Published:Updated:

அத்தனை துன்பங்களுக்கும் நிவாரணம் அளிக்கும் ஸ்ரீமகா வாராஹி ஹோமம் ! நீங்களும் சங்கல்பிக்கலாம்!

ஸ்ரீமகா வாராஹி ஹோமம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நவராத்திரி காலத்தில் நலம் அருளும் ஸ்ரீவாராஹி அம்மனை வணங்கினால் வளங்கள் பெருகும் என்பது பொதுவான நம்பிக்கை. புரட்டாசி மாதத்தில் ஒன்பது நாள்கள் கொண்டாடப்படும் ‘சாரதா நவராத்திரி’ நாளில் சரஸ்வதி, துர்கை, அம்பிகை வழிபாடு செய்வது வழக்கம். அதேபோல் இந்தக் காலத்தில் வாராஹி அம்மனுக்காக மந்திர பாராயணமும் ஸ்ரீமகா வாராஹி ஹோமமும் நல்ல பலன்களை அளிக்கும் என்பது சாஸ்திரங்கள் கூறும் தகவல்.

வாராஹி
வாராஹி

சும்ப-நிசும்பர்களை அழிக்க முப்பெரும் தேவியரும் போர்க்களம் புகுந்தனர். அப்போது அவர்களுக்குத் துணை புரிய பிரம்மதேவனின் சக்தியான பிராமி, மகேஸ்வரனின் சக்தியான மாகேஸ்வரி, குமரனின் வடிவான கௌமாரி, விஷ்ணுவின் சக்தியான வைஷ்ணவி, நரசிம்மத்தின் அம்சமாக நாரசிம்ஹி, இந்திரனின் சக்தியம்சமான இந்திராணி ஆகியோருடன், திருமாலின் வராஹ வடிவை ஏற்ற வாராஹியும் எழுந்தருளினாள். இந்த ஏழு பெண் தெய்வங்களும் அசுரப்படையை சம்ஹாரம் செய்தனர் என்கிறது, தேவி மஹாத்மியம்.

பிராம்மி, கௌமாரி, வைஷ்ணவி, இந்திராணி, வாராஹி, நாரசிம்ஹி, மகேஸ்வரி எனும் சப்த மாதா்களில், வாராஹி அம்மன் ஐந்தாம் இடத்தில் அமர்ந்திருக்கும் அருள் வரப்பிரசாதி. மனித உடலும், வராஹ முகமும் கொண்டவள் இவள். சப்த மாதர்களில் வாராஹியைத் தனி தெய்வமாக வணங்கும் முறை பழங்காலத்தில் இருந்தே உள்ளது. 'வாராஹி உபாசனை செய்பவரிடம் ஒருபோதும் வாதாடாதே!' என்பது பழமொழி.

வாராஹி அம்மன்
வாராஹி அம்மன்

சிந்தனை ஒருமைப்பட, வாக்கு பலிதம் பெற, செயல்களில் வெற்றி பெற, எதிரிகளிடமிருந்து காத்துக் கொள்ள, வழக்குகளில் வெற்றி பெற வாராஹி அம்மனே துணை நிற்பாள் என்பதும் நீங்கள் அறிந்ததே. 'பஞ்சமி, தண்டநாதா, சங்கேதா, சமயேச்வரி, சமயசங்கேதா, வாராஹி, போத்ரிணி, சிவா, வார்த்தாளி, மகாசேனா, ஆக்ஞா சக்ரேச்வரி, அரிக்னீ!' ஆகிய 12 திருநாமங்களுடன் போற்றிக் கூறி, தியானித்து வழிபட்டால், வாராஹியின் அருளைப் பெறலாம் என்கின்றன ஞான நூல்கள்.

இத்தனை பெருமைகள் கொண்ட வாராஹி அம்மனின் அருளைப்பெற சென்னை கோடம்பாக்கம் ஸ்ரீதேவி கருமாரியம்மன் மகா பிரத்யங்கிரா தேவி திருக்கோயில் மற்றும் சக்தி விகடன் இணைந்து வாசகர்களுக்காக நவராத்திரியின் இறுதி நாளான விஜயதசமி நன்னாளில் (15-10-21) வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் 12 மணி வரை ஸ்ரீமகா வாராஹி ஹோமம் நடத்த உள்ளனர். இந்த ஹோமத்தில் சங்கல்பித்து வழிபட்டால் வளமான வாழ்வும் தடையற்ற முன்னேற்றமும் கிடைக்கும். எடுத்த காரியத்தில் வெற்றியும் எதிரிகளற்ற வாழ்வும் உண்டாகும். சகல நோய்களும் தோஷங்களும் நீங்கி நலம் உண்டாகும்.

ஸ்ரீமகா வாராஹி ஹோமத்துடன் ஸ்ரீமகா வாராஹியின் மூல மந்த்ர கோடி பாராயண புண்ணிய கைங்கர்யமும் நடைபெற இருப்பதால் இதில் சங்கல்பம் செய்து கொள்வது விசேஷம். இதனால் உங்கள் பொருளாதாரப் பிரச்னைகள் தீருவதுடன் மங்கலகரமான சௌபாக்கிய வாழ்வும் கிட்டும். எல்லாவிதமான அச்சங்களில் இருந்தும் விடுபடலாம்.

ஸ்ரீமகா வாராஹி ஹோமம்
ஸ்ரீமகா வாராஹி ஹோமம்

இந்த ஹோமத்தில் கலந்து கொள்வதால் உறவுகளைப் பிரிந்து துன்பப்படுபவர்கள், வாய்ப்புகள் கிடைக்காமல் வருந்துபவர்கள், சொத்துப் பிரச்னைகள் உள்ளவர்கள், அச்சத்தில் தவிப்பவர், மங்கல நிகழ்வுகள் நடைபெறாமல் தவிப்பவர்கள் என அனைவரும் இந்த ஸ்ரீமகா வாராஹி ஹோமத்தில் கலந்து கொண்டால் நிச்சயம் பலன் அடைவர் என்பது உறுதி.

வாசகர்கள் கவனத்துக்கு:
இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (₹.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (மஞ்சள் + குங்குமம் + ஹோம பஸ்மம்) அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்).தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி ஹோம வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, ஹோம வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு