Published:Updated:

வேண்டும் வரம் தரும் விரதம்!

சத்யநாராயண விரத பூஜை - எம்.சங்கரி

பிரீமியம் ஸ்டோரி

பகவான் மகாவிஷ்ணு, நாரதருக்கு உபதேசித்த மகிமை பெற்ற அற்புத வழிபாடு, ஶ்ரீசத்ய நாராயண விரதம். மாதந்தோறும் பௌர்ணமி அன்று மாலையில் சந்திர உதய காலத்தில் சத்யநாராயண விரதம் கடைப்பிடித்து பூஜிக்கலாம் என்று ஸ்காந்த புராணம் கூறுகிறது.

ஶ்ரீசத்யநாராயணர்
ஶ்ரீசத்யநாராயணர்

இயலாதவர்கள் ஞாயிறு, திங்கள், வெள்ளிக்கிழமைகள், அமாவாசை, அஷ்டமி, துவாதசி, சங்கராந்தி, தீபாவளி ஆகிய நாள்களிலும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளிலும் இந்த விரதத்தைக் கடைப்பிடிக்கலாம். சத்யநாராயண விரதம் இருப்பவர்கள், விரத பூஜைகளைச் செய்வதுடன் அதன் பெருமைகளை விளக்கும் கதைகளையும் கேட்டால் நல்ல பலன் கிடைக்கும். அந்த வகையில் ஒரு புண்ணியக் கதை உங்களுக்காக.

அந்தணன் ஒருவர் பெளர்ணமிதோறும் சத்யநாராயண விரதம் இருந்து வந்தார். ஒரு நாள், விறகு விற்கும் ஒருவர் களைப்பு மிகுதியால் தாகம் தணிக்கும் பொருட்டு அந்தணர் வீட்டுக்கு வந்தார்.

அப்போது அங்கு சத்ய நாராயண விரத பூஜை நடந்து கொண்டிருந்தது. ஆர்வத்துடன் அதைக் கவனித்தார் விறகு வெட்டி. பூஜை முடிந்ததும் அந்தணர், அங்கிருந்த அனைவருக்கும் பிரசாதம் கொடுத்தார். அதை வாங்கி அங்கேயே சாப்பிட்டார் விறகு வெட்டி.

பிறகு, தனிமையில் இருந்த அந்தணரை நெருங்கினார். ‘‘ஐயா! இப்போது நீங்கள் செய்தது என்ன பூஜை? அதை எதற்காக, எப்படிச் செய்ய வேண்டும் என்று எனக்குச் சொன்னால், நானும் அதைச் செய்து துயரங்களைப் போக்கிக் கொள்வேனே!’’ என வேண்டினார்.

அந்தணர் அவரிடம் சத்ய நாராயண விரத மகிமையை - நியதியை எடுத்துச் சொன்னார். மிகவும் மகிழ்ந்த விறகுவெட்டி அந்தணருக்கு நன்றிகூறி விடைபெற்றார்.

மறுநாள் பொழுது விடிந்ததும் விறகுவெட்டி வழக்கம்போல் விறகு விற்கப் புறப்பட்டார். அன்று விரைவிலேயே விறகுகள் விற்றுத் தீர்ந்தன. சத்யநாராயண பூஜையைப் பார்த்து, அந்தப் பிரசாதத்தை உண்டதன் விளைவே இது.

‘நல்லதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கும்போதே, தெய்வத்தின் அருள் நமக்குக் கை கொடுக்கிறதே... அப்படியானால் முழு மூச்சுடன் செய்தால் எவ்வளவு பலன் கிடைக்கும்!’ என்று எண்ணிய விறகுவெட்டி, சத்யநாராயண பூஜைக்குத் தேவையான பொருட்களுடன் வீடு திரும்பினார்.

அந்தணர் சொன்னபடி முறையாக, மாதம் தவறாமல் சத்யநாராயண பூஜை செய்துவந்தார் விறகுவெட்டி. அதன் பலன்...? அவரது வீட்டில் தாண்டவமாடிய தரித்திரம் விலகிப் போயிற்று. அங்கு அஷ்ட லட்சுமி களும் வாசம் செய்யத் தொடங்கினர். குடும்பத்தாருடன் அமைதியான வாழ்க்கை நடத்திய விறகு வெட்டி, முடிவில் மோட்சத்தை அடைந்தார்!

- எம்.சங்கரி, திருநெல்வேலி-3

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு