Published:Updated:

கடன் நிவர்த்தி மற்றும் சிறப்பான வாழ்க்கை அருளும் ஸ்ரீமஹாராஜ குபேர ஹோமம் - நீங்களும் சங்கல்பிக்கலாம்!

ஸ்ரீராஜ குபேரர் ஆலயம்

இந்த மஹாராஜ குபேர ஹோமம் தகுந்த வேத சிரோன்மணிகளைக் கொண்டு 108 விதமான அபூர்வ மூலிகைகளைக் கொண்டு பிரமாண்டமாக நடத்தப்படுகின்றது.

கடன் நிவர்த்தி மற்றும் சிறப்பான வாழ்க்கை அருளும் ஸ்ரீமஹாராஜ குபேர ஹோமம் - நீங்களும் சங்கல்பிக்கலாம்!

இந்த மஹாராஜ குபேர ஹோமம் தகுந்த வேத சிரோன்மணிகளைக் கொண்டு 108 விதமான அபூர்வ மூலிகைகளைக் கொண்டு பிரமாண்டமாக நடத்தப்படுகின்றது.

Published:Updated:
ஸ்ரீராஜ குபேரர் ஆலயம்
காசி மாநகரில் குபேரனின் நல்ல பண்புகளுக்கு மெச்சிய விஸ்வநாதர், அவரை சகல லோகங்களிலும் இருக்கும் நிதிகளுக்கு தலைவர் என்று நியமித்தார். அதுபோலவே இங்கு எழுந்தருளி இருக்கும் விஸ்வநாதரும் உங்கள் தேவைகளை எல்லாம் நிறைவேற்றுவார் என்று நம்பி இந்த ஹோமத்தில் கலந்து கொண்டு சங்கல்பம் செய்து கொள்ளுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்!
ஸ்ரீராஜ குபேரர் ஆலயம்
ஸ்ரீராஜ குபேரர் ஆலயம்

சென்னை பெங்களூரு சாலையில் காஞ்சிபுரம் அருகே உள்ளது வெள்ளைகேட். இதற்கு அருகில் அமைந்துள்ள குபேரபட்டினத்தில் உள்ளது பிரசித்தி பெற்ற ஸ்ரீராஜ குபேரர் சித்தர் பீடம். இந்த பீடத்தின் முயற்சியால் உருவாகி உள்ளது ஸ்ரீவைத்தியநாத ஸ்வாமி உடனமர் ஸ்ரீராஜ குபேரர் ஆலயம். பக்தர்களுக்கு இது தன விருத்தி தலமாகவும் கடன் நிவர்த்தி தலமாகவும் விளங்கி வருகிறது. ஸ்ரீவைத்தியநாத ஸ்வாமியும் குபேரரும் திருமகளும் அருள் பாலிக்கும் இந்த தலத்தில் நடைபெறும் ஸ்ரீமஹாராஜ குபேர ஹோமம் மிகமிக விசேஷமானது. இந்த ஹோமத்தில் கலந்து கொண்டு கடன் பிரச்னைகள் அகன்றவர்கள் அநேகம் பேர். செல்வவளம் பெற இந்த வழிபாடு அவசியமானது என்கிறார்கள் பக்தர்கள். அபூர்வமான இந்த குபேர வழிபாட்டில் நீங்களும் கலந்து கொள்ள சகல நன்மைகளும் உண்டாகும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
இந்த மஹாராஜ குபேர ஹோமம் தகுந்த வேத சிரோன்மணிகளைக் கொண்டு 108 விதமான அபூர்வ மூலிகைகளைக் கொண்டு பிரமாண்டமாக நடத்தப்படுகின்றது. இந்த யாகத்தின் விளைவாக இதில் கலந்து கொள்ளும் அன்பர்களின் வாழ்க்கை சிறப்பான வளத்தை பெற்று இருக்கிறது என்கிறார்கள். நீண்ட ஆயுளையும் நிறைவான ஆரோக்கியத்தையும் வைத்தியநாத ஸ்வாமி தந்தருள, நிலைத்த செல்வத்தையும் நீடித்த புகழையும் ஸ்ரீகுபேரர் நமக்கு அருளுகிறார் என்கிறார்கள் பக்தர்கள்.
ஸ்ரீமஹாராஜ குபேர ஹோமம்
ஸ்ரீமஹாராஜ குபேர ஹோமம்

குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தொழில் மந்தம், வியாபார தேக்கம் என்று அவஸ்தைப்பட்டு வரும் அன்பர்கள் இந்த ஹோமத்தில் கலந்து கொண்டால் நிச்சயம் நலம் பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது. எத்தனை சம்பாதித்தாலும் வீட்டில் செல்வம் நிலைத்திருக்கவில்லை, சொந்த வீடு அமையவில்லை, விரும்பிய பயணங்கள் மேற்கொள்ள முடியவில்லை, சுபகாரியங்கள் யாவும் தடைப்பட்டு நிற்கின்றன என்று வருந்துபவர்கள் இந்த ஆலயத்துக்கு வந்து வணங்கினால் நிச்சயம் பலன் பெறுவார்கள்.

வீட்டில் செல்வம் நிலைக்க குபேரனின் அருளோடு மகாலட்சுமியின் அருளை பெறுவது அவசியம்என்பார்கள். அதேபோல இங்கே திருமகளும் இங்கே குபேரருக்கு முன்பே அமர்ந்து அருளாசி வழங்கி வருகிறாள் என்பதும் விசேஷம். குபேரனுக்கு அதிபதியான திருமகள், அவருக்கும் மேலான, அத்தனை செல்வங்களையும் குபேரனுக்கு அருளிய ஈசன், ஆகிய மூவருமே ஒரே தலத்தில் ஒரே கருவறையில் எழுந்தருளி இருப்பது இங்கு விசேஷம் எனலாம். அதுபோலவே சகல ஐஸ்வர்யங்களையும் பெற்றுத்தரும் வல்லமை குபேர ஹோமத்திற்கு உண்டு என்பார்கள். அதிலும் அதிகார வல்லமையைப் பெற்றுத் தரும் இந்த மஹாராஜ குபேர ஹோமம் அரிதினும் அரிது எனலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த ஹோமத்தால் அதிகார பலமும் அரசியல் செல்வாக்கும் கூடும் எனலாம். குபேரருக்கு உரிய நாள் வியாழக்கிழமை. அதுவும் இந்த தமிழ் சுபகிருது ஆண்டு தொடங்கும் வியாழக்கிழமை ரொம்பவே விசேஷம். இந்த நாளில் குபேரனை வழிபட்டால், அளவற்ற செல்வங்களுக்கு அதிபதியாகும் பாக்கியம் கிடைக்கும். காசி மாநகரில் குபேரனின் நல்ல பண்புகளுக்கு மெச்சிய விஸ்வநாதர், அவரை சகல லோகங்களிலும் இருக்கும் நிதிகளுக்கு தலைவர் என்று நியமித்தார். அதுபோலவே இங்கு எழுந்தருளி இருக்கும் விஸ்வநாதரும் உங்கள் தேவைகளை எல்லாம் நிறைவேற்றுவார் என்று நம்பி இந்த ஹோமத்தில் கலந்து கொண்டு சங்கல்பம் செய்து கொள்ளுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்!

ஸ்ரீராஜ குபேரர் ஆலயம்
ஸ்ரீராஜ குபேரர் ஆலயம்

வரும் சுபகிருது ஆண்டில் எல்லாவிதமான நன்மைகளும் பெற சொர்ணபைரவரை வழிபடுவது சிறந்தது என்கிறார்கள் ஆன்றோர்கள். இந்நாளில் சிறப்பு பூஜைகள், யாகங்களில் கலந்து கொண்டால் கடன்கள் தீர்ந்து வியாபார விருத்தி, தொழில் வளம், உத்தியோக உயர்வு, உத்தியோகப் பிராப்தி, வெளிநாட்டு யோகம் யாவும் கிடைத்து செல்வவளம் சேரும். ஈசனும் குபேரரும் ஒருசேர அருள்பாலிக்கும் இந்த தலத்தில் சிறப்பு யாகங்கள், அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெற உள்ளன. இதில் கலந்து கொண்டு சகலவிதமான இன்னல்களில் இருந்தும் விடுபட்டு சம்பத்துக்களைப் பெறுங்கள்.

வாசகர்கள் கவனத்துக்கு:

இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (₹500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்மம்+குங்குமம்) அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி ஹோம வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, ஹோம வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.

குறிப்பு: உங்கள் தெளிவான முகவரியைக் குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism