Published:Updated:

ஸ்ரீராமன் சீதையின் கைப்பிடித்தத் திருத்தலம்!

கல்படி கல்யாணராமன் ஆலயம்

பிரீமியம் ஸ்டோரி

சீதா தேவி, லட்சுமணன், ஆஞ்சநேயருடன் ராமன் கருவறையில் காட்சிதரும் தலங்கள் தமிழகத்தில் அரிதாகவே உள்ளன. அப்படி அரிதான ஒரு தலம்தான் கல்படி ஸ்ரீகல்யாண ராமன் திருக்கோயில்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகிலுள்ளது கல்படி எனும் இந்தத் தலம்.

“இலங்கையில் ராவணனை வீழ்த்தியபிறகு, சீதையின் தூய்மையை - புனிதத்தை உலகுக்குப் பறைசாற்ற முடிவுசெய்தார் ஸ்ரீராமன்.

ஸ்ரீராமன் சீதையின் 
கைப்பிடித்தத் திருத்தலம்!

அதற்காக ஏற்படுத்தப்பட்ட அக்னி குண்டத் தில் இறங்கினார் சீதாதேவி. அவ்வாறு அக்னியில் இறங்கி தங்கமாக ஜொலித்த சீதையின் கையைப் பிடித்து குண்டத்தில் இருந்து கரையேற்றினார் ஸ்ரீராமன்.

இங்ஙனம் ஸ்ரீராமன் சீதாதேவியின் கையைப் பிடித்த தலம் என்பதால் `கைப்பிடி' என இந்தத் தலத்திற்குப் பெயர் வந்தது. அதுவே நாளடைவில் `கல்பிடி' என மருவிய தாகச் சொல்கிறார்கள், இந்தக் கிராம வாசிகள்.

ஸ்ரீராமன் சீதையின் 
கைப்பிடித்தத் திருத்தலம்!

நெல் வயல்களும், வாழைத் தோப்புகளு மாக மிகப் பசுமை சூழ்ந்து திகழ்கிறது கல்படி கல்யாண ராமர் கோயில். கோயிலுக்குச் சற்றுத் தள்ளி குளம் அமைந்துள்ளது. கோயிலைச் சுற்றி விரிந்து கிடக்கும் விளைநிலங்கள் இக்கோயிலுக்கு சொந்தமானவை. கோயிலை ஒட்டி குடிநீர்க் கிணறு ஒன்றும் உள்ளது. இந்தக் கிணற்றின் தண்ணீரே கோயில் தேவைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

வெள்ளிமலை அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் பூஜை செய்த அந்தணர்கள் முன்பு வழிபட்டு வந்த கோயில் இது. இந்தக் கோயில் கும்பாபிஷேகப் பணிக்காக 12 ஆண்டுகளுக்கு முன்பே பாலாலயம் செய்யப் பட்டதாம். ஆனாலும் இன்னும் கும்பாபிஷேகப் பணிகள் நடைபெறவில்லை.

இதுபற்றி கோயிலின் அருகில் குடியிருக்கும் மணிகண்டன் கூறும்போது, “இந்தக் கல்யாண ராமர் கோயில் 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. கல்யாணம் என்றால் மங்கலம் என்று பொருள். இந்தத் தலத்தில் வழிபடுபவர்கள் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும் என்பது ஐதிகம்.

ஸ்ரீராமன் சீதையின் 
கைப்பிடித்தத் திருத்தலம்!

கருவறை, அதையொட்டி சிறு மண்டபம், அடுத்து சுற்றுப்பிரகாரத்துடன் கூடிய கல் மண்டபம் என அமைந்திருக்கிறது. கோயிலுக்கு வெளிப்புறத்தில் ஸ்தல விருட்சமான அரசமரம் நிற்கிறது. அதன் அடியில் உள்ள நாகராஜா சந்நிதி பராமரிப்பு இல்லாமல் காட்சியளிக்கிறது.

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை நாங்கள் இந்தக் கோயிலில் வழிபட்டு வந்தோம். இந்து சமய அறநிலையத்துறை தரப்பில், 12 வருடங்களுக்கு முன்பு கும்பாபிஷேகப் பணிக்காக பாலாலயம் செய்து, சுவாமியைக் கும்பத்தில் எடுத்து வெளியே தனி இடத்தில வைச்சாங்க. அன்று கோயிலைப் பூட்டினது தான் அதற்குப் பிறகு திறக்கவே இல்லை. இடைப்பட்ட காலத்தில், மதிலை ஒட்டிய சுற்றுப் பிராகாரத்தைச் சீரமைத்தார்கள். ஆனால் கோயில் கோபுரத்தில் புதர்மண்டி கிடந்தது. அயோத்தி ராமர் கோயில் கட்டுறதுக்கு அடிக்கல் நாட்டுன தருணத்தில், பக்தர்கள் எல்லாம் சேர்ந்து புதர்களை அகற்றினோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அரசாங்கம் உடனடியா இந்தக் கோயிலைப் புனரமைத் துக் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். அதுவரை, கோயில் முன்வாசலைத் திறந்து கல் மண்டபத்தில் விளக்கு ஏற்றி வழிபடுவதற்காகவாவது பக்தர்களுக்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறோம்.

ஸ்ரீராமன் சீதையின் 
கைப்பிடித்தத் திருத்தலம்!

இந்தக் கோயிலுக்குச் சுமார் 18 ஏக்கர் அளவில் விவசாய நிலங்கள் இருக்கு. அவற்றைக் குத்தகைக்கு விட்டிருக்காங்க.அதன் மூலமா வருஷத்துக்கு இரண்டு லட்சம் ரூபாய் வருவாய் வருது. ஆனாலும் இந்தக் கோயிலை இந்து சமய அறநிலையத்துறை கண்டுகொள்ளவில்லை.கோயில் பிராகாரத்தைச் சுற்றி இருள் சூழ்ந்து கிடக்கிறது. எனவே, இந்தக் கோயிலில் பக்தர்கள் வழிபடுவதற்கான வசதியை உடனடியாகச் செய்துகொடுக்க வேண்டும்'' என்றார்.

இதுபற்றி கல்படி கல்யாண ராமர் கோயில் ஸ்ரீகாரியம் (மேலாளர்) ரகுவிடம் பேசினோம், “திருப்பணி செய்வதற்காக பணிகள் ஆரம்பிக் கப்பட்டு ஓட்டு கட்டடமாக இருந்த சுற்றுப் பிராகாரங்கள் 2011-ம் ஆண்டிலேயே கட்டி முடிக்கப்பட்டன. விமானத்தை முற்றிலும் மாற்றி அமைக்கும் பணிக்கு ஒரு உபயதாரர் முன்வந்தார். இடையில அவர் ஒரு விபத்தை சந்திக்க நேரிட்டதால் பணிகள் தடைப்பட்டன.

ஸ்ரீராமன் சீதையின் 
கைப்பிடித்தத் திருத்தலம்!

அதன்பிறகு மத்திய அரசு புரதான கோயில் களைச் சீரமைப்பதற்காக நிதி வழங்கியது. அந்த நிதி வேறு ஒரு கோயிலுக்கு பயன்படுத்தப் பட்டுவிட்டது. அதனால் நிதிப் பற்றாக்குறை.

அதன்பிறகு, இந்து சமய அறநிலையத்துறை நிதியில் கட்டிமுடிக்க முயன்றபோது, தொல்லியல் துறை உள்ளேவந்தது. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான பழைமையான கோயில் என்பதால், விமானத்தை இடித்து அகற்றாமல், அதை அப்படியே புதுப்பிக்க வேண்டும் என்றார்கள். அதன்படி தொல்லியல்துறையின் அறிக்கை பெறப்பட்டது.

மேலும், நீதிமன்ற வழிகாட்டுதல்படி நூறு ஆண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்த கோயில்களைப் புனரமைக்கும் முன்பு கமிட்டி அமைக்கப்பட்டது. அதன் பின்னர்தான் விமான திருப்பணிக்காக டெண்டர் விடப்பட்டது. சில தொழில்நுட்பக் காரணங்களால் மறுபடியும் டெண்டர் வைக்கும்படி அதிகாரிகள் கூறினர். மறுபடியும் மதிப்பீடு செய்யப்பட்டு ஆணையருக்கு அனுப்பியிருக்கிறோம். விரைவில் திருப்பணி தொடங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்றார்.

ஸ்ரீராமன் சீதையின் 
கைப்பிடித்தத் திருத்தலம்!

ஸ்ரீராமனின் அருள் நிறைந்த இத்தலத் தில் அவருக்கான திருக்கோயில், விரைவில் பொலிவுடன் எழும்பவேண்டும். அதன் பொருட்டு நாமும் பிரார்த்திப்போம்.

எப்படிச் செல்வது?: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது கல்படி. வெள்ளிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலிலிருந்து சுமார் ஒரு கி.மீ. தூரம். நாகர்கோவிலில் இருந்து ராஜாக்கமங்கலம் வழியாக வெள்ளச்சந்தை வந்து, அங்கிருந்தும் கல்படிக்குச் செல்லலாம். அல்லது திங்கள்சந்தை எனும் ஊருக்குச் சென்று, அங்கிருந்தும் 5 கி.மீ. பயணித்து இக்கோயிலைச் சென்றடையலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு