Published:Updated:

ஸ்ரீராஜலட்சுமி குபேர ஹோமம்: நினைத்தவை நிறைவேற அனைத்து லாபங்களும் பொங்கிப்பெருக சங்கல்பியுங்கள்!

லட்சுமி குபேர ஹோமம்

வரும் 18-9-2022 ஞாயிறு, புரட்டாசி மாதம் முதல் நாளில் மத்யாஷ்டமி, லட்சுமி பூஜை தினமான சுபயோக தினத்தில் காலை 10.30 தொடங்கி 12 மணி வரை இந்த ஸ்ரீராஜலட்சுமி குபேர ஹோமம் நடைபெற உள்ளது.

ஸ்ரீராஜலட்சுமி குபேர ஹோமம்: நினைத்தவை நிறைவேற அனைத்து லாபங்களும் பொங்கிப்பெருக சங்கல்பியுங்கள்!

வரும் 18-9-2022 ஞாயிறு, புரட்டாசி மாதம் முதல் நாளில் மத்யாஷ்டமி, லட்சுமி பூஜை தினமான சுபயோக தினத்தில் காலை 10.30 தொடங்கி 12 மணி வரை இந்த ஸ்ரீராஜலட்சுமி குபேர ஹோமம் நடைபெற உள்ளது.

Published:Updated:
லட்சுமி குபேர ஹோமம்
உலகத்தின் அனைத்து செல்வங்களுக்கும் அதிஷ்டான தேவதை திருமகள். மகாவிஷ்ணுவின் திருமார்பில் குடி இருக்கும் இவள், கருணையே வடிவானாள். ஒவ்வொருவரின் கர்மாக்களின் படி செல்வங்களை வாரி வழங்குபவள் என்கின்றன ஞான நூல்கள்.

'யார் ஒருவர் தான்கொண்ட கொள்கையில் உறுதியோடு தர்மப்படி நடக்கிறார்களோ, பிறர் தன்னைத் தூஷிக்கும்போதும் கோபமடையாமல் இருக்கிறார்களோ, தெய்வத்திடம் அதிக பக்தியை செலுத்துகிறார்களோ, செய்நன்றியை மறவாமல் இருக்கிறார்களோ, புலன்களை அடக்கி ஜீவகாருண்யத்தில் செல்கிறார்களோ, அவர்களிடத்தில் நான் நித்தியமாய் வசிப்பேன்' என்கிறாள் லட்சுமி.

மேலும் 'ரஜோகுணத்தையும் தமோ குணத்தையும் அடக்கி சத்வகுணம் கொண்டவரிடமும், ஏழைகளிடம் கருணை கொண்டவர்களிடமும், நேர்மையோடு உழைப்பவர்களிடமும், பொறுமையும் அர்ப்பணிப்பும் கொண்டவர்களிடமும், சுத்தமானவர்களிடமும், பிற உயிர்களிடம் தயை கொண்டவரிடமும் நான் தாராளமாக வழங்குவேன்' என்றும் உறுதி அளித்துள்ளாள் திருமகள்.

ஸ்ரீலட்சுமி குபேரர் ஆலயம்
ஸ்ரீலட்சுமி குபேரர் ஆலயம்

இந்த திருமகளின் திருவருளைப் பெற்றவர்கள் சகல செல்வங்களையும் பெற்றுத் திகழ்வதோடு, எல்லா இடத்திலும் எப்போதும் முதன்மை கொண்டவர்களாகத் திகழ்வார்கள். திருமகளின் அருளைப் பெற்றவர்களை யாரும் வெல்லவும் முடியாது என்கின்றன சாஸ்திரங்கள். எல்லா சபையிலும் முந்தியிருக்கச் செய்யும் திருமகளின் பூரண ஆசியைப் பெற குபேர வழிபாடும் அவசியம் என்கிறார்கள் பெரியோர்கள்.

திருமகளின் செல்வத்தை உலகத்தோருக்கு விநியோகிக்கும் திறன் படைத்தவர் ஸ்ரீகுபேரர். திருமகளையும் குபேரரையும் ஒரு சேர ஆராதிக்கும் அற்புத வழிபாடு லட்சுமி குபேர ஹோமம். இந்த லட்சுமி குபேர பூஜையை சிறப்பாக நடத்தி வரும் ஆலயம்தான் அரக்கோணம் பருத்திபட்டூரில் எழும்பியுள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீலட்சுமி குபேரர் ஆலயம். இங்கு ஸ்ரீலட்சுமியோடு ஸ்ரீகுபேரர், அவர் மனைவி சித்திரலேகாவும் பிரமாண்ட வடிவில் எழுந்தருளி உள்ளார்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இங்குதான் தகுந்த வேத விற்பன்னர்களைக் கொண்டு பல அபூர்வ மூலிகைகள், சமித்துக்கள், ஹோம வஸ்துக்கள் கொண்டு இந்த யாகம் நடைபெற உள்ளது. அரக்கோணம் ரயில் நிலையத்தில் இருந்து 6கி.மீ தொலைவில் இந்த ஆலயமே உள்ளது. இங்கு ஸ்ரீமகாலட்சுமி 84 அடி உயரத்தில் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். ஸ்ரீகுபேரரும் அவர் மனைவி சித்ரலேகா அமர்ந்த கோலத்தில் எழுந்தருளி உள்ளார்கள். 3 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த ஆலயம் செல்வ விருத்தி தலமாகவும் கடன் நிவர்த்தி தலமாகவும் விளங்கி வருகிறது.

சொர்ணாகர்ஷண பைரவர்
சொர்ணாகர்ஷண பைரவர்
இந்த ஆலயத்தில் விநாயகப்பெருமான், முருகப்பெருமான், சொர்ணாகர்ஷண பைரவர், அஷ்ட லட்சுமியர், சரஸ்வதி, நவகிரக சந்நிதிகளும் அமைந்துள்ளன. இங்கு திருமகள் புஷ்பவல்லித் தாயார் என்ற திருநாமத்தோடு சேவை சாதித்து வருகிறார். திருப்பதி, சோளிங்கர் செல்லும் புனித யாத்திரீகர்கள் எல்லோரும் வணங்கிச் செல்லும் இந்த ஆலயத்தில் லட்சுமி குபேரரை வணங்குவது மிகவும் சிறப்பு என்கிறார்கள் ஊர் மக்கள்.

இந்த சுபகிருது ஆண்டில் கடந்த இரு ஆண்டுகளில் தொடர்ந்த பொருளாதாரச் சிக்கல்கள் யாவும் தீர்ந்து நன்மைகள் விளையும் என நம்பப்படுகிறது. அதற்கேற்ப உங்கள் நன்மைக்காக சக்தி விகடனும் அரக்கோணம் ஸ்ரீலட்சுமி குபேரர் ஆலய நிர்வாகமும் இணைந்து ஸ்ரீராஜலட்சுமி குபேர ஹோமம் நடத்த உள்ளோம். வரும் 18-9-2022 ஞாயிறு, புரட்டாசி மாதம் முதல் நாளில் மத்யாஷ்டமி, லட்சுமி பூஜை தினமான சுபயோக தினத்தில் காலை 10.30 தொடங்கி 12 மணி வரை இந்த மஹாஹோமம் நடைபெற உள்ளது.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

ஸ்ரீலட்சுமியோடு ஸ்ரீகுபேரர், சித்திரலேகா
ஸ்ரீலட்சுமியோடு ஸ்ரீகுபேரர், சித்திரலேகா

முதல் நாள் அதாவது 17-9-2022 அன்று மாலை 4.30 அளவில் இந்த ஆலயத்தில் வாஸ்து ஹோமமும் அதைத்தொடர்ந்து புண்ணியா சடங்குகளும் நடைபெற உள்ளன. மறுநாள் அதாவது 18-9-2022 அன்று காலை 5 மணிக்கு கோபூஜை, 6 மணிக்கு அக்னி பிரதிஷ்டை, பிறகு கணபதி ஹோமம், சொர்ணாகர்ஷண பைரவர் ஹோமம், அஷ்டலக்ஷ்மி ஹோமம், நவகிரஹ ஹோமம், மகாசுதர்ஸன ஹோமம், ஸ்ரீராஜலட்சுமி குபேர ஹோமம் என்று நடைபெற உள்ளன. பிறகு கலசாபிஷேகம், அபிஷேக ஆராதனைகளும் நடைபெற உள்ளன. பிரமாண்டமான இந்த ஹோமத் திருவிழாவில் நீங்களும் கலந்து திருமகளின் பூரண ஆசியைப்பெற்று வாழ்வில் சகல சம்பத்துக்களும் பெற வேண்டுகிறோம்.

கடன்கள் தீரவும், தொழில் வளம், உத்தியோக உயர்வு, உத்தியோகப் பிராப்தி, வெளிநாட்டு யோகம் யாவும் கிடைத்து செல்வவளம் சேரவும் இந்த ஹோமம் வழி வகுக்கும் என்பதில் ஐயம் இல்லை. திருமகளின் அருளாலும் குபேர பகவானின் கடாட்சத்தாலும் உங்கள் வீட்டில் சகல மங்கல காரியங்களும் தடையின்றி நடைபெறும். வறுமை நீங்கி செல்வச்செழிப்பு உண்டாகும்.

ஸ்ரீலட்சுமி குபேரர் ஆலயம்
ஸ்ரீலட்சுமி குபேரர் ஆலயம்

பதவி உயர்வு, சம்பள உயர்வு, சொந்த வீடு, வாகன வசதிகள் நிறைவேறவும், அதிகாரம் பெருகவும், ராஜயோகப் பலன்கள் உண்டாகவும் இந்த ஹோமத்தில் பங்கு கொள்வது சிறப்பு. பல்வேறு தடைகளால் நிறைவேறாமல் இருக்கும் திருமணம், பிள்ளைப்பேறு, வியாபார விருத்தி, தொழில் அபிவிருத்தி, நிலையான உத்தியோகம் யாவும் இந்த ஹோமத்தில் கலந்து கொள்வதால் நிச்சயம் நிறைவேறும்.

வாசகர்கள் கவனத்துக்கு:

இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (₹500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்மம்+குங்குமம்) அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி ஹோம வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, ஹோம வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.