கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்றது, ஆனைக்கல் மலை. மேற்குத்தொடர்ச்சி மலைகளை ஒட்டி அமைந்துள்ள - சுமார் 2500 அடி உயரம் கொண்ட குன்றுதான் இந்த ஆனை மலை.

இந்த மலைமுகட்டை உற்றுக் கவனித்தால், உச்சியில் திகழும் பாறை ஒன்று யானை படுத்திருப்பது போன்று தோன்றும். ஆகவே, இந்த மலையை ஆனைக்கல் மலை என்கிறார்கள். நாகர்கோவிலில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ஆனைக்கல் மலை. இயற்கை எழிலார்ந்த இந்த மலையின் குகை ஒன்றில் அருள்பாலிக் கிறார், ஆனைக்கல் ஸ்ரீதர்மசாஸ்தா.

முனிவர்கள் பலர் தவம் செய்து அருள்பெற்றதாகச் சொல்லப்படும் அமைதியும் ஆனந்தமும் நிறைந்த ஆனைக்கல் சாஸ்தாகோயிலுக்கு ஒருநாள் காலை வேளையில் புறப்பட்டுச் சென்றோம்.

இந்த மலைக்குச் செல்ல இரண்டு வழிகள் உள்ளன. நாகர் கோவில் - களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 7 கி.மீ. பயணித்தால், தோட்டியோடு என்ற பகுதி வரும். அங்கிருந்து மெளன குருசுவாமி மடம் வழியாக செல்ல வேண்டும். சிறிது தூரம் வாகனங்களில் செல்லலாம். பிறகு சுமார் 5 கி.மீ. தூரத்துக் குக் கரடுமுரடான மலைப் பாதையில் பயணிக்க வேண்டும்.

மற்றொரு மார்க்கம்... நாகர் கோவிலிலிருந்து பார்வதிபுரம், கள்ளியங்காடு ஆலம்பாறை வழியாகச் சென்று, மலைமீது ஏறிச் செல்லலாம். எந்த வழியாகச் சென்றாலும் குறிப்பிட்ட இடத்திலிருந்து மரங்களும் புதர்களும் நிறைந்த பகுதி வழியாக நடந்துதான் மலைக்கு மேல் செல்ல முடியும்.

ஆனைக்கல் மலைக்குச் செல்லும் வழிகளில், ஆங்காங்கே பெயிண்ட் மூலம் எழுதப்பட்ட அடையாளங்கள் நமக்கு வழிகாட்டுகின்றன. தோட்டியோடு பகுதி வழியாக செல்லும் பாதையைப் பக்தர்கள் இப்போதுதான் சீரமைத்து வருகிறார்கள். மலைப்பாதையில் நடந்து ஆனைக்கல் தர்மசாஸ்தா கோயிலைச் சென்றடைய குறைந்தது சுமார் இரண்டு மணி நேரம் ஆகும்.

இந்த மலையில் ஏறிச் செல்லும்போது, சபரிமலைக்குப் பெருவழிப் பாதையில் பயணிக் கும் அனுபவம் கிடைக்கிறது. நம் பயணத்தில் பக்தர்கள் சிலரும் பூஜைப் பொருள்களுடன் மலையேறி வந்தார்கள்.

ஒரு வழியாக, யானையைப் போன்று திகழும் பாறை இருக்கும் இடத்தை அடைந்தோம். அந்தப் பாறையின் வடக்குப் பகுதியில், வடக்கு நோக்கிய நிலையில் ஸ்ரீதர்மசாஸ்தா கோயில் அமைந்துள்ளது.

பாறையில் அமைந்துள்ள குகை போன்ற பகுதியில் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீதர்மசாஸ்தா, ஸ்ரீபூதத்தான் மற்றும் நாகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

ஸ்ரீதர்மசாஸ்தா இடக் காலை மடித்து வைத்து, வலக் காலை தொங்கவிட்டபடி, கையில் தாமரை மலரை ஏந்தியவண்ணம் அருள்பாலிக்கிறார். அவரின் திருமுன் யானை வாகனம் அமைந் துள்ளது. ஸ்ரீதர்மசாஸ்தா மூலவரின் மீது பாறை இடுக்குகளிலிருந்து தண்ணீர் சொட்டு சொட்டாக விழுந்துகொண்டே இருக்கிறது.

கடும் கோடைக்காலமாக இருந்தாலும் சுவாமி மீது தண்ணீர் விழுவது நிற்காது என்று சிலிர்ப்புடன் சொல்கிறார்கள் பக்தர்கள். அதேபோல், அடைமழை பெய்தாலும், சுவாமியை அபிஷேகிக்கும் இந்த நீரின் அளவு அதிகரிப்பது இல்லையாம். வழக்கம்போல சொட்டுச்சொட்டாகத்தான் விழுமாம்!

இப்படி, இயற்கையாகவே 24 மணி நேரமும் ஸ்ரீதர்மசாஸ்தாவுக்கு ‘ஜலாதாரை’ நடந்துகொண்டே இருக்கிறது. அதேநேரம், அங்கிருக்கும் வேறு எந்த சுவாமி சிலைகளின் மீதும் தண்ணீர் விழுவது இல்லை. `இது இயற்கை நிகழ்த்தும் அதிசயமே' என்கிறார்கள் பக்தர்கள்.

கோயிலுக்கு வெளியே திறந்தவெளியில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அந்தக் கோயிலுக்குள் உள்ள ஒரு பாறையில் ‘இலங்கத்து புத்தன் வீடு’ எனும் சிறிய கல்வெட்டு ஒன்று உள்ளது.

இந்தக் கோயிலில் பூஜை செய்ய தனியாக பூசாரிகள் எவரும் இல்லை. மலை ஏறிச் செல்லும் பக்தர்களே சுவாமிக்கு பூஜை செய்கிறார்கள். பூஜை செய்வதற்கான உபகரணங்கள், நைவேத்தி யம் மற்றும் உணவு வகைகளைத் தயாரிக்கப் பயன்படும் பொருள்களைக் கோயிலிலேயே வைத்துள்ளார்கள்.

பக்தர்கள் சிலர் ஒன்றிணைந்து கோயிலின் தரைப் பகுதியில் டைல்ஸ் பதிக்கும் பணியை செய்திருக்கிறார்கள்.

நம்முடன் மலை ஏறி வந்த பக்தர்கள் பூஜை செய்யத் தயாரானார்கள். ஆனைக்கல் மலை ஸ்ரீதர்மசாஸ்தா கோயிலின் அருகில், சிறியளவிலான சுனைகள் ஒன்றிரண்டு உள்ளன.

அவற்றில் ஒன்றிலிருந்து நீர் எடுத்து பக்தர்கள் குளித்தார்கள். நாமும் நீராடினோம். அகத்தைக் குளிர்வித்தது சுனைநீர். பின்னர், பக்தர்கள் அந்தச் சுனையின் தெளிந்த நீரை குடத்தில் சுமந்துவந்து, சுவாமிக்கு அபிஷேகித்து அலங்காரம் செய்தார்கள்.

தொடர்ந்து ஸ்ரீசாஸ்தாவுக்குப் பூமாலை சாத்தி, பழம் உள்ளிட்ட பதார்த்தங்களைப் படைத்து தீபாராதனை செய்தார்கள். தீப ஜோதியில் ஸ்ரீதர்மசாஸ்தாவை கண்குளிர தரிசித்தோம்; மனமுருக வழிபட்டோம். அந்தத் தருணத்தில் ஆனைக்கல் மலையே சாஸ்தாவின் வடிவாகவும், அவர் மடியில் நாம் தவழ்வதுபோன்றும் ஒரு சிலிர்ப்பு நமக்குள்!

கேரள மாநிலத்திலிருந்தும் அதிக பக்தர்கள் வருகிறார்கள். அதிலும், இப்போது கொரோனா கட்டுப்பாடுகளால் சபரிமலைக்குச் செல்ல முடியாத பக்தர்கள், ஆனைக்கல் தர்மசாஸ்தா கோயிலுக்கு வந்து வழிபட்டுச் செல்கிறார்கள். ஞாயிறு, பெளர்ணமி போன்ற தினங்களில் சிறு சிறு குழுவாக வருகிறார்கள் பக்தர்கள்.

முன்பு, கார்த்திகை மாதத்தில் மாலையணிந்து சபரிமலை செல்லும் பக்தர்கள், கடும் விரதம் இருக்கும் பொருட்டு, இந்த மலையின்மீது தங்கியிருந்து, அங்கேயே சமைத்துச் சாப்பிட்டு விரதம் இருப்பது வழக்கமாம். துறவிகள் பலரும் இந்தக் குகைப் பகுதியில் வாழ்ந்து முக்தி அடைந்ததாகவும் கூறுகிறார்கள்.

ஆனைக்கல் மலையின் உச்சிப் பகுதியில் தீபம் ஏற்றுவதற்காக சுமார் 5 அடி உயரத்தில் கற்கள் அடுக்கப்பட்டுள்ளன. மகர ஜோதி தினத்தில், ஆனைக்கல் மலையின் உச்சியிலும் தீபம் ஏற்றப்படுகிறது. இந்த தீபம் சுமார் 10 கி.மீ. சுற்றளவில் உள்ள ஊர்களில் தெரியும்.

இந்த மலை வனத்துறையின் கட்டுப் பாட்டின் கீழ் உள்ளது. மலைமீதுள்ள ஸ்ரீதர்மசாஸ்தா கோயிலைப் பக்தர்கள் சேர்ந்து பராமரித்து வருகிறார்கள். இக்கோயிலின் மகிமை குறித்து தோட்டியோடு மெளன குருசுவாமி மடத்தின் தலைவர் சுகதேவனிடம் பேசினோம்.

“இருநூறு வருடங்களுக்கு முன்னால் ஆனைக்கல் பகுதியில் சாது ஒருவர் தவம் இருந்துள்ளார். அப்போது, மலைப்பகுதியை எங்கள் முன்னோர்கள் சிலர் குத்தகைப் பாட்டத்துக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார்கள். அவர்கள் அந்தச் சாதுவைப் பார்த்து ஆசி வாங்குவது வழக்கம். சாது வழிபாடு நடத்திய குகை அப்படியே கோயிலாக மாறியுள்ளது. அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் செல்வாக்குடன் திகழ்ந்த பரசேரியைச் சேர்ந்த தாணுபிள்ளை என்பவர் 150 வருடங்களுக்கு முன்பே, ஸ்ரீதர்மசாஸ்தா சிலையைப் பிரதிஷ்டை செய்திருக்கிறார்.

அமைதியான தருணத்தில், தர்மசாஸ்தாவின் மீது சொட்டு சொட்டாக நீர் விழும் சத்தம் மலைச்சுவர்களில் துல்லியமாக எதிரொலிப் பதைக் கேட்கலாம். புதிதாக தியானம் பழகுவோர், இந்தச் சத்தத்தை உள்வாங்கி மனத்தை ஒருமுகப்படுத்த ஏற்றதாக இருக்கும். ஆகவே, மகான்கள் நிறையபேர் இங்கு தங்கியிருந்துள்ளனர். இப்போதும் பலரும் இங்கு வந்து தியானம் செய்கிறார்கள்.

பங்குனி உத்திரம் அன்று பக்தர்கள் ஒன்றிணைந்து சமைத்து அன்னதானம் வழங்குவதும் உண்டு. இங்கு வரும் பக்தர் களுக்கான வசதிகளைச் செய்து தர, ஆனைக்கல் ஸ்ரீதர்மசாஸ்தா சேவா அறக்கட்டளை என்ற அமைப்பை ஏற்படுத்தியிருக்கிறோம்” என்றார்.

இயற்கையை இறைவனாய் தரிசிக்க நாடும் அன்பர்களும் ஐயப்பமார்களும் அவசியம் தரிசிக்கவேண்டிய புண்ணிய க்ஷேத்திரம் இது. புதியவர்கள், தகுந்த வழிகாட்டிகளோடு சென்று தரிசிப்பது சிறப்பு.