்டிருக்கும் ஸ்ரீதன்வந்த்ரி பகவானுக்குத் சிறப்பு திருமஞ்சனம் மற்றும் விசேஷ பூஜைகள் நடைபெற உள்ளன.

பிணிகள் தீர்க்கும் ஸ்ரீதன்வந்த்ரி 
மகா ஹோமம்!

நடப்புச் சூழலில் உரிய விதிகளைப் பின்பற்றி நிகழவுள்ள இந்த ஸ்ரீதன்வந்திரி மகா ஹோமம் மற்றும் வழிபாடுகளில், வாசகர்கள் தங்கள் நலனுக்காகவும் பிள்ளைகள் மற்றும் உற்றார் உறவினர்களின் நன்மைக்காகவும் வேண்டிச் சங்கல்பித்து பலன் பெறலாம்.

வாசகர்களின் நலன் வேண்டி, அனைவரும் பூரண ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் பெற்று மகிழும்விதம் சிறப்புப் பிரார்த்தனையுடன் நடைபெறவுள்ள இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.250 மட்டும்) நிர்ணயிக் கப்பட்டுள்ளது. அவ்வகையில் ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனை கள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படுவதுடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்மம்) அனுப்பி வைக்கப்படும். (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்)

நேரில் தரிசிக்க இயலாத நிலையில்... வாசகர்கள் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் (29.9.20 செவ்வாய் அன்று) வீடியோ வடிவில் சக்தி விகடன் யூடியூப் சேனல் மற்றும் முகநூல் பக்கத் தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்!

முன்பதிவு மற்றும் சங்கல்ப விவரங்களுக்கு:

73974 30999; 97909 90404.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism