Published:Updated:

ஸ்ரீசாயி சங்கல்ப பூஜை: ஸ்ரீசாயி மகாசமாதி தினமான விஜயதசமியில் நீங்களும் ஆராதித்து நலம் பெறுங்கள்!

ஸ்ரீசாயி சங்கல்ப பூஜை

காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ள இந்த மகா ஆராதனை விழாவில் நீங்களும் கலந்து கொண்டு எல்லா நலமும் வளமும் பெற வேண்டுகிறோம்.

ஸ்ரீசாயி சங்கல்ப பூஜை: ஸ்ரீசாயி மகாசமாதி தினமான விஜயதசமியில் நீங்களும் ஆராதித்து நலம் பெறுங்கள்!

காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ள இந்த மகா ஆராதனை விழாவில் நீங்களும் கலந்து கொண்டு எல்லா நலமும் வளமும் பெற வேண்டுகிறோம்.

Published:Updated:
ஸ்ரீசாயி சங்கல்ப பூஜை

ஸ்ரீசாயி மகாசமாதி தினமான விஜயதசமியில் ஆக்டோபர் 5-ம் தேதி புதன்கிழமை அன்று சக்திவிகடனும் துவாரகாமயி ஆத்ம ஞானியர் மையமும் இணைந்து ஸ்ரீ சாயி சங்கல்ப சிறப்பு பூஜையை நடத்த இருக்கிறோம்.

ஸ்ரீசாயி சங்கல்ப பூஜை
ஸ்ரீசாயி சங்கல்ப பூஜை

ஸ்ரீசாயி பக்தர்களின் நலனில் கண்ணும் கருத்துமாக இருப்பார். தனது பக்தர்கள் எங்கிருந்தாலும், அவர்கள் என்ன செய்கிறார்கள், எத்தகைய பிரச்னையில் துன்பப்படுகிறார்கள் என்பதை அறிந்திருப்பார். அவரில்லாமல் நம்முடைய செயல் சிறப்படைவதில்லை என்பதே உண்மை. அதனால் பாபா நேரடியாகவோ அல்லது வேறு ஒருவர் உருவிலோ வந்து பக்தர்களைக் காப்பாற்றி அருள் புரிந்திருக்கிறார். தம்மை வேண்டுவோர் மனங்களில் உள்ள விருப்பங்களை அறிந்துகொண்டு, அதை நிறைவேற்றவும் செய்கிறார். இதற்கு பல உதாரணங்கள் உள்ளன. நாடு, இனம், மதம், மொழி  வேறுபாடுகளைக் கடந்தவர் சாய் பாபா. அன்பு, ஆழ்ந்த நம்பிக்கை, பொறுமை இவை மட்டுமே அவர் நம்மிடம் எதிர்பார்ப்பது. எவர் ஒருவர் கருணையோடு இருக்கிறாரோ அவரை பாபா எந்நாளும் கைவிடுவதில்லை. ஒருமுறை பாபாவை சரண் அடைந்துவிட்டால் வாழ்க்கை முழுவதுமே துணையிருந்து கூடவே வந்து சாயி நம்மை ஆசீர்வதிக்கிறார் என்றே சொல்லலாம்.

ஸ்ரீசாயி பூஜை
ஸ்ரீசாயி பூஜை

கலியுகத்தின் கண்கண்ட கடவுளாக அருள் பொழிபவர் நம்முடைய சாயி பகவான். அவர் எங்கு எப்போது பிறந்தார் என்பது இன்று வரை மர்மமான விஷயமாக உள்ளது. அதேபோல் அவருடைய தோற்றம், அவருடைய மொழிகளும், நடவடிக்கைகளும்கூட புதிராகவே இருந்திருப்பதை அவருடைய சத்சரிதத்திலிருந்து நாம் தெறிந்துகொள்ளலாம். அவர் சகலமும் உணர்ந்த பிரம்மஞானி. அவர் மகாசமாதி அடையப்போகும் நாளைகூட இரண்டு வருடங்களுக்கு முன்பாகவே 1916-ம் ஆண்டு உணர்த்தவும் செய்தார். ஆனால், யாரும் அதை உணரவில்லை. 1918-ம் ஆண்டு மங்கலங்கள் நிறைந்த விஜயதசமி நாளில்தான் சாய்பாபா மகா சமாதி அடைந்தார்.

சாயியை நினைத்தாலே நம் துன்பங்கள் நீங்கி மகிழ்ச்சியும் சுபிட்சமும் சூழும் என்பது உண்மை. மண்ணுலகில் அவதரித்த மகான் ஶ்ரீசாயிநாதர். ஶ்ரீதத்தாத்ரேயரின் மறுபிறப்பாக அவதரித்த ஶ்ரீசாயிநாதர் தன்னை நாடிவரும் பக்தர்களின் துன்பங்களை நீக்குவதோடு அவர்களுக்கான நல்வழியையும் காட்டியருளுகிறார். இதற்கு சாயி சத்சரிதத்தில் ஏராளமான சாட்சிகள் உண்டு. ஸ்ரீசாயி மகாசமாதி தினமான விஜயதசமியில் ஆக்டோபர் 5-ம் தேதி புதன்கிழமை அன்று சக்திவிகடனும் துவாரகாமயி ஆத்ம ஞானியர் மையமும் இணைந்து ஸ்ரீ சாயி சங்கல்ப சிறப்பு பூஜையை நடத்த இருக்கிறோம்.

ஸ்ரீசாயி சங்கல்ப பூஜை: ஸ்ரீசாயி மகாசமாதி தினமான விஜயதசமியில் நீங்களும் ஆராதித்து நலம் பெறுங்கள்!

காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ள இந்த மகா ஆராதனை விழாவில் நீங்களும் கலந்து கொண்டு எல்லா நலமும் வளமும் பெற வேண்டுகிறோம். சென்னை புழுதிவாக்கத்தில் அமைந்துள்ளது துவாரகாமாயி ஆத்மஞானியர் மையம். இங்கு ஸ்ரீசாயி மகாசமாதி தினமான விஜயதசமியில் மகாஆராதனைகளும் தீபாராதனையும் நடைபெற உள்ளது. சீரடியில் இருந்து வரும் பாபாவின் திருப்பாதுகை பிரதியும் சந்தான பாபாவும் உங்களுக்கு அருள காத்திருக்கிறார்கள். திருப்பாதுகை அபிஷேகம், மகாஆரத்தி, பஜன், சாயி சரித பாராயணம், சங்கல்ப பூஜைகள், பல்லக்கு உற்சவம் என பல்வேறு ஆராதனைகளும் இந்த விசேஷ விழாவில் நடைபெற உள்ளன. மேலும் 'பாபா மாமி' ரமா சுப்பிரமணியம் ஶ்ரீசாயி நாதனின் மகிமையை விளக்கி அற்புதமான ஓர் உரையும் நடத்த உள்ளார்கள். பங்கு கொள்ளவிருக்கும் பக்தர்களுக்கு நைவேத்தியம், பிரசாதம், அன்னதானமும் அளிக்கப்பட உள்ளது.

சென்னை, புழுதிவாக்கத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பதிவு செய்து கொண்ட நம் வாசகர்கள் பெயர், நட்சத்திரம், பிரார்த்தனையோடு சிறப்பு சங்கல்பம் செய்யப்படும். சாயிநாதர் தாய்க்கு நிகரானவர். ஒரு தாய் தன் குழந்தையை எப்படி ஒடிச்சென்று காக்கிறாளோ, அப்படியே சாயியும் தன் பக்தர்களைக் காப்பார். நம்பிக்கையோடு இந்த மகா ஆராதனையில் கலந்து நீங்கள் விரும்பிய வேண்டுதலை அடையுங்கள். உங்களின் எல்லா விருப்பங்களும் நிறைவேற நாங்களும் வேண்டிக் கொள்கிறோம்.

வாசகர்கள் கவனத்துக்கு:

இந்த ஆராதனையில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (₹301/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஊதி பிரசாதம்+சாயி ரட்சை+பாபா படம்) அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறி முறைப்படி ஹோம வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, ஹோம வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.