Published:Updated:

ஸ்ரீஜெயவிஜய ஹோமம்: நிறைந்த ஆயுள், நீங்காத செல்வம்! ஹோமத்தில் நீங்களும் பங்கேற்பது எப்படி?

ஸ்ரீஆத்யந்த பிரபு
ஸ்ரீஆத்யந்த பிரபு

ஸ்ரீஜெயவிஜய ஹோமம்: 108 கணபதி ஹோமங்களும் 108 ஸ்ரீவைணதேய ஆஞ்சநேய ஹோமங்களும் 108 பசுக்களை தானம் கொடுத்த பலன்களைத் தருமாம் இந்த ஹோமம்.

ண்டுக்கு ஒரு முறையாவது குடும்ப நலனுக்காக, உலக வளர்ச்சிக்காக வீட்டிலேயோ ஆலயத்திலேயோ ஹோமம் செய்வது அவசியம் என்று ஆன்மிகம் கூறுகின்றது. குறைந்த பட்சம் ஹோமத்தில் சங்கல்பம் செய்து கொள்வதாவது சிறந்தது என்றும் கூறுகிறது. இதனால் நம்மைச் சுற்றியுள்ள தேவதைகள் நாம் செய்கிற ஹோமங்களில் திருப்தி அடைந்து நமக்கு அனுக்கிரகத்தை அள்ளித் தருகின்றன என்பது ஐதீகம்.

சில ஹோமங்களை வீட்டில் செய்யக்கூடாது, சில ஹோமங்கள் அதிக செலவு பிடிக்கக் கூடியது, சில ஹோமங்கள் அதிக கட்டுப்பாடுகளுடன் செய்ய வேண்டியது என பல்வேறு சாஸ்திரங்கள் ஹோமங்களுக்கு உண்டு. இதனால் தான் ஆலயத்தில், அல்லது உன்னதமான திருமடங்கள், அதிஷ்டானங்களில் ஹோமங்கள் நடைபெறும்போது நாம் கலந்து கொள்வது நல்லது என பெரியோர்கள் கூறி உள்ளனர்.

ஆத்யந்த பிரபு
ஆத்யந்த பிரபு

அவ்வகையில் மிக அபூர்வமான ஹோமங்களை உங்கள் சக்தி விகடன் தொடர்ந்து வாசகர்கள் நலனுக்காக நடத்தி வருகிறது. அந்த வகையில் வரும் ஞாயிற்றுக் கிழமை காலை 9 மணி அளவில் சென்னையை அடுத்த வல்லக்கோட்டை தாண்டி வடக்கால் பகுதில் அமைந்துள்ள ஸ்ரீஆத்யந்த பிரபு ஆலயத்தில் நடைபெற இருக்கும் ஸ்ரீஜெயவிஜய ஹோமம் மிக மிக அபூர்வமானது. நீண்ட ஆரோக்கியமான நல்வாழ்வைத் தரக்கூடியது இந்த ஹோமம்.

ஆனைமுகனும் அனுமனும் இணைந்து அருளும் ஸ்ரீஆத்யந்த பிரபு வடிவத்துக்கு செய்யப்படும் இந்த ஹோமத்தால் காரிய ஸித்தி உண்டாகும். நிறைந்த செல்வமும் நீடித்தப் புகழையும் அளிக்கும் இந்த ஹோமத்தால் மேலும் பல பலன்கள் உண்டு என்கின்றன சாஸ்திரங்கள். கண்திருஷ்டி அகலும், பகை தீரும், தோஷங்கள் நீங்கி சந்தோசம் உருவாகும். சுபகாரியங்கள் விரைவாக நடைபெறும். தள்ளிப்போன உங்கள் நியாயமான விருப்பங்கள் நிறைவேறும். சிறப்பினும் சிறப்பாக இந்த ஹோமத்தைத் தொடர்ந்து அதே ஆலயத்தில் எழுந்தருளி உள்ள ஸ்ரீஷீரடி சாய்பாபாவின் அபிஷேக ஆராதனைகளும் நடைபெற உள்ளன.

தன்னை விஞ்சிய, தமக்கு மேலான எந்த நாயகரும் இல்லை என்பதால்தான் விநாயகர் என்றானார் ஈசன் மைந்தன். அதைப்போலவே பராக்கிரமத்தில் அனுமனை மிஞ்ச ஆளே இல்லை என்பதுதான் புராணங்கள் கூறும் தகவல்; அனுமன் ஈஸ்வர அம்சம் கொண்டவர். இதனால் இவர்கள் இருவரும் இணைந்து அனுகிரகம் செய்யும் காரியங்கள் தடைபடுவதில்லை. எந்த கோள்களும் இவர்களை மீறி நமக்கு தீமை செய்வதில்லை என்பது எல்லாம் ஆன்மிக நூல்கள் கூறும் உண்மை.

ஸ்ரீஷீரடி சாய்பாபா
ஸ்ரீஷீரடி சாய்பாபா

அழைக்கும்போதே அனுக்கிரகத்தோடு வரும் கருணை கொண்டவர்கள் கணபதியும் அனுமனும். இவர்களை கருணையோடு அழைத்தால் நம்மை காலம்தோறும் காப்பார்கள் என்பது நிச்சயம். அக்னிக்கு அர்பணிக்கும் பொருள்கள் இறைவனை அடைகிறது என்பது சூட்சம ரகசியம். ஹோமத்தில் நீங்கள் சங்கல்பிக்கும் ஆகுதிகள் இறைவனை மகிழ்வித்து, அனுகிரகங்களாக, அற்புதமான வரங்களாக காலத்தே நம்மை வந்து அடையும் என்பது ஆன்றோர் வாக்கு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சௌபாக்கிய வாழ்வைத் தரும் ஸ்ரீஜெய விஜய ஹோமம் - ஸ்ரீஆத்யந்த பிரபு! நீங்களும் சங்கல்பிக்கலாம்!

108 கணபதி ஹோமங்களும் 108 ஸ்ரீவைணதேய ஆஞ்சநேய ஹோமங்களும் 108 பசுக்களை தானம் கொடுத்த பலன்களைத் தருமாம் இந்த ஹோமம். சுபகாரியங்கள் தள்ளிப்போகின்றன, காரியங்கள் நடைபெறாமல் நிற்கின்றன, தொழிலும் வியாபாரமும் மீண்டும் சிறப்பாக நடைபெற வேண்டும் என்று வேண்டுபவர்கள், வேலை கிடைக்க வேண்டும், வெளிநாட்டு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று வேண்டுபவர்கள் எல்லோரும் இந்த ஹோமத்தில் கலந்து கொண்டு நற்பலன்களை அடைய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

வாசகர்கள் கவனத்துக்கு:

இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீஜெய விஜய ஹோமம்
ஸ்ரீஜெய விஜய ஹோமம்

ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்மம்) மற்றும் ரட்சை அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் – புதுவை பகுதிகளுக்கு மட்டும்).

தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி ஹோம வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, ஹோம வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

அடுத்த கட்டுரைக்கு