Published:Updated:

ஸ்ரீகும்ப குருப்பெயர்ச்சி பரிகார மஹாஹோமம்: யாரெல்லாம் செய்ய வேண்டும்? குருப்பெயர்ச்சி வழிகாட்டல்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
குருப்பெயர்ச்சி பரிகார ஹோமம்
குருப்பெயர்ச்சி பரிகார ஹோமம்

12 ராசிக்காரர்களும் வாழ்வில் நலமும் வளமும் பெறவும் அவர்கள் உற்றார் உறவினர்கள், நண்பர்கள் இல்லங்களில் தீமைகள் நீங்கி சகல சுபிட்சங்களும் உண்டாகவும் உங்கள் சக்தி விகடன் ஸ்ரீகும்ப குருப்பெயர்ச்சி பரிகார மஹாஹோமம் ஒன்றை நடத்த உள்ளது.

குருவருள் துணை இருக்க திருவருள் கூடிவரும் என்பர். மங்கலம் எல்லாம் அருளும் குருபகவான் இந்த ஆண்டு இந்த மாதம் இடம் பெயர இருக்கிறார். கிரகப் பெயர்ச்சிகளில் மிக முக்கியமான குரு பகவான் பிலவ வருடம் ஐப்பசி 27-ம் நாள் (நவம்பர் 13) அன்று மாலை 6.10 மணிக்கு மகர ராசி அவிட்டம் 2-ம் பாதத்திலிருந்து கும்ப ராசியில் இருக்கும் அவிட்ட நட்சத்திரம் 3-ம் பாதத்திற்கு பெயர்ச்சி ஆக இருக்கிறார். மேலும் 2021 நவம்பர் 13-ம் தேதி முதல் ஏப்ரல் 13-ம் தேதி வரை கும்ப ராசியில் சஞ்சாரம் செய்யும் குருபகவான் அதன் பின் அதிசாரமாக மீன ராசிக்குச் செல்வார் என்கின்ற ஜோதிட சாஸ்திரங்கள்.
ஸ்ரீகும்ப குருப்பெயர்ச்சி பரிகார மஹாஹோமம்
ஸ்ரீகும்ப குருப்பெயர்ச்சி பரிகார மஹாஹோமம்

ஒவ்வொரு ராசிக்காரருக்கும் குருபகவான் அமர்ந்திருக்கும் இடம் பொறுத்து ஒவ்வொரு விதமான பலன்களை அவர் அளிப்பார் என்பது வழக்கம். அதன்படி இந்த குருப்பெயர்ச்சியால் (2021-2022) எந்த எந்த ராசிக்காரர்களுக்கு குருபகவான் நன்மை அளிக்கப் போகிறார். எந்த ராசிக்காரர்கள் பரிகார பூஜைகளை செய்து நன்மை பெறலாம் என்பதையும் சக்தி விகடன் விளக்கமாகவே கூறி இருப்பதை நீங்கள் அறிந்து இருக்கலாம். அதன்படி...

உத்தம பலன்கள் பெறும் ராசிகள்:

மேஷம் - 11 இடம்
மிதுனம் - 9 ம் இடம் - குருபார்வை
சிம்மம் - 7 ம் இடம் - குருபார்வை
துலாம் - 5 ம் இடம் - குருபார்வை

நவகிரஹ மஹாஹோமம்
நவகிரஹ மஹாஹோமம்

மத்திம பலன்கள் பெறும் ராசிகள்:

கடகம் - 8 ம் இடம்
மகரம் - 2 ம் இடம்
மீனம் - 12 ம் இடம்

குறைவான பலன்கள் பெறும் ராசிகள்:

ரிஷபம் - 10 ம் இடம்
கன்னி - 6 ம் இடம்
தனுசு - 3 ம் இடம்
விருச்சிகம் - 4 ம் இடம்
கும்பம் - ஜன்ம குரு

என்று கூறப்படுகிறது. ஆக, இந்த குருப்பெயர்ச்சியால் ரிஷபம், கன்னி, தனுசு, விருச்சிகம், கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் கட்டாயம் பரிகாரம் செய்து கொள்ள வேண்டி உள்ளது.

வேலைச்சுமை, சிறுசிறு ஏமாற்றங்கள், அலைச்சல், உடல் பிணிகள் போன்றவை இந்த காலகட்டத்தில் உருவாகும் என்பதால் அதன் வீரியத்தைக் குறைத்து குருவருளால் நன்மை பெற பரிகார பூஜைகள் அவசியம் ஆகிறது. அதேபோல் கடகம், மகரம், மீனம் ராசி அன்பர்களும் சிறப்பான பலன்களைப் பெற பரிகார பூஜைகள் சிறப்பு ஹோமங்கள் செய்வது அவசியம் ஆகிறது.

12 ராசிக்காரர்களும் வாழ்வில் நலமும் வளமும் பெறவும் அவர்கள் உற்றார் உறவினர்கள், நண்பர்கள் இல்லங்களில் தீமைகள் நீங்கி சகல சுபிட்சங்களும் உண்டாகவும் உங்கள் சக்தி விகடன் ஸ்ரீகும்ப குருப்பெயர்ச்சி பரிகார மஹாஹோமம் ஒன்றை நடத்த உள்ளது.
G.K.முத்து குருக்கள்
G.K.முத்து குருக்கள்

சக்தி விகடனும் ஶ்ரீவிஜய விஸ்வமாதா ராஜராஜேஸ்வரி பீடமும் இணைந்து நடத்தும் இந்த ஹோமம், பாண்டிச்சேரி - கடலூர் மார்க்கத்தில், இடையார் பாளையம், அருகில் ஞானமேடு கிராமத்தில் (சப்தகிரி நகர்) உள்ள அருள்மிகு சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆலயத்தில் நடைபெற உள்ளது, 13.11.2021 சனிக்கிழமை அன்று மாலை 4 மணி முதல் நடைபெறவுள்ள இந்த ஹோமத்தில் வாசகர்கள் பதிவு செய்து கொண்டு சங்கல்பம் செய்து பயன் அடையலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த ஸ்ரீகும்ப குருப்பெயர்ச்சி பரிகார மஹாஹோமத்தில் ஸ்ரீகுரு கணபதி மஹாஹோமம், ஸ்ரீமேதா தக்ஷிணாமூர்த்தி மஹாஹோமம், ஸ்ரீயோக குரு பகவான் மஹாஹோமம், ஸ்ரீஸ்வர்ணாகர்ஷன பைரவர் மஹாஹோமம், நவகிரஹ மஹாஹோமம், அகத்தியர் மஹாஹோமம்- சேஷாத்ரி ஸ்வாமிகள் மஹாஹோமம்,மஹா பூர்ணாஹுதி, மஹா அபிஷேகம், அலங்காரம், உபசாரம், மஹா தீபாராதனை உள்ளிட்ட சகல குரு பரிகார வைபவங்களுக்கு நடைபெற உள்ளது. இந்த மஹா ஆராதனையை பைரவ குருஜீ G.K.முத்து குருக்கள் நடத்தித் தர உள்ளார்.

குருபகவான்
குருபகவான்
எனவே அனைவரும் இந்த வைபவத்தில் கலந்துகொண்டு குருவருளால் இந்த நாடும் உங்கள் வீடும் நலம் பெற பிரார்தித்துக் கொள்ளலாம். குரு பலமிக்க ஜாதகருக்குப் பொன்னும் பொருளும் தன்னால் சேரும். ஆயுளும் ஆரோக்கியமும் மேம்படும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

வாசகர்கள் கவனத்துக்கு:

இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500 மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படுவதுடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்மம் - 30.11.2021 தேதிக்குள்) அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவைப் பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில் அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி ஹோம வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆக, நேரில் தரிசிக்க இயலாத நிலையில் வாசகர்கள் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் விரைவில் வீடியோ வடிவில் சக்தி விகடன் Youtube சேனல் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்!

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு