Published:Updated:

சொந்த வீடு செல்வ வளம் கல்யாண வரம்... கனவை நனவாக்கும் ஸ்ரீவராகர் தரிசனம்

ஸ்ரீவராகர்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரீவராகர்

மார்கழி ஆண்டாளை வழிபட வேண்டிய மாதம். ஆண்டாள் நாச்சியாருக்கும் வராக அவதாரத்துக்கும் சம்பந்தம் உண்டு.

சொந்த வீடு செல்வ வளம் கல்யாண வரம்... கனவை நனவாக்கும் ஸ்ரீவராகர் தரிசனம்

மார்கழி ஆண்டாளை வழிபட வேண்டிய மாதம். ஆண்டாள் நாச்சியாருக்கும் வராக அவதாரத்துக்கும் சம்பந்தம் உண்டு.

Published:Updated:
ஸ்ரீவராகர்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரீவராகர்

திண்டிவனம் ரயில்வே கேட்டைத் தாண்டி குறுகலான சாலையில் பயணிக்கத் தொடங்கியபோதே நகரின் அடையாளங்கள் மறைந்து கிராம சூழல் தோன்றிவிட்டது!

முதல்நாள் இரவிலிருந்து பெய்து கொண் டிருந்த மழை அந்தப் பகுதியின் சாயலை ரம்மியமாக மாற்றியிருந்தது. கறுமையான மேகக்கூட்டங்கள் அந்த மாலவனின் நிறத்தை நினைவூட்டின. அவ்வப்போது பெய்யும் சாரல், அவன் கருணையைப் போல சிலிர்ப்பூட்டியது.

8 கி.மீ. தூரம் பயணித்ததும் நாம் சேரவேண்டிய பெரமண்டூர் கிராமம் வந்தது. ஊர் அமைதியில் உறைந்திருந்தது. குறைவான வீடுகளே இருக்கின்றன. ஆனால் ஒருகாலத்தில் மிகச் சிறப்புவாய்ந்த ஊராக இருந்திருக்கவேண்டும் எனும் கருத்தை நமக்குள் உருவாக்கியது.

அன்று மார்கழி முதல் நாள். அன்று அவ்வூர் வராக சுவாமியை தரிசிப்பதுடன், வாசகர்கள் நன்மைக்காக சிறப்பு ஆராதனை கள் செய்வது என்றும் திட்டமிட்டிருந்தோம்.

சொந்த வீடு செல்வ வளம் 
கல்யாண வரம்... கனவை நனவாக்கும் ஸ்ரீவராகர் தரிசனம்

மார்கழியில் வராகர் தரிசனம்

மார்கழி ஆண்டாளை வழிபட வேண்டிய மாதம். ஆண்டாள் நாச்சியாருக்கும் வராக அவதாரத்துக்கும் சம்பந்தம் உண்டு. தசாவதாரங்களில் மூவுலகங்களையும் அளந்த திரிவிக்ரம அவதாரம்கூட, இந்த பூமியில் கால் ஊன்றி நின்றது. ஆனால், வராக அவதாரமோ பூமியையே தன் கொம்பில் ஒரு தூசியைப் போல எளிதாகத் தூக்கி நின்று அருளியது. அதனால் அவதாரங்களில் வராக அவதாரமே பெரியது என்கிறார்கள் ஆசார்யர்கள்.

ஜீவர்களை அடிப்படையாகக்கொண்டே பாவ புண்ணியம், சொர்க்க - நரக லோகங்கள் இயங்குகின்றன. பூமியைப் பரிபாலனம் செய்வதுவே தேவர்களின் கடமை. அந்தப் பூமியே இல்லை என்றால் அவர்களின் பணி என்னவாகும்? மேலும், அந்தப் பரமன் படைத்த பிரபஞ்ச ஒழுங்கைக் குலைப்பது என்பது அந்தப் பரமனையே எதிர்ப்ப தாகுமே!

மமதையினால் அதைச் செய்யத் துணிந் தான் அசுரன் ஹிரண்யாட்சன். பூமியைத் தூக்கிச் சென்று மறைத்து வைத்தான். பஞ்ச பூதங்களின் காப்பில்லாமல் பூமியை மறைத்துவைத்தால் அதில் வாழும் ஜீவர்களின் நிலை என்னாகும்?

சொந்த வீடு செல்வ வளம் 
கல்யாண வரம்... கனவை நனவாக்கும் ஸ்ரீவராகர் தரிசனம்

அவை தவிப்பதை அந்த வைகுண்ட வாசன் பார்த்துக்கொண்டிருப்பானா என்ன... வராகமாய் வந்தார். பூமியைத் தன் கொம்புகளால் தாங்கி மீட்டார்.

பூமாதேவி, பகவானின் காருண்யத்தால் சிலிர்த்தாள். ஆபத்துக் காலத்தில் தனக்குக் கிடைத்த இந்த பாக்கியம் சாதாரண ஜீவர் களுக்கும் கிடைக்க வேண்டும் அதற்கான உபாயத்தைத் தாங்களே அருள வேண்டும் என்று வேண்டிக்கொண்டாள். அப்போது வராக சுவாமி ஓர் உபாயத்தை உபதேசித்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஸ்ரீவராக உவாச:

ஸ்த்திதே மநஸி ஸுஸ்வஸ்த்தே

ஸரீரே ஸதி யோ நர:

தாதுஸாம்யே ஸ்த்திதே ஸ்மர்த்தா

விச்வரூபஞ்ச மாமஜம்

ததஸ்தம் ம்ரியமாணம் து

காஷ்ட்டபாஷாண ஸந்நிபம்

அஹம் ஸ்மராமி மத்பக்தம்

நயாமி பரமாம் கதிம்

இந்த ஸ்லோகத்துக்கு `வராக சரம ஸ்லோகம்' என்று பெயர்.

`நல் ஆரோக்கியத்தோடு மனதும் உடலும் இருக்கும்போது, ஒருவன் ஒரு கணமேனும் நம்பிக்கையோடு என்னை நினைப்பான் எனில், அவன் வயதாகி உடல் தளர்ந்து நினைவற்றுப் போகும்போது நான் அவனை நினைப்பேன்' என்பது இதன் கருத்து.

சொந்த வீடு செல்வ வளம் 
கல்யாண வரம்... கனவை நனவாக்கும் ஸ்ரீவராகர் தரிசனம்

எவ்வளவு பெரிய உபாயம் இதைப் பற்றிக் கொண்டுதான் ‘அப்போதைக்கிப்போதே...’ என்று ஆழ்வார் பாடி அருளினார்.

காலம் உருண்டது. வராகர் அருளிய உபதேசம் பக்தர்களுக்குச் சொல்லப்பட வேண்டிய தருணம் வந்தது. பூமிப்பிராட்டி இந்த மண்ணில் ஆண்டாளாய் அவதரித்தாள்.

பாசுரங்களும் பாவைகளும் பாடி அந்தப் பரந்தாமனைப் போற்றினாள். ஆண்டாள் போற்றிய மார்கழியில் ஆண்டாளை பூதேவித் தாயாராகக் கண்டு வணங்குவது மகா பாக்கியம். அப்படி ஒரு பாக்கியத்தைப் பெறவே நாம் பெரமண்டூர் வந்தோம்.

சொந்த வீடு செல்வ வளம் 
கல்யாண வரம்... கனவை நனவாக்கும் ஸ்ரீவராகர் தரிசனம்

அமரர்கள் வழிபட்ட பெரமண்டூர்!

ஹிரண்யாட்சனை வதம் செய்தும் வராக சுவாமியின் உக்கிரம் குறையவேயில்லை. அதைக் கண்டு பிரம்மா முதலான தேவர்கள் அஞ்சி நடுங்கினர். சாந்தம் அடைந்து காட்சி அருளுமாறு வேண்டினர். அவர்களின் வேண்டுதலுக்கு இரங்கிய சுவாமி, சாந்த மூர்த்தியாக பூமிப்பிராட்டியை ஆலிங்கனம் செய்த கோலத்தில் திருக்காட்சி அருளினார்.

அவ்வாறு அவர் காட்சி அருளிய திருத்தலம் பெரமண்டூர். தேவர்கள் அனைவரும் பெரும் கூட்டமாக மண்டி (நெருக்கிக்கொண்டு) நின்று வராக சுவாமியினை பூஜை செய்த ஊர் என்பதால் ‘பெருமண்டியூர்’ என்று வழங்கப் பட்டுப் பின் பெரமண்டூர் ஆனது.

சொந்த வீடு செல்வ வளம் 
கல்யாண வரம்... கனவை நனவாக்கும் ஸ்ரீவராகர் தரிசனம்

இந்தத் தலத்தில் சுவாமிக்குக் கோயில் எழுப்புமாறு மகேந்திரவர்மப் பல்லவன் பணிக்க, சிறுபாணாற்றுப்படையின் பாட்டுடைத் தலைவனாக விளங்கிய நல்லியகோடன் அதை நிறைவேற்றினான். செங்கல் கட்டுமானமாக இருந்த ஆலயத்தைக் கற்றளியாக எழுப்பினான்.

பிற்காலத்தில் அந்நிய ஆதிக்கத்தால் ஆதிவராகர் கோயில் பராமரிப்பு இன்றி நலிந்தது. மிகவும் சிதிலமடைந்திருந்த இந்த ஆலயம் சில ஆண்டுகளுக்கு முன்புதான் புனரமைக்கப்பட்டது.

ஆதிசேஷனின் சிரத்தில் வராகரின் திருப்பாதம்!

ஆலயத்தின் முகப்பில் கருவறை நோக்கி கருடபகவான் கைகூப்பி நிற்க, அருகிலேயே பெரிய கொடிமரம். நாம் பக்கவாட்டு வழியாக ஆலய மண்டபத்துக்குள் நுழைந்தோம்.

கருவறையில் ஆஜானுபாகுவாக அருளும் ஆதிவராகர் நம் கருத்தைக் கவர்கிறார். அது கோயிலின் கருவறை எனும் பிரக்ஞை மட்டும் இல்லாமல் இருந்தால், எதிரே வராகம் நிற்கிறது

என்று திகைக்கச் செய்யும் அளவுக்கு தத்ரூபத் தோற்றம். சுவாமியின் வலது திருப்பாதம் பூமியில் பதிந்திருக்க, இடப் பாதத்தை ஆதிசேஷன் தாங்கி நிற்கிறார். மடங்கிய இடது தொடையில் பூமிப் பிராட்டியை அமர்த்தி ஆலிங்கனம் செய்த திருக்கோலம்!

சொந்த வீடு செல்வ வளம் 
கல்யாண வரம்... கனவை நனவாக்கும் ஸ்ரீவராகர் தரிசனம்

இந்த அற்புத தரிசனம் கண்டு களித்துச் சில நிமிடங்கள் கழித்தே அர்த்த மண்டபத்தில் சில சந்நிதிகள் இருப்பதைக் கண்டோம். கருவறைக்கு வெளியே இடப்புறம் பூதேவி ஸ்ரீதேவி சமேதராகக் காட்சி கொடுக்கும் கோதண்ட ராமரைக் கண்டு மகிழ்ந்தோம். வலப்புறம் ஆழ்வார்கள் சந்நிதி. வெளி மண்டபத்தில் விஷ்ணு துர்கை அருள்பாலிக்கிறாள்.

மார்கழி முதல் நாள் ஆனதால் அன்று சுவாமிக்கு சிறப்புத் திருமஞ்சனம் நடைபெற்றது. வாசகர்களின் நலனுக்காக சங்கல்பம் செய்து பிரார்த்தித்துக்கொண்டு திருமஞ்சனத்தை தரிசித்து மகிழ்ந்தோம்.

பின்பு ஆலயத்தின் பெரிய பிராகாரத்தில் வலம் வந்தோம். பிரதட்சிணத்தின் முதலில் தாயார் சந்நிதியை அடைந்தோம். கருணை பொழியும் முகத்தோடு மகாலட்சுமித் தாயார் அருட்காட்சி தருகிறார். அடுத்து ஆண்டாள் சந்நிதி. பிராகாரம் முடிவடைவதற்கு முன் ஆஞ்சநேயர் சந்நிதி. அதன் அருகிலேயே தல விருட்சமாக வில்வ விருட்சம் விளங்குகிறது.

சொந்த வீடு செல்வ வளம் 
கல்யாண வரம்... கனவை நனவாக்கும் ஸ்ரீவராகர் தரிசனம்

கனவை நனவாக்கும் மகிமைகள்!

ஆலயத்தின் அறங்காவலர் காசிநாதனிடம் பேசினோம்.

“வராக சுவாமி என்றாலே பூமியைக் காப்பவர் என்பதுதான் முதலில் தோன்றும். வாங்கிய நிலத்தில் பிரச்னை, நீண்ட நாள்களாக முயற்சி செய்தும் சொந்த வீடு வாங்க முடியாத நிலை, நிலத்தைப் பிரிப்பதில் வில்லங்கள், வீடு கட்டி முடிக்க முடியாமல் தடுமாறுதல் ஆகிய பிரச்னை உள்ளவர்கள் இங்குவந்து வேண்டிக் கொண்டால் அந்தக் குறைகளைத் தீர்ப்பார்.

நிலம் தொடர்பான பிரச்னைகள் நீங்க, நிலப்பத்திரங்களைக் கொண்டுவந்து சுவாமியின் பாதத்தில் வைத்து நெய்விளக்கேற்றி வழிபட்டால் நன்மைகள் உண்டாகும்.

வராக சுவாமி, இங்கு பூமாதேவியை ஆலிங்கனம் செய்த நிலையில் கல்யாணக் கோலத்தில் காட்சி தருவதால், இது திருமணப் பரிகாரத் தலமாகவும் விளங்கிறது. அர்த்த மண்டப விதானத்தில் சுவாமியை தரிசித்துப் பணிவதுபோல் ராகு-கேது அம்சமாக சர்ப்பம் ஒன்று காணப்படுகிறது. எனவே இத்தலம் ராகு - கேது பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது'' என்றார்.

ஆலயத்தில் அர்ச்சகராகப் பணியாற்றும் பிரகலாதனிடம் பேசினோம்.

“தேவர்களும் அனைவரும் வந்து பூஜை செய்த பெருமாள் இவர். அனுக்கிரக மூர்த்தி. சுவாமியின் ஒரு கண் பூமாதேவியையும் மறு கண் தரிசிக்க வரும் பக்தர்களைக் காணும் விதமாகவும் சுவாமியின் திருக்கோலம் அமைந்துள்ளது விசேஷம். ஆகவே, சுவாமியின் பார்வை பட்டால் தீராத நோயெல்லாம் விரைவில் தீரும். வீட்டில் செல்வ வளம் சேரும்.

ஆயிரத்து முந்நூறு ஆண்டுகள் பழைமையான கோயில். சிதிலமடைந்திருந்த கோயிலில் திருப்பணி முடிந்து மூன்று ஆண்டுகள்தான் ஆகின்றன. இந்த மூன்று ஆண்டுகளில் இங்கு வந்து வேண்டி பலன் பெற்றோர் அநேகர். குழந்தை வரம் பெற்றதால் நன்றிக் காணிக்கை யாக துலாபாரம் குடுத்த பக்தர்கள் பலர். இன்னும், இந்தத் தலத்தின் மகிமை அறிந்து அநேகர் வந்து தரிசனம் செய்து வரங்கள் பெற வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்” என்றார்.

ஆலயம் புனரமைக்கப்பட்டு விட்டாலும் சில திருப்பணிகள் பாக்கியுள்ளன. குறிப்பாக ஆலய வளாகத்தில் கல்யாண உற்சவங்கள் நடைபெற ஏதுவாக மண்டபம் அமைக்கும் பணி நிதி நெருக்கடியால் தடைப்பட்டுள்ளது. பெருமாள் அருளால் அதுவும் விரைவில் நிறைவேறும் என்கிறார்கள் ஆலய நிர்வாகிகள்.

கருணையின் வடிவமாகத் தன் கண் அசைவினாலேயே அனைத்தையும் நிறைவேற்றித் தரும் ஆதிவராக சுவாமி நிச்சயம் அதைச் செய்துகொடுப்பார் என்பதில் சந்தேகமேயில்லை (தொடர்பு: 97511 17144).