Published:Updated:

நிம்மதியும் முன்னேற்றமும் அருளும் ஸ்ரீமகா வாராஹி ஹோமம்... நீங்களும் சங்கல்பிக்கலாம்!

இந்த அற்புதமான மகாஹோமத்தில் சங்கல்பம் செய்து பிரார்த்தித்து, காரிய ஸித்தி பெறுவது நன்மை எனப்படுகிறது. நீண்ட நாள்களாக தள்ளிப்போன உங்கள் விருப்பங்கள் யாவற்றையும் பூர்த்தி செய்ய வல்லது இந்த ஸ்ரீமகா வாராஹி ஹோமம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஸ்ரீவாராஹி அம்மன் வராஹ மூர்த்தியின் பெண் அம்சமாய் சக்தி வாய்ந்த, துடியான பெண் தெய்வமாகக் கருதப்படுகிறாள். அனைத்து வாழ்வாதாரங்களையும் அளிக்கக் கூடிய ஆதார சக்தி இவள் என்றும் ஸ்ரீ லலிதையின் சேனைத்தலைவி இவளே. தொன்மையான காலம்தொட்டே இவள் வணங்கப்படுகிறாள் என்றும் கூறப்படுகிறது.
வாராஹி
வாராஹி

மகாசக்தி தாருகாசுரனை சம்ஹாரம் செய்தபோது அவளுக்குத் துணை நின்றவள் வாராஹி. சும்பாசுரனோடு துர்கா தேவி போர் புரிந்த போதும் உதவியவள் இவளே. எலும்புக்கும் நரம்புக்கும் அதிதேவதையான வராஹி, வாதம்; பித்தம் போன்றவற்றைக் கட்டுப்படுத்துபவள். இவளுக்கு மயில் தோகையால் விசிறி, வெண்ணெய்யும், முறுக்கும், வெள்ளரிக்காயும் நைவேத்தியம் செய்து விநியோகம் செய்தால் நலம் உண்டாகும். பஞ்சமி தினத்தன்று தேங்காயில் நெய் விளக்கேற்ற வேண்டும் வரம் கிட்டும்.

பல்வேறு ரூபங்களில் அருளும் இத்தேவி கலப்பையை ஆயுதமாகக் கொண்டு நம் மனங்களில் தைரியத்தை விதைப்பவள். தன் ஞானக் கலப்பையால் நம் ஆன்மாவைக் கிளறி மோட்சம் அளிப்பவள். தன்னையே தாழ்த்திக் கொள்பவர்கள் தான் தகுதியுடைய ஆன்றோர் ஆக முடியும் அல்லவா! அழகே உருவான அம்பிகை புகழ்ச்சிக்கும், இகழ்ச்சிக்கும் அஞ்சி வாழ்வது ஞானத்திற்குப் பொருத்தமில்லாதது என்பதைக் காட்டவே பன்றியின் முகத்தைக் கொண்டுள்ளாள் என்கின்றன ஞான நூல்கள்.

அம்பிகை
அம்பிகை

அச்சத்தை நீக்குவதில் இவளுக்கு இணையான தேவி இல்லை. பண்டாசுரனை வதம் செய்ய வேண்டி ஸ்ரீராஜராஜேஸ்வரி நால்வகைப் படைகளுடன் புரிந்த போரில் வாராஹியே தலைமையேற்று விஷூக்ரன் எனும் அசுரனை மாய்த்தாள் என லலிதோபாக்யானம் கூறுகிறது. லலிதா ஸஹஸ்ரநாமத்திலும் ‘விஷூக்ரப் ப்ராண ஹரண வாராஹி' என்று பல நாமங்களில் இவளைப் போற்றுகிறது. அன்னை ராஜராஜேஸ்வரியின் மனம் அறிந்து இவள் ரதத்தைச் செலுத்துவதால் ‘சங்கேதா, கோலாம்பா, வீர்யவதி’ என்றும் போற்றப்படுகிறாள்.

உன்மத்த பைரவி, உவந்ததா ஸ்வப்னேசி, திரஷ்கரிணி, கிரிபதா என்ற ஐவரும் வாராஹியின் பரிவார தேவதைகள். பூமிக்கு அடியில் விளையும் சர்க்கரைவள்ளிக் கிழங்கு, உருளைக்கிழங்கு, பூண்டு, வெங்காயம் இவளுக்குப் பிடித்தமான பொருள்கள்.

காசி வாராஹி, உத்திரகோச மங்கை மங்கைப்பிடாரி எனும் வாராஹி, காஞ்சி காமாட்சியம்மன் சந்நிதி கோஷ்ட வாராஹி, பள்ளூர் வாராஹி, தஞ்சை பெரிய கோயில் வாராஹி என்று பல விசேஷ கோயில்கள் இவளுக்கு உண்டு. அறுபது கோடி வாராஹிகள் இவளுக்கு ஏவல் புரிவதை ‘சஷ்டி கோடி பிரவ்ருதா’ எனும் திருப்பெயர் எடுத்துக் கூறுகிறது.

ஸ்ரீவாராஹி அன்னை
ஸ்ரீவாராஹி அன்னை

வம்பு வழக்குகளிலிருந்து விடுபட, திருஷ்டி, தோஷம், அச்சம் விலகிட வாராஹி வழிபாடு அவசியம். பஞ்சமி, தண்டநாதா, சமயேஸ்வரி, ஸமய ஸங்கேதா, போத்ரிணீ, ஷிவா, வார்த்தாலீ, மஹாஸேனா, ஆக்ஞா சக்ரேஸ்வரி, அரிக்னீ போன்ற நாமங்களால் துதித்தால் மகிழ்வாள் என்கின்றன சாஸ்திரங்கள். வாராஹிமாலை, நிக்ரகாஷ்டகம், அனுக்ரகாஷ்டகம், வாராஹி அஷ்டோத்ரம், வாராஹி ஸஹஸ்ரநாமாவளி போன்ற துதிப் பாடல்களை இவளை வழிபட நன்மைகள் உருவாகும்.

மங்கலங்கள் அருளும் ஸ்ரீவாராஹி அன்னையை ஸ்ரீமகா வாராஹி ஹோமம் செய்து வழிபட்டால் தீராத தொல்லைகள் யாவும் தீர்த்து வைப்பாள் என்கின்றன சாஸ்திரங்கள். அந்த வகையில், ஸ்ரீவாராஹிக்கு உகந்த இந்த ஸ்ரீமகா வாராஹி ஹோமத்தை நவராத்திரி வைபவத்தை முன்னிட்டு விஜயதசமி நன்னாளில் உலக நன்மைக்காகவும் வாசகர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தாரின் நலன் வேண்டியும் சக்தி விகடன் சார்பில் நடத்தவுள்ளோம்.

நவராத்திரி நாள் - 3: நன்மைகள் அருளும் நவராத்திரியில் பூஜிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த அற்புதமான மகாஹோமத்தில் சங்கல்பம் செய்து பிரார்த்தித்து, காரிய ஸித்தி பெறுவது நன்மை எனப்படுகிறது. நீண்ட நாள்களாக தள்ளிப்போன உங்கள் விருப்பங்கள் யாவற்றையும் பூர்த்தி செய்ய வல்லது இந்த ஸ்ரீமகா வாராஹி ஹோமம்.

அதன்படி சென்னை கோடம்பாக்கம் ஸ்ரீதேவி கருமாரியம்மன் மகா பிரத்யங்கிரா தேவி திருக்கோயில் மற்றும் சக்தி விகடன் இணைந்து வாசகர்களுக்காக ஸ்ரீமகா வாராஹி ஹோமம் நடத்தவுள்ளோம். இது வரும் 15-10-21 அன்று விஜயதசமி நன்னாளில் வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெற உள்ளது. இந்த ஹோமத்தில் சங்கல்பித்து வழிபட்டால் தடைகள் விலகும், எடுத்த காரியங்கள் வெற்றி அடையும். யம பயம் போக்கும், வாழ்வில் தொடர்ந்து வரும் தரித்திரம் நீக்கும். வீண் அச்சங்கள் நீங்கும், சகல காரியங்களிலும் வெற்றி தரும். திருமண தடை உத்தியோக தடை நீங்கும், வாழ்வில் சோதனைகள் நீங்கி சாதனைகள் மலரும் என ஆன்மிக நூல்கள் கூறுகின்றன.

வாராஹி ஹோமம்
வாராஹி ஹோமம்
மேலும் இந்த நவராத்திரி நன்னாள் முழுக்க ஸ்ரீமகா வாராஹியின் மூல மந்திர கோடி பாராயணமும் சரபேஸ்வர, சூலினி, பிரத்யங்கிரா நாமார்ச்சனைகளும் நடைபெற உள்ளன. இதனால் இந்த வைபவத்தில் இணைந்து சங்கல்பம் செய்து கொள்வது விசேஷம் எனலாம்.

வாசகர்கள் கவனத்துக்கு:

இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (₹500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (மஞ்சள் + குங்குமம் + ஹோம பஸ்மம்) அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி ஹோம வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, ஹோம வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு