மேற்கு திசை நோக்கி ஈசன் அருள்பாலிக்கும் திருத்தலங்கள் மிகவும் சிலவே. அவற்றுள் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி மிகவும் சிறப்பு வாய்ந்தது.

இங்கு ஈசன் ஶ்ரீபெரியநாயகி அம்பாளுடன் ஶ்ரீபிறவி மருந்தீசராக அருள்பாலிக்கிறார்.

இங்கு தலவிருட்சம் வில்வம். வில்வ மரத்தடியில் ஈசன் சுயம்புவாகத் தோன்றியதால் இத்தலம் வில்வாரண்யம் என்றழைக்கப்பட்டது. பிரளயத்தின்போது திகைத்த நவகிரகங்கள் இத்தலத்து ஈசனை வழிபட்டு, மீண்டும் நவகிரகப் பதவிகளைப் பெற்ற தலம். ஆதலால் ‘நவகிரகாபுரம்’ என்ற திருப்பெயரும் உண்டு. இத்திருத்தலத்தில் திருஞானசம்பந்தர் வந்து இறைவனை தரிசனம் செய்ததாக சேக்கிழார் தம் பெரியபுராணத்தில் குறிப்பிட்டுள்ளார். இத்தலத்தில் விடங்கர் என்ற சக்திவாய்ந்த மரகத லிங்கம் உள்ளது மற்றுமொரு சிறப்பு.

ஆதியில் சிவபெருமானைப்போலவே பிரம்மாவுக்கு ஐந்து முகம் இருந்தது. பிரம்மன் படைக்கும் கடவுள். சிவன் சம்ஹார மூர்த்தி. இதனால், ‘நாம் படைத்தால்தானே சிவனால் அழிக்க முடியும். எனவே சிவனை விட நானே பெரியவன்’ என்ற அகம்பாவம் பிரம்மாவுக்கு ஏற்பட்டது. இதையறிந்து கோபம் கொண்ட சிவபெருமான், பைரவர் உருவம் தாங்கி வந்து பிரம்மாவின் ஒரு தலையை வெட்டி எடுத்ததோடு, ‘படைக்கும் தொழிலையும் இழப்பாய்’ என்று சாபமும் தந்தார்.

தன் தவற்றை உணர்ந்த பிரம்மா ஈசனிடம் சாபவிமோசனம் வேண்டினார். ‘திருத்துறைப்பூண்டி வில்வாரண்யத்தில் சுயம்புவாக எழுந்தருளியுள்ள என்னை வந்து வழிபட்டால் உன் சாபம் தீரும்’ என்று ஈசன் உபாயம் அருளினார். அதன்படி பிரம்மா திருத்துறைப்பூண்டி வந்து சில காலம் தங்கியிருந்து, தீர்த்தம் உருவாக்கி (அதுவே இன்று பிரம்ம தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது), அதன் புனித நீரைக் கொண்டு சிவனை அபிஷேகத்து பூஜை செய்தார்.

இதனால் மனம் குளிர்ந்த ஈசன் பிரம்மாவுக்குக் காட்சி அருளி இழந்தப் பதவியை மீண்டும் தந்தார். இந்த சாபவிமோசனம் நிகழ்ந்த தினம் அசுவினி நட்சத்திர நாள். ஆகவே, அசுவினி நட்சத்திரக்காரர்கள் இத்தலம் வந்து வழிபட்டால், எல்லாவித தோஷங்களிலிருந்தும் விடுபடலாம் என்பது ஐதிகம்.

பார்வதிதேவி சிவமகிமையை உலகுக்கு உணர்த்தத் திருவுளம் கொண்டு, மானுடப் பெண்ணாக பூலோகம் வந்து பராசர முனிவர் ஆசிரமத்தில் தங்கித் தவம் செய்து வந்தாள். அழகிய இளம்பெண் ஒருத்தி தவத்தில் இருப்பதைக் கண்ட கஜமுகன் என்ற அரக்கன், அவளைக் கவர்ந்துசெல்ல திட்டமிட்டான்; தவத்தைக் கலைக்க முயற்சி செய்தான்.

அம்பாள், பிறவிமருந்தீசரின் பாணத்தில் கைவைத்து அடைக்கலம் வேண்டினாள். உடனே ஈசன் எழுந்தருளி கஜமுகனை சம்ஹாரம் செய்தார். இந்தத் தலத்தில் ஈசன் கஜசம்ஹார மூர்த்தியாக தெற்குநோக்கி அருள்பாலிப்பது சிறப்பாகும். மருந்தீசரின் பாணத்தில் அம்பாளின் ஐந்து விரல்கள் பதிந்திருப்பதை இன்றும் காணலாம்.

இந்தத் தலத்தில்தான் காரடையான் நோன்பு உருவானது என்கின்றனர் பக்தர்கள். தீர்க்கசுமங்கலி வரம் பெற்ற ஜல்லிக்கேஸ்வரி என்பவளின் கணவனான ஜல்லிக்கேஸ்வரன், ஒருநாள் பாம்பு தீண்டி உயிரிழந்தான். ‘தான் பெற்ற வரத்திற்கு மாறாக நடந்து விட்டதே... இது நியாயமா’ என்று வருந்திய ஜல்லிகேஸ்வரி, மாங்கல்ய பாக்கியம் வேண்டி காரடையான் நோன்பு இருந்து ஈசனிடம் வேண்டினாள்.

உடனே மருந்தீசர் ஜல்லிக்கேஸ்வரனை உயிர்ப்பித்து ஜல்லிக்கேஸ்வரிக்கு மாங்கல்ய பாக்கியம் அருளினார். ஆக, மாங்கல்ய பலம் அருளும் தலமாகவும் இது திகழ்கிறது.

அகத்தியர் முனிவரை தெற்கு நோக்கி அனுப்பிய ஈசன் அங்கேயே தமிழுக்கு இலக்கணமும், உரையும் எழுதக் கேட்டுக் கொண்டார். அதன்படி வேதாரண்யத்தில் தமிழுக்கு இலக்கணம் வகுத்த அகத்தியர், இத்தலத்தில் உரை எழுதினார் என்பது தலவரலாறு. எனவேதான் இத்தலம் திரு உரைப் பூண்டி என்றழைக்கப்பட்டு, காலப்போக்கில் மருவி திருத்துறைப்பூண்டி ஆகிவிட்டது என்கிறார்கள்.

கோயில் அர்ச்சகர்கள் பாலசுப்ரமணியம் மற்றும் வினோத் கங்காதரனிடம் பேசினோம்.

“அனைத்து விதமான வியாதிகளையும் தீர்க்க வல்லவர் மருந்தீசர். நோய் உள்ளவர்கள் இத்தலத்துக்கு வந்து ம்ருத்யுஞ்ச ஹோமம் மற்றும் நவகிரக ஹோமம் செய்தால் , விரைவில் நலம் பெறுவார்கள் என்பது நம்பிக்கை. சமீபத்தில்கூட, அமெரிக்காவில் வசிக்கும் எங்கள் உறவினர் ஒருவர் கொரோனா பெருந்தொற்று பாதிப்புக்கு ஆளாகி அவதிப்பட்டு வந்தார்.

அவருக்காக இத்தலத்தில் சிறப்பு வழிபாடு - பிரார்த்தனை செய்து, விபூதிப் பிரசாதம் அனுப்பி வைத்தோம். மருந்தீசரின் அருளால் விரைவில் அவர் நோயிலிருந்து மீண்டெழுந்தார். தற்போது நலமாக உள்ளார். இந்த ஈசன் நவகிரகங்களுக்கு அருளியவர் என்பதால், பக்தர்கள் தங்களது ஜாதகத்தை எடுத்து வந்து மருந்தீசரிடம் வைத்து அர்ச்சனை செய்து வழிபடுவது விசேஷம். அதனால், சகலவிதமான தோஷங்களும் நீங்கி மறுவாழ்வு பெறுவார்கள்.

எதிரிகளால் தொல்லை, மனத்தில் வீண் பயம், பிதுர் சாபம் உள்ளிட்ட காரணங்களால் அவதிப்படுபவர்கள், அமாவாசையன்று நெய்தீபம் ஏற்றி மருந்தீசரை வழிபட்டால், பிரச்னைகள் விரைவில் விலகும்.

அகத்தியருக்குத் திருமணக் காட்சி தந்த தலம் இது என்பதால் திருமணம் ஆகாதவர்கள் இந்தத் தலத்து அம்பாளை வழிபட, திருமணத் தடை நீங்கும். தொடர்ச்சியாக 5 வாரம் இத்தலத்து ஈசனை அர்ச்சனை செய்து வழிபட்டால், சகல வியாதிகளில் இருந்தும் நிவர்த்தி அடையலாம்” என்கிறார்கள் கோயில் அர்ச்சகர்கள்.

நீங்களும் ஒருமுறை திருத்துறைப்பூண்டி ஈசனைத் தரிசித்து வழிபட்டு, பிணியில்லா பெருவாழ்வை வரமாகப் பெற்று வாருங்கள்.