Published:Updated:

தடைகள் நீங்கி எங்கும் எதிலும் வெற்றிபெற வைக்கும் ஸ்ரீஜெய விஜய ஹோமம்... நீங்களும் சங்கல்பிக்கலாம்!

ஸ்ரீஜெய விஜய ஹோமம்
ஸ்ரீஜெய விஜய ஹோமம்

பெருமைகள் பல கொண்ட இந்த ஸ்ரீஆத்யந்த பிரபு ஆலயத்தில் வரும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 5-9-2021 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி 'ஸ்ரீஜெய விஜய மகா ஹோமம்' நடைபெறவுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

எந்த வடிவில் வழிபட்டாலும் பேரருளை அள்ளி வழங்கக் கூடிய கருணை கொண்டவர் கணபதி. அதிலும் ஆதியான கணபதியை பராக்கிரமம் மிகுந்த அனுமனோடு இணைத்து வணங்குவது மிகச் சிறந்த பரிகார வழிபாடாக உள்ளது.

முழுமுதல் கடவுளான கணபதியை வணங்கியே எந்த ஒரு காரியமும் தொடங்கப்படும். அதேபோல ராமதூதனான அனுமனை வணங்கி அந்த நிகழ்ச்சியை நிறைவு பெறச் செய்வோம். ஆதி கணபதி என்றால் அந்தம் அனுமன் என்பர் பெரியோர். விநாயகரும், அனுமனும் இணைந்த வடிவத்தை ஸ்ரீஆத்யந்த பிரபு என்று வணங்குகிறோம்.

ஆத்யந்த பிரபு
ஆத்யந்த பிரபு

இருவருமே பிரம்மச்சாரிகள். கணபதி ஆனை முகன். அனுமன் வானர முகன். இருவருமே அசாத்திய பலம் பெற்றவர்கள். இருவருமே எளியவர்க்கு எளியவர்கள். இருவருமே சூரியனை குருவாகக் கொண்டவர்கள். இருவரிடமும் நவகிரகங்கள் அடிபணிந்து நிற்கும். அனுமன் சிவரூபம், கணபதி சக்தியால் உருவான சக்தி ஸ்வரூபம். இரண்டும் இணைய பூரணத்துவமான பலன்கள் கிட்டும். விஸ்வரூப தரிசனத்தில் இருவருக்குமே ஐந்து முகங்கள். இருவருக்குமே செந்தூரம் சாத்தி வழிபடுவது வழக்கம்.

முன்னவர் தெரு முனையில் கூட அமர்வார் என்றால், பின்னவர் தூணில் கூட அருள்பாலிக்கும் எளியவர். இருவருமே மனதிடத்துக்கும் புத்திக்கூர்மைக்கும் சிறந்தவர்கள். இருவருமே தியான நிலையில் சதாசர்வ காலமும் இருப்பவர்கள். இப்படி இருவருக்குமான ஒற்றுமைகள் பல உண்டு. இதனால் இருவரும் இணைந்த வடிவத்தை வணங்குவதால் பன்மடங்கு யோகம் கிடைக்கும் என்பர் பெரியோர்.

இத்தனை சிறப்புகள் கொண்ட கணபதியும் அனுமனும் இடதும் வலதுமாக இணைந்திருக்கும் அபூர்வ கோலம் ஆத்யந்த பிரபு என்று வணங்குவர். ஆத்யந்த பிரபு மூலவராக அமர்ந்திருக்கும் ஒரே ஆலயம் சென்னையை அடுத்த வல்லக்கோட்டை அடுத்த வடக்கால் பகுதியில் சென்னை ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.

அற்புதமான பிரமாண்டத் திருமேனியாக கணபதியும் அனுமனும் இணைந்து எழுந்தருளி இருக்கும் இந்த கோயிலில் வரங்களை வாரி வழங்கும் காமதேனுவாக, கற்பக விருட்சமாக ஸ்ரீஷீரடி சாய்பாபாவும் எழுந்தருளி உள்ளார் என்பது சிறப்பாகும்.

ஸ்ரீஷீரடி சாய்பாபா
ஸ்ரீஷீரடி சாய்பாபா

இந்த ஆலயம் எழுந்து கொண்டிருக்கும்போது ஸ்ரீஆத்யந்த பிரபுவும் கருணாமூர்த்தியான பாபாவும் செய்த அற்புதங்கள் அநேகம். மழலை இல்லாத அநேக அன்பர்களுக்கு மழலை வரம் கிட்டியதும், வழக்கில் சிக்கி இருந்த பெரும் சொத்தை சுமூகமாக மீட்டுக் கொடுத்ததும் என பல அற்புதங்கள் நடந்தன. அதனால் பக்தர்களின் ஏகோபித்த ஆதரவால் இந்த ஆலயம் அழகுற எழும்பி உள்ளது.

பெருமைகள் பல கொண்ட இந்த ஸ்ரீஆத்யந்த பிரபு ஆலயத்தில் வரும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 5-9-2021 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி 'ஸ்ரீஜெய விஜய மகா ஹோமம்' நடைபெறவுள்ளது. எல்லா காரியத்திலும் வெற்றியை பெற உதவும் இந்த ஹோமத்தால் பல நன்மைகள் உண்டு.

பதவி உயர்வு, வேலை வாய்ப்பு, வெளிநாட்டு வாய்ப்பு, வழக்கில் வெற்றி, சொத்துப் பிரச்னைகளில் தீர்வு, உறவுகளில் சிக்கல், எண்ணியவை நிறைவேறுதல், அச்சங்களில் இருந்து விடுதலை என பல்வேறு பலன்களை அளிக்கும் அபூர்வ ஹோமம் இது. 108 கணபதி ஹோமமும் 108 ஸ்ரீவைணதேய ஆஞ்சநேய ஹோமமும் இணைந்த பலனை இந்த ஹோமம் தருமாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திருச்சி கோயில்கள் - 9 - ஊட்டத்தூர்: ராஜராஜ சோழனின் நோயைத் தீர்த்த அதிசயக் கோயிலின் சிறப்புகள்!

அபூர்வ மூலிகைகள் கொண்டு செய்யப்படும் இந்த ஹோமத்தால் சர்வ ரோகங்களும் நீங்கும் என்கிறார்கள். இந்த ஹோமத்தோடு ஷீரடி சாயிநாதருக்கு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற உள்ளன.

கணபதியையும் அனுமனையும் ஒரு சேரத் தொழும் இந்த ஹோமத்தில் சிரத்தையுடன் பங்கேற்பவர்களுக்கு இருவரின் பேரருளால் கர்ம வினைகள் நீங்கி நீங்காத கல்வி அறிவும், சிறப்பான ஞானமும், கேடில்லா செல்வமும், உண்டாகும். சகல காரிய அனுகூலம் உண்டாகும், எதிரிகளின் இடையூறுகள் விலகும். சகல நோய்களும் நீங்கி, அஷ்ட ஐஸ்வர்யங்களுடன் வாழும் நிலையைப் பெறலாம்.

வாசகர்களின் கவனத்துக்கு:

ஸ்ரீஜெய விஜய ஹோமம்
ஸ்ரீஜெய விஜய ஹோமம்

இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்மம்) மற்றும் ரட்சை அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்).

தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி ஹோம வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, ஹோம வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு