Published:Updated:

ஸ்ரீராஜலட்சுமி குபேர ஹோமம்: உங்கள் வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக நீங்களும் சங்கல்பியுங்கள்!

ஸ்ரீராஜலட்சுமி குபேர ஹோமம்

வரும் 18-9-2022 ஞாயிறு, புரட்டாசி மாதம் முதல் நாளில் மத்யாஷ்டமி, லட்சுமி பூஜை தினமான சுபயோக தினத்தில் காலை 10.30 தொடங்கி 12 மணி வரை இந்த ஸ்ரீராஜலட்சுமி குபேர ஹோமம் நடைபெற உள்ளது.

ஸ்ரீராஜலட்சுமி குபேர ஹோமம்: உங்கள் வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக நீங்களும் சங்கல்பியுங்கள்!

வரும் 18-9-2022 ஞாயிறு, புரட்டாசி மாதம் முதல் நாளில் மத்யாஷ்டமி, லட்சுமி பூஜை தினமான சுபயோக தினத்தில் காலை 10.30 தொடங்கி 12 மணி வரை இந்த ஸ்ரீராஜலட்சுமி குபேர ஹோமம் நடைபெற உள்ளது.

Published:Updated:
ஸ்ரீராஜலட்சுமி குபேர ஹோமம்
எத்தனை சம்பாதித்தாலும் வீட்டில் ஒன்றும் தங்குவதில்லை, மாறி மாறி தேவையற்ற விரயச் செலவுகளால் கடனுக்கு மேல் கடன் உண்டாகிறது, நேர்மையாக உழைத்துத்தான் சம்பாதிக்கிறேன் ஆனாலும் சொத்து எதுவும் சேர்க்க முடியவில்லை, முதலீடு என்று நம்பிப் போட்ட பணமெல்லாம் வீணாகிவிட்டது, கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணமெல்லாம் ஏமாந்து விட்டு விட்டேன்... இப்படி பலரும் புலம்பித் தவிப்பதைக் கண்டிருக்கலாம். ஏன் நீங்களே அப்படிச் சொல்லியும் வரலாம்.

சம்பாதிப்பது ஒரு கலை என்றால், அதைத் தக்க வைத்துக்கொள்ள நல்ல யோகமும் வேண்டும் என்கின்றன நம் சாஸ்திரங்கள். கோடி கோடியாக வைத்திருப்பவர் எதையும் அனுபவிக்க முடியாது, ஒன்றுமே இல்லாத அன்றாடங்காய்ச்சி ஆரோக்கியமாக கிடைத்தை எல்லாம் அனுபவிப்பான். இதற்கெல்லாம் காரணம் பூர்வ ஜன்ம வினைகள் என்று சொல்வதுண்டு. அந்த வினைகளை தகுந்த வழிபாடுகள் செய்து போக்கிக் கொள்ளலாம் என்றும் நமது சாஸ்திரங்களே சொல்கின்றன.

அரக்கோணம்  ஸ்ரீலட்சுமி குபேரர் ஆலயம்
அரக்கோணம் ஸ்ரீலட்சுமி குபேரர் ஆலயம்

அதிலும் திருமகளைத் தக்க வைத்துக் கொள்வது மிக மிகச் சிரமமான விஷயம் என்கின்றன புனித நூல்கள். திருமகளின் அருளைப் பெற்றுவிட்டால் அவரைத்தேடி நவநிதிகளும் வரும். வாழ்வின் சகல சௌபாக்கியங்களும் அவருக்குக் கூடிவரும். எல்லாவித தீமைகளும் தோஷங்களும் நீங்கிவிடும் என்றும் கூறப்படுகிறது. அப்படி திருமகளைத் திருப்திப்படுத்தும் வழிபாடுகளில் முக்கியமானது ஸ்ரீ லட்சுமி குபேர ஹோமம்.

முன்பொரு காலத்தில் இந்த ஹோமத்தை நியமப்படி செய்த ஒரு தவசியை நாடி திருமகள் வந்தாள். தனக்கு எந்தவிதமான செல்வங்களும் தேவையில்லை என்று அவர் கூறி திருமகளைத் திரும்பிப் போகவும் சொல்லிவிட்டார். இருப்பினும் லட்சுமி தேவி அவரை பின் தொடர்ந்தாள். திருமகளைச் சோதிக்க எண்ணிய தவசி, அரண்மனைக்குச் சென்று மன்னரின் மகுடத்தைக் காலால் இடறி விட்டார். அந்த தவசிக்கு மரண தண்டனை உறுதி என்று எண்ணிய வேளையில், மகுடத்துக்குள் இருந்து கருநாகம் வெளி வந்தது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
பிறகு என்ன அந்த தவசி ராஜகுருவாக மாறினார். ஸ்ரீஆதிசங்கரர், ஸ்ரீவேதாந்த தேசிகர், ஸ்ரீவித்யாரண்யர் என மாபெரும் ஞானிகளுக்கே அருளிய திருமகள் தன்னை வணங்கும் குடும்பஸ்தர்களுக்கு மட்டும் அருள மாட்டாளா என்ன!

மகாலட்சுமியையும் குபேரனையும் ஒரு சேர ஆராதிக்கும் வழிபாடே லட்சுமி குபேர ஹோமம். ஸ்ரீ லட்சுமி குபேரனுக்குச் செய்யப்படும் ஹோமங்கள் நவ நிதிகளையும் அள்ளித்தரும் ஆற்றல் கொண்டவை. குபேர ஹோமங்கள் வீட்டில் செய்வதைவிடவும் லட்சுமி, குபேரர் வீற்றிருக்கும் ஆலயங்களில் செய்வது இன்னும் சிறப்பானது என்பர்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

லட்சுமி குபேர பூஜை
லட்சுமி குபேர பூஜை

சகலருக்கும் சகல செல்வங்களையும் அளிக்கக் கூடிய இந்த லட்சுமி குபேர பூஜையைச் சிறப்பாக நடத்திவரும் ஆலயம், அரக்கோணம் பருத்திபட்டூரில் எழும்பியுள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ லட்சுமி குபேரர் ஆலயம். இங்கு ஸ்ரீ லட்சுமியோடு ஸ்ரீ குபேரர், அவர் மனைவி சித்திரலேகாவும் பிரமாண்ட வடிவில் எழுந்தருளி உள்ளார்கள். அரக்கோணம் ரயில் நிலையத்திலிருந்து 6 கி.மீ தொலைவில் இந்த ஆலயம் உள்ளது. இங்கு ஸ்ரீ மகாலட்சுமி 84 அடி உயரத்தில் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். ஸ்ரீ குபேரரும் அவர் மனைவி சித்ரலேகா அமர்ந்த கோலத்தில் எழுந்தருளி உள்ளார்கள். 3 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த ஆலயம் செல்வ விருத்தி தலமாகவும் கடன் நிவர்த்தி தலமாகவும் விளங்கி வருகிறது.

இந்த பிரமாண்ட ஆலயத்தில் விநாயகர், முருகர், சொர்ணாகர்ஷண பைரவர், அஷ்ட லட்சுமியர், சரஸ்வதி, நவகிரக சந்நிதிகளும் அமைந்துள்ளன. இங்குத் திருமகள் புஷ்ப வல்லித் தாயார் என்ற திருநாமத்தோடு எழுந்தருளி உள்ளார். திருப்பதி, சோளிங்கர் செல்லும் புனித யாத்திரிகர்கள் அனைவரும் வணங்கிச் செல்லும் இந்த ஆலயத்தில் லட்சுமி குபேரரை வணங்குவது மிகவும் சிறப்பு என்கிறார்கள் ஊர் மக்கள். திருப்பதி மலையை எதிர்நோக்கியவாறே அமர்ந்து இருக்கும் இந்த திருமகளை வணங்கினால் சகல நன்மைகளும் உண்டாகும் என்பது நம்பிக்கை.

லட்சுமி குபேரர்
லட்சுமி குபேரர்

இந்த சுபகிருது ஆண்டில் கடந்த இரு ஆண்டுகளில் தொடர்ந்த பொருளாதாரச் சிக்கல்கள் யாவும் தீர்ந்து நன்மைகள் விளையும் என நம்பப்படுகிறது. அதற்கேற்ப உங்கள் நன்மைக்காகச் சக்தி விகடனும் அரக்கோணம் ஸ்ரீ லட்சுமி குபேரர் ஆலய நிர்வாகமும் இணைந்து ஸ்ரீராஜலட்சுமி குபேர ஹோமம் நடத்த உள்ளோம். வரும் 18-9-2022 ஞாயிறு, புரட்டாசி மாதம் முதல் நாளில் மத்யாஷ்டமி, லட்சுமி பூஜை தினமான சுபயோக தினத்தில் காலை 10.30 தொடங்கி 12 மணி வரை இந்த மஹாஹோமம் நடைபெற உள்ளது. கடன்கள் தீர்ந்து வியாபார விருத்தி உண்டாகவும், தொழில் வளம், உத்தியோக உயர்வு, உத்தியோகப் பிராப்தி, வெளிநாட்டு யோகம் யாவும் கிடைத்து செல்வவளம் சேரவும் இந்த ஹோமம் வழி வகுக்கும் என்பதில் ஐயம் இல்லை. திருமகளின் அருளாலும் குபேர பகவானின் கடாட்சத்தாலும் உங்கள் வறுமை நீங்கி செல்வச்செழிப்பு உண்டாகும். இங்கு வந்து வேண்டிக் கொண்டவர் பலரும் தங்கள் துயரங்கள் நீங்கி சுபிட்சம் கண்டதை இன்றும் சத்திய சாட்சியாகக் கூறியும் வருகிறார்கள்.

முதல் நாள் அதாவது 17-9-2022 அன்று மாலை 4.30 அளவில் இந்த ஆலயத்தில் வாஸ்து ஹோமமும் அதைத்தொடர்ந்து புண்ணியா சடங்குகளும் நடைபெற உள்ளன. மறுநாள் அதாவது 18-9-2022 அன்று காலை 5 மணிக்கு கோபூஜை, 6 மணிக்கு அக்னி பிரதிஷ்டை, பிறகு கணபதி ஹோமம், சொர்ணாகர்ஷண பைரவர் ஹோமம், அஷ்டலக்ஷ்மி ஹோமம், நவகிரஹ ஹோமம், மகாசுதர்ஸன ஹோமம், ஸ்ரீராஜலட்சுமி குபேர ஹோமம் என்று நடைபெற உள்ளன. பிறகு கலசாபிஷேகம், அபிஷேக ஆராதனைகளும் நடைபெற உள்ளன. பிரமாண்டமான இந்த ஹோமத் திருவிழாவில் நீங்களும் கலந்து திருமகளின் பூரண ஆசியைப்பெற்று வாழ்வில் சகல சம்பத்துக்களும் பெற வேண்டுகிறோம்.

ஸ்ரீராஜலட்சுமி குபேர ஹோமம்
ஸ்ரீராஜலட்சுமி குபேர ஹோமம்

வாசகர்கள் கவனத்துக்கு:

இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (₹500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்மம்+குங்குமம்) அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறி முறைப்படி ஹோம வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, ஹோம வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.