தொடர்கள்
திருத்தலங்கள்
திருக்கதைகள்
Published:Updated:

சுதர்சனாஷ்டகம்!

சுதர்சனாஷ்டகம்
பிரீமியம் ஸ்டோரி
News
சுதர்சனாஷ்டகம்

பெருமாளின் பெரும் கருணையால் சகல வரங்களும் ஸித்தியாகும் என்று பாடுகிறார்.

கொள்ளை நோய்கள் இந்த உலகுக்குப் புதிதல்ல. காலம் காலமாகத் தோன்றி மனித இனத்தை அச்சுறுத்தும் நோய்களை எதிர்கொள்வது குறித்து மகான்கள் நமக்கு வழிகாட்டியிருக்கிறார்கள்.

13-ம் நூற்றாண்டில் அவதரித்து வைணவத்துக்குச் சேவை செய்த மகான் ஶ்ரீவேதாந்த தேசிகர். திருமலை திருப்பதியில் எழுந்தருளியிருக்கும் வேங்கடவன் திருக்கோயிலில் ஒலிக்கும் மணியின் அம்சமாக அவதரித்த சுவாமிகள், காலம் முழுவதும் பெருமாளின் பெருமைகளை வடமொழியிலும் தமிழிலும் பாடிக் கொடுத்துள்ளார். அவ்வாறு அவர் அருளிச்செய்த ஸ்தோத்திரங்களில் ஒன்று சுதர்சனாஷ்டகம்.

காஞ்சிபுரம் அருகே இருக்கும் கிராமம் திருப்புட்குழி. ஒருமுறை அங்கு மர்மக் காய்ச்சல் வந்து மக்கள் மடியத் தொடங்கினர். நோயின் தன்மை என்ன என்று அறியமுடியாத நிலையில் அதை வெல்ல வழியறியாத மக்கள் சுவாமிகளைச் சரணடைந்தனர். அப்போது சுவாமிகள் சுதர்சனாஷ்டகம் பாடி மக்களுக்காக ஸ்தோத்திரம் செய்ய நோய் நீங்கியது என்று கூறப்படுகிறது.

பெருமாள் 16 ஆயுதங்களை உடையவர். அவற்றுள் சுதா்ஸனம், சங்கு, நாந்தகம் எனும் வாள், கெளமோதகீ எனும் கதை, சாரங்கம் எனும் வில் ஆகியவை நித்ய சூாிகள் என்று போற்றப் படுவன. அவற்றுள் பிரதா னமாகக் கருதப்படுவது சுதர்சனம். பெருமாள் தன் கரத்தில் ஏந்தியிருக்கும் இந்த ஆயுதம், பக்தர்களின் துயரை முந்திவந்து அழிப்பது. எனவே சுதர்சனரைப் பாடினால் துயர்கள் தீரும் என்பது நம்பிக்கை.

சுதர்சனாஷ்டகம்
சுதர்சனாஷ்டகம்

வேதாந்த தேசிகர் இந்த ஸ்தோத்திரத்தை எட்டு பாடல்களாகப் பாடியுள்ளார். ஒவ்வொரு பாடலின் நிறைவிலும் ஜய ஜய ஶ்ரீசுதர்சனா... ஜய ஜய ஶ்ரீசுதர்சனா... என்று போற்றும் தன்மையில் இந்தப் பாடல்கள் அமைந்துள்ளன. ஒன்பதாவது பாடல் பல ஸ்துதியாக அமைந்துள்ளது. வேதாந்த தேசிகர் இயற்றிய இந்த சுதர்சனாஷ்டகத்தை யார் பாராயணம் செய்கிறார்களோ, அவர்களின் மன விருப்பம் பூர்த்தியாவதோடு, காரியத் தடைகள் நீங்கும். பெருமாளின் பெரும் கருணையால் சகல வரங்களும் ஸித்தியாகும் என்று பாடுகிறார்.

தற்காலத்திலும் நாம் கண்ணுக்குத் தெரியாத காய்ச்சலோடுதான் போராடிக்கொண்டிருக்கிறோம். நம்மைக் காத்துக்கொள்ள வீட்டிலேயே இருக்கும் இந்த வேளையில் தினமும் ஒருமுறையாவது சுதர்சனாஷ்டகத்தைப் பாராயணம் செய்வோம். குறைந்தபட்சம் தினம் 108 ‘ஜய ஜய ஶ்ரீ சுதர்சனா... ஜய ஜய ஶ்ரீ சுதர்சனா...’ என்று சொல்வோம். இதன் மூலம் நம் மனவலிமை அதிகரித்து சகல ஆரோக்கியத்துடனும் வாழ அந்த சுதர்சனாழ்வாரைப் பிரார்த்திப்போம்.